சாரு நிவேதிதா's Blog, page 2
October 7, 2025
ஏன் அழைத்தாய்?
ஒரு பின்மாலைப் போதுதொலைபேசியில் அழைத்தேன்அந்த நேரத்தில் அழைத்ததில்லைஏன் அழைத்தாய் என்றாள்குரலில் ஒரு மெல்லிய ஆர்வம் ஒளிர்ந்தது ஏன் சுவாசிக்கிறேன்?காற்று ஏன் என் உடலில் கவிதையாகிறது?ஏன் எழுதுகிறேன்?வார்த்தைகள் ஏன் நதியெனப் பாய்கின்றன?ஏன் வாசிக்கிறேன்?ஏன் ஒவ்வொரு பக்கமும் உயிரின் ரகசியத்தைத் திறக்கிறது? ஏன் விதவிதமாய்த் தேடிஉணவில் மண்ணின் மணத்தை ருசிக்கிறேன்?ஏன் அருவியில் நனைந்துநீரின் அணைப்பில் மூழ்குகிறேன்?ஏன் கடலைப் பார்க்கையில்மனம் நீலத்தின் ஆழத்தில் துள்ளுகிறது? ஏன் நிலவைக் காண்கையில்மனம் உன்மத்தமாகி அலைகிறது?ஏன் தென்றல் மென்மையாய்என் கனவுகளைத் தொட்டுத் தழுவுகிறது?ஏன் சூரியனைக் கண்டால்வணங்கி ... Read more
Published on October 07, 2025 10:08
ஏழேழு ஜென்மத்துக்கும் தமிழ் எழுத்தாளனாய்ப் பிறக்க வேண்டும்!
முந்தாநாள் வரை அடுத்த ஜென்மத்தில் தமிழ் எழுத்தாளனாக மட்டும் பிறந்து விடவே கூடாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த நினைப்பை நேற்று வந்த ஒரு கடிதம் மாற்றி விட்டது. முழுக் கடிதத்தையும் வெளியிடத் தயங்குகிறேன். அதில் உள்ள ஒரு பகுதியை மட்டும் வெளியிடுகிறேன். வெளியிடாமல் இருக்க முடியவில்லை. இப்படி ஒரு கடிதத்துக்காக நான் வாழ்நாள் முழுவதும் கூலி இல்லாமல் எழுதலாம். நோபல் பரிசோ வேறு எந்தப் பரிசோ கிடைக்காமல் போகலாம். ஒரு வீசா வாங்குவதற்குக் கூட எழுத்தாளன் என்று ... Read more
Published on October 07, 2025 08:11
ஆப்பம் தேங்காப்பால் (2)
நாகூரில் சேதுராமய்யர் ஹோட்டல் இருந்தது. சேதுராமய்யர் இறந்ததும் அவர் மகன் ஊரெல்லாம் கடன்பட்டு கடையை மூடி விட்டான். பல ஆண்டுகள் கழித்து நான் போய்ப் பார்த்தபோது கடை மூடிய விஷயமும் மற்ற விவரங்களும் தெரிந்தன. அந்த ஓட்டலில் ஒரு தேங்காச் சட்னி கொடுப்பார்கள் பாருங்கள், தெய்வம். அதே மாதிரி தேங்காச் சட்னி ஸ்ரீரங்கம் கதிரவன் ஓட்டலில்தான் சாப்பிட்டேன். எல்லாம் முப்பது நாற்பது ஆண்டுகள் இருக்கும். அதற்குப் பிறகு அப்படி ஒரு தேங்காச் சட்னியை இன்று வரை சாப்பிட்டதில்லை ... Read more
Published on October 07, 2025 07:53
என்னை நேரில் சந்திக்கும் நண்பர்களுக்கு… (2)
என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார், அவந்திகா இல்லை என்றால், நான் குடித்தே செத்து விடுவேன் என்று. இப்படி ஒரு பைத்தியக்காரத்தனம் வேறு எதுவும் இல்லை என்று நினைத்துக் கொள்வேன். சொல்ல மாட்டேன். அவந்திகா ஒரு மூணு மாதம் மகன் வீட்டுக்குச் சென்றாள். வாரம் இரண்டு முறை குடித்தேன். வைன். குடித்த நாட்களில் நிறைய எழுதினேன். அதனால்தான் சொன்னேன், சுயக்கட்டுப்பாட்டில் நான் ஒரு கடவுள் என்று. சும்மா ஒரு பேச்சுக்கு அடித்து விடவில்லை. எனக்கே ஒரு ... Read more
Published on October 07, 2025 06:08
என்னை நேரில் சந்திக்கும் நண்பர்களுக்கு…
நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன். மாதத்தில் நான்கு நாட்கள் நான் சென்னையில் நான் வசிக்கும் தாலிபான் கொட்டடியிலிருந்து வெளியூர் சென்று விடுகிறேன். கோவா, பெங்களூர், ஏற்காடு, ஊட்டி இப்படி. இப்போது, பவானி. என்னை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால் என்னுடைய ஓரிரு நூல்களையாவது வாசித்திருக்க வேண்டும். நான் ஒரு ப்ளாகில் எழுதுகிறேன் என்ற விஷயமாவது தெரிந்திருக்க வேண்டும். நான் ஏன் சினிமாவில் எழுதுவதில்லை என்றும், ஏன் என்னிடம் இளையராஜா பற்றிப் பேசக் கூடாது என்றும் புரிந்திருக்க வேண்டும். ... Read more
Published on October 07, 2025 05:36
ஆப்பம், தேங்காப்பால்
ஸ்ரீ என்ற பெயரோடு எனக்குக் கொஞ்சம் நெருக்கமான தொடர்பு இருப்பதாக உணர்கிறேன். ஸ்ரீனியோடு பதினைந்து ஆண்டு நட்பு பொதுவாக எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தாங்காது. ஸ்ரீனியோடு ஆயுள் வரை தாங்கும். ஸ்ரீராமும் அப்படியே. இப்போது ஸ்ரீ. எப்போதும் ஸ்ரீ. தோழியும் அவள் கணவரும் என்னை ரெய்ன் ட்ரீ ஓட்டலில் சந்தித்தார்கள். எனக்குப் பிடிக்குமென்று ஜிலேபியும், அவந்திகாவுக்குப் பிடிக்குமென்று ஜாங்க்ரியும் வாங்கி வந்தார்கள். ஜாங்க்ரி கால் கிலோ, ஜிலேபி அரை கிலோ. எனக்கு ஷுகர் பிரச்சினையெல்லாம் எதுவும் ... Read more
Published on October 07, 2025 04:25
October 6, 2025
ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம் – 1
வரும் நவம்பர் எட்டாம் தேதி பாண்டிச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை ஐரோப்பிய சினிமா பற்றி உரையாற்ற இருக்கிறேன். பதினொன்றரை மணிக்குத் தேநீர் இடைவேளை. ஒரு மணிக்கு மதிய உணவு. மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. அதற்காக நீங்கள் சிரமப்பட வேண்டாம். மூன்றரை மணிக்குத் தேநீர் இடைவேளை. ஒன்றரை மணி நேரத்துக்கு ஒருமுறை வாசகர்களுடன் கலந்துரையாடல் நடக்கும். கேள்விகளுக்குப் பதில் தருவேன். ஒரே ஒரு ... Read more
Published on October 06, 2025 00:42
ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம்
வரும் நவம்பர் எட்டாம் தேதி பாண்டிச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை ஐரோப்பிய சினிமா பற்றி உரையாற்ற இருக்கிறேன். பதினொன்றரை மணிக்குத் தேநீர் இடைவேளை. ஒரு மணிக்கு மதிய உணவு. மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. அதற்காக நீங்கள் சிரமப்பட வேண்டாம். மூன்றரை மணிக்குத் தேநீர் இடைவேளை. ஒன்றரை மணி நேரத்துக்கு ஒருமுறை வாசகர்களுடன் கலந்துரையாடல் நடக்கும். கேள்விகளுக்குப் பதில் தருவேன். ஒரே ஒரு ... Read more
Published on October 06, 2025 00:42
எதிர்மறை அதிர்வுகள் தேவையில்லை
I no longer have patience for certain things, not because I’ve become arrogant, but simply because I reached a point in my life where I do not want to waste more time with what displeases me or hurts me. I have no patience for cynicism, excessive criticism, and demands of any nature. I lost the ... Read more
Published on October 06, 2025 00:12
October 5, 2025
இலக்கியமும் ஜனரஞ்சக எழுத்தும்
சமீபத்தில் பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரு கருத்து சொல்லியிருக்கிறார். ”சாகித்ய அகாதமி விருதை ஏன் ராஜேஷ்குமாருக்குக் கொடுக்கக் கூடாது?” அதற்கு ராஜேஷ்குமார் பிரபாகர் இப்படிச் சொன்னதே எனக்கு அந்த விருது கிடைத்து விட்டது போல் இருக்கிறது என்று நன்றி கூறியிருக்கிறார். உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தக் கேலிக்கூத்து நடக்கும். உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இலக்கியத்துக்கும் ஜனரஞ்சக எழுத்துக்கும் வித்தியாசமே தெரியாமல் இருப்பார்கள் மக்களும் ஜனரஞ்சக எழுத்து உற்பத்தியாளர்களும். வித்தியாசமே தெரியவில்லை. சாகித்ய அகாதமி விருது இலக்கியத்துக்கு அளிக்கப்படுவது, வணிக/ஜனரஞ்சக ... Read more
Published on October 05, 2025 10:23
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

