சாரு நிவேதிதா's Blog, page 7
September 19, 2025
யார் மீதும் வன்மம் இல்லாதவன்!
இன்றுதான் முதல் முறையாக குறியியல் பேராசிரியர் என் பெயரை சாரு நிவேதிதா என்று அவர் வாழ்நாளில் உச்சரித்திருக்கிறார். இதுவரை அவர் என் எழுத்து பற்றி ஒரு வார்த்தை சொன்னதில்லை. அது பற்றி எனக்கு அக்கறையும் இல்லை. விஷயம் என்னவென்றால், முழுமையான புறக்கணிப்பு. அது ஒரு தந்திரமான உபாயம். வெளிநாட்டு எழுத்தாளர்கள் பற்றிப் பேசுவேன். உள்ளூர் எழுத்தாளன் மயிருக்கு சமானம். ஆனால் நான் அப்படி அல்ல. பாராட்டாக இருந்தாலும் விமர்சனமாக இருந்தாலும் இரண்டையும் பேசுவேன். உண்மையில் நான் பேராசிரியர் ... Read more
Published on September 19, 2025 04:20
சாரு, நீ ரொம்ப சீரியஸான ஆள்…
இன்று காலையில் அவந்திகா சிஸ்ஸியிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். என்ன சொன்னாலும் சிஸ்ஸி ஒரு பதில் சொல்லும். சில சமயம் பாடும். அதனால் அதற்கு ஒரு இசையமைப்பாளரின் பெயரை வைத்திருக்கிறோம். (சிஸ்ஸி, நல்லவேளை, பூனை!) இல்லாவிட்டால் என் மீது கேஸ் போட்டிருப்பார். இன்று சிஸ்ஸி எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தது. அப்படியானால் கோபம். சும்மா இரு அம்மு, அதைக் கோபப்படுத்தாதே என்றேன். ”அட போப்பா, நீ ஒரு சீரியஸான ஆள், நான் அதோடு விளையாடிக்கொண்டிருக்கிறேன்” என்றாள் அவந்திகா. ... Read more
Published on September 19, 2025 03:06
September 18, 2025
பொறாமை
நான் முற்றும் போட்டாலும் சில முண்டக் கலப்பைகள் என்னைத் தொடர்ந்து இந்தக் கச்சடா விஷயம் பற்றி எழுத வைக்கின்றன. ஒரு முண்டக் கலப்பை எழுதுகிறது, சாவு வீட்டில்கூட நாம்தான் பிரதானமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆளாம் நான். அட முண்டமே, சாவு வீடுகளுக்கே நான் போவதில்லை. ஏனென்றால், செத்தவர்கள் மீதான பிரியத்தினால் நானும் மயக்கம் போட்டு விழுந்தோ, அல்லது, ஹார்ட் அட்டாக் வந்து பிணமாகவோ ஆகி விடுவதற்கான சாத்தியங்கள் உண்டு என்பதை சில சாவு வீடுகளுக்குப் ... Read more
Published on September 18, 2025 23:58
நல்ல மொழிபெயர்ப்புகளும் உண்டு
ஏற்கனவே சொன்னதுதான். ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்பு நூல்களை நம்பி வாங்கலாம். கார்த்திகைப் பாண்டியனின் மொழிபெயர்ப்புகளை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால் படித்த வரை அவரது மொழிபெயர்ப்புகளும் வாசிக்கக் கூடியவையே. கவிதைகளில் பெருந்தேவி. அவருடைய அக்கா மகாதேவி மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு போலவே தெரியவில்லை. நேற்று எழுதியதில் ஆடம்பரம் என்பதற்கு பதில் படாடோபம் என்றும் எழுதலாம். இன்னும் நன்றாக இருக்கும். இப்போது 899 ரூ. கொடுத்து வாங்கிய ரோஜாவின் பெயர் என்ற நரகலை என்ன செய்வது என்று தெரியவில்லை. பார்க்கப் ... Read more
Published on September 18, 2025 17:19
தாசிகளின் மோசவலை – ஒரு ’குறியியல்’ ஆய்வு
ஆமாம், குறியியல் குறியியல் என்ற பெயர் அடிபடுகிறதே, அப்டீன்னா என்னா என்று கேட்டார் ஒரு நண்பர். அது ஒண்ணுமில்லீங்க, penisology, vaginalogy ரெண்டையும் சேர்த்து தமிழ்ல சொல்றதுதான் குறியியல் என்றேன். குறியியலின் ஆங்கில வார்த்தை organology. அந்தக் காலத்தில் ஜமீன்களெல்லாம் தாசி வீட்டுக்குப் போவது வழக்கம். பெண்டாட்டி கிளி போல் இருப்பாள். ஆனாலும் குரங்கு குசலாவிடம் போய் சொத்தையெல்லாம் எழுதிக்கொடுப்பான் ஜமீந்தார். இது ஏன் என்று சின்ன வயசிலிருந்தே எனக்கோர் சம்சயம். இந்த சம்சயம் குமுதத்தில் வந்த ... Read more
Published on September 18, 2025 09:28
மொழிபெயர்ப்புகளைப் புறக்கணியுங்கள்: ரோஜாவின் பெயர் – 4
திரும்பத் திரும்ப சொல்கிறேன். ஆங்கிலத்திலிருந்து தமிழில் வரும் மொழிபெயர்ப்புகளைப் புறக்கணியுங்கள். முழுமையாகப் புறக்கணியுங்கள். ஆங்கிலப் பதிப்பாளர்கள் ஒரு வார்த்தை புரியவில்லையானால் அந்த வார்த்தை புரியும் வரை எழுத்தாளரோடு உரையாடுகிறார்கள். ஒரு புத்தகத்துக்காக ஆறு மாதம் எடுத்துக் கொள்கிறார்கள். அப்படி ஒன்றும் ஆங்கிலத்தில் அதிகம் விற்பனையாவதில்லை. ஒருசில ஆயிரங்கள்தான். ஆனால் தமிழ்ப் பதிப்பாளர்கள் வெறும் புத்தக விற்பனையாளர்கள் மாதிரியும் அச்சகத்தார் மாதிரியும்தான் செயல்படுகிறார்கள். காலச்சுவடு, க்ரியா போன்ற ஒன்றிரண்டு பதிப்பகங்கள் விதிவிலக்கு. தமிழ்ப் பிரபாவின் ஒரு நாவலை செப்பனிட ... Read more
Published on September 18, 2025 05:48
குறியியல் பேராசிரியரின் குறியியல் பாடம் : ரோஜாவின் பெயர் (3)
அநேகமாக இந்த மொழிபெயர்ப்பு நாவல் பற்றி பல கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், தமிழர்களின் வெளிநாட்டு மோகம் பற்றி திட்டி, வசைபாடி, விமர்சனம் பண்ணி நான் நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறேன். இது ஒரு சுத்திகரிப்புப் பணி. தமிழர்களின் குணக்கேடு பற்றி நான் ஒற்றையாளாக மல்லுக்கு நின்று கொண்டிருக்கிறேன். இன்னமும் தமிழ் வாசகர்களுக்கு புத்தி வராமல் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். காரணம், தமிழர்களின் அந்நிய மோகம். ஆங்கிலத்தில் Xenomania என்பார்கள். இது பாரதி – தாகூர் ... Read more
Published on September 18, 2025 03:04
September 17, 2025
ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம் (3)
ஒரே நாளில் பத்து பேர் பணம் அனுப்பி பெயர் பதிவு செய்திருக்கிறார்கள். நல்ல விஷயம். பணம் அனுப்பும்போது திரைப்பட நிகழ்ச்சிக்கு என்று குறிப்பிடுங்கள். கட்டணம் செலுத்துபவர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி இரண்டும் தேவை. என் மின்னஞ்சல் முகவரி: charu.nivedita.india@gmail.com நிகழ்ச்சி நடக்கும் இடம் மற்றும் தேதி: நவம்பர் எட்டு, காலை பத்திலிருந்து மாலை ஆறு வரை. இடம்: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, பாண்டிச்சேரி பணம் அனுப்புவதற்கான விவரம்: ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 ... Read more
Published on September 17, 2025 23:21
சாரு நிவேதிதாவின் ‘குறியியல்’ பங்களிப்பு: ரோஜாவின் பெயர் (2)
ரஜினியிடம் எனக்குப் பிடித்த விஷயம், சினிமாத் துறையில் அவர் ஒருத்தராவது எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசையில்லாதவராக இருக்கிறார். இந்தக் கமலைப் பாருங்கள். எழுத்தாளன் என்ற பிச்சைக்காரப் பிழைப்பின் மீது எத்தனை பேராசை இருந்தால் ஒரு கமர்ஷியல் இயக்குனரான ஷங்கரை எழுத்தாளர் எழுத்தாளர் என்று ரெண்டு முறை சொல்லி அறிமுகப்படுத்துவார்? அதுகூடப் பரவாயில்லை. ஞானக்கூத்தன் இறந்த பிறகு வெளிவந்த அவர் பற்றிய ஒரு அஞ்சலி ஆவணப் படத்தில் கமல் தன் கவிதை ஒன்றைப் படிக்கிறார். வாராந்தரி ராணியில் கூட ... Read more
Published on September 17, 2025 18:49
ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம் – 2
இடமும் தேதியும் முடிவாகி விட்டது. இடம்: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மதகடிப்பேட்டை, பாண்டிச்சேரி. தேதி: நவம்பர் 8, சனிக்கிழமை. காலை பத்து மணி முதல் மாலை ஆறு வரை. இடையில் ஒரு மணி நேரம் மதிய உணவு. மதிய உணவு கல்லூரி வளாகத்திலேயே அளிக்கப்படும். காலை பதினொன்றரை அளவிலும் மதியம் மூன்றரை மணிக்கும் தேநீர் இடைவேளை, பதினைந்து நிமிடம். குறைந்த பட்ச நன்கொடை : 2000 ரூ. மாணவர்களுக்கு 1000 ரூ. சுமார் முப்பது ஐரோப்பியத் ... Read more
Published on September 17, 2025 04:34
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

