சாரு நிவேதிதா's Blog, page 9
September 10, 2025
தியாகராஜாவில் ஸ்ருங்கார ரஸம் உண்டா?
தியகராஜர் பிராமண வித்வான்களின் வழிபாட்டுக்குரியவர். அவரை ஏடாகூடமாக, ஸ்ருங்கார பாவனை கலந்து எதாவது எழதப் போய் அதை இந்த மயிலை மாமாக்கள் ஏடாகூடமாக அர்த்தம் பண்ணிண்டு எதிர்க்க, உங்களுக்கு ஆதரவாக டி. எம் க்ருஷ்ணா, இந்து ராம் இத்யாதிகள் வந்தால் ஒரே அதகளம் ஆகலாம். பார்த்துக் கொள்ளுங்கள். பாலசுப்ரமணியன். டியர் பாலா சார், என் தியாகராஜாவில் எந்த ஸ்ருங்கார ரஸமும் இராது. தியாகராஜர் ஆதி சங்கரர் போன்று கவித்துவத்தின் உச்சம் கண்டவர் இல்லை. தியாகராஜரிடம் செயல்படுவது முழுக்க ... Read more
Published on September 10, 2025 07:24
துவேஷத்தின் நிழல்
அன்புத் தோழிக்கு, இவர் ஏன் இப்படி வரிந்து வரிந்து இந்தப் பிரச்சினை பற்றி எழுதிக்கொண்டேயிருக்கிறார் என்று நினைக்காதே. நான் வாங்கும் கெட்ட பெயர் பற்றித் தொடர்ந்து யோசிக்கும்போது என் வாழ்க்கை வரலாறே என் ஞாபகத்தில் நிழலாடுகிறது. இரண்டே சம்பவங்களைக் குறிப்பிட்டு இந்த soliloquyயை முடித்துக் கொள்கிறேன். 1.பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் காலையில் டி.எம். கிருஷ்ணாவுக்கு ஃபோன் பண்ணினேன். அப்போது கிருஷ்ணா பற்றி நான் ஒரு வார்த்தை கூட எழுதியதில்லை. ஆனால் அவரைப் பிடிக்கும். ஒரு ... Read more
Published on September 10, 2025 03:01
ஒரு அடிமுட்டாளின் விண்ணப்பம்!
சென்ற கட்டுரையில் என்னை உடல் கேலி செய்பவர்கள் அனைவருமே பிராமணர்களாக இருக்கிறார்கள், என் மனைவி உட்பட என்று எழுதியிருந்தேன். பிராமண நண்பர்கள் வருத்தப்படக் கூடாது. அபிராமணர் ஒருத்தர் கூட எனக்கு புத்திமதி சொல்லவோ, என்னை உடல்கேலி செய்யவோ முயற்சி செய்ததில்லை. எனக்கு புத்திமதி சொல்பவர் அனைவரும் பிராமணர். உடல்கேலியில் ஈடுபடுவோர் அனைவரும் பிராமணர். ஏன் என்றுதான் கேட்கிறேன்? இப்போது நான் தியாகராஜா நாவல் எழுதுவதைக் கிண்டல் செய்தவர் கூட பிராமணர்தான். மட்டுமல்லாமல் ஊரே கொண்டாடும் நல்லவர். என்னிடம் ... Read more
Published on September 10, 2025 00:30
September 9, 2025
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே!
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேஉடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே திருமூலரின் மூன்றாம் தந்திரம், 13-ஆம் பிரிவில் (காயசித்தி உபாயம்) உள்ள பாடல் எண் 724 உடம்பை வளர்ப்பது சாதாரண காரியம்தான். அதே சமயம் சாதாரண காரியமும் அல்ல. இடைவிடாமல் உடம்பைப் பராமரித்துக்கொண்டே இருக்க வேண்டும். உங்களிடம் உள்ள ஒரு வாகனத்தைப் பராமரிப்பது போன்றதுதான் இது. நம் உடலும் ஒரு வாகனம்தான். இதற்கு நான் இரண்டு பேரை உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ... Read more
Published on September 09, 2025 23:39
பெரிய பிழை
ஒரு வாசகி கடிதம் எழுதியிருக்கிறார். சென்ற கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்தது Culotte இல்லையாம். அதன் பெயர் wrap skirt. சுருக்கமாக, wrap என்று சொன்னால் போதும். Draped skirt என்றும் ஒன்று உள்ளது. ஆனால் அது வேறு; wrap வேறு. இரண்டுக்கும் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது. நீங்களே கள ஆய்வு செய்து தெரிந்து கொள்ளுங்கள். பெண்களின் ஆடை விஷயத்தில் இது போன்ற பிழைகளை இதுவரை செய்ததில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பே தாங், ஜி ஸ்ட்ரிங் பற்றியெல்லாம் எழுதி ... Read more
Published on September 09, 2025 21:41
குடும்பம், அன்பு, கெட்ட பெயர் (3)
இனிமேல் யாரும் என்னிடம் “தனிப்பட்ட முறையில் சொன்னதைப் பொதுவெளியில் போட்டு எழுதி என்னை அசிங்கப்படுத்தி விட்டீர்கள்” என்று சொல்லக் கூடாது. என் மகன் என்னிடம் தனிப்பட்ட முறையில்தான் கடன் வாங்கினான். திருப்பிக் கொடுக்கவில்லை. பொதுவெளியில்தான் எழுத வேண்டியிருந்தது. என் ஆடை அலங்காரத்தைக் கிண்டல் செய்வது உடல் கேலியை விட மோசமான விஷயம் என்று ஏன் உங்களுக்குத் தெரிவதில்லை? அப்படி நீங்கள் விமர்சிக்கலாம். ஆனால் நான் அது பற்றி எழுதக் கூடாதா? புவனேஸ்வரி சமீபத்தில் சொன்னார், என்னையும் நண்பரையும் ... Read more
Published on September 09, 2025 18:49
குடும்பம்: அன்பு: கெட்ட பெயர் (2)
என் எழுத்தை விட என் பேச்சையும் உரையாடலையும்தான் நான் பெரிதாக நினைக்கிறேன். இது குறித்து ரொலாந் பார்த்தின் வாழ்க்கை வரலாற்றை ஒரு பெண் எழுதியது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன். நினைவு கூருங்கள். நான் எழுதியது பத்து சதம்தான், மற்றவைகளை நான் பேசியிருக்கிறேன் என்கிறார் பார்த். அதை நான் படிக்கும் முன்பே அப்படி நான் பலமுறை சொல்லி வந்திருக்கிறேன். எழுத்தில் எல்லாவற்றையும் கொண்டு வர முடியாது. இதற்கு நல்ல உதாரணம் சாக்ரடீஸ். சாக்ரடீஸ் தன் சிந்தனைகளை எழுதவில்லை. அவர் வாய்மொழியாகவே ... Read more
Published on September 09, 2025 07:34
குடும்பம்: அன்பு: கெட்ட பெயர்
அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு என்ற என் நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அதற்காக அந்த நாவலை செப்பனிட்டுக்கொண்டிருந்தபோது திரும்பவும் வாசித்துத் திளைத்தேன். அன்பு நாவல் ஒரு குடும்பக் கதை. சென்ற வாரம் நானும் ஸ்ரீயும் பேசிக்கொண்டிருந்த போது நான் சில குடும்பக் கதைகள் சொன்னேன். சொல்லி முடித்ததும் ஸ்ரீ, ஒருவித குற்ற உணர்ச்சியுடன், “ஒரு எழுத்தாளனைப் போய் குடும்பக் கதைகள் பேச வைத்து விட்டேனே?” என வருத்தப்பட்டாள். அதற்குள் எனக்கு பரோல் நேரம் ... Read more
Published on September 09, 2025 04:12
September 4, 2025
September 2, 2025
நம்ப முடியாத கதை
ரிஷியிடம் சஞ்ஜனாகொஞ்சல் வார்த்தை சொன்னதில்லைலவ் யூ, மிஸ் யூவும் வந்ததில்லைஆனாலும்அவனுக்காக எதையும் செய்பவள்இதுவரை அவன் ஏழெட்டுகாதல்களைக் கடந்து வந்திருக்கிறான்ஒருத்தியும் கொஞ்சல் வார்த்தைசொன்னதில்லையாதலால்அதில் அவனுக்கு ஆச்சரியமுமில்லைஆனால்எல்லா காதலன்களையும் போல்அவன் சொல்லியிருக்கிறான்கொஞ்சல் வார்த்தை கேட்காததில்அவனுக்குத் தீராத ஓர் ஏக்கமுண்டு ஒருநாள்சஞ்ஜனா ஒரு பிழை செய்தாள்அறியாமல் செய்த பிழைரிஷி அந்தப் பிழையைபிழையாகச் சுட்டிக்காட்டினான்அவனுக்கும் அது பிழையெனத் தெரியாதுபோயிற்றுவருத்தம் தெரிவிப்பாளெனஎதிர்பார்த்தான்அவளோ டேய் லூசுக்கூதியெனத்தொடங்கி ஒரு ஓத்தாம்பாட்டு விட்டாள் வாழ்வில் முதல்முதலாய்க் கிடைத்தகொஞ்சல் வார்த்தையெனமகிழ்ந்தான்சஞ்ஜனாவை விடநாற்பத்தைந்து வயது மூத்தரிஷி
Published on September 02, 2025 23:16
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

