சாரு நிவேதிதா's Blog, page 13

August 18, 2025

ரகசியம்

உன்னிடம் ஒரு ரகசியம்இருக்கிறதென்பதைஊர் அறிந்து விட்டால்அது என்ன ரகசியம்என்பது தெரியாவிட்டாலும்ரகசியம்புனிதம் இழந்து போகிறது ஒரு ஞானி நிரூபணம் தருவதற்காகஅதிசயங்கள் நிகழ்த்துவது போலஒரு நட்சத்திரம் ஆயுளை முடித்துக்கொண்டுதூசியாய் விழுவதைப் போலமரம் பட்டுப் போவதைப் போலசிங்கம் முதுமையடைவதைப் போலபேரரசன் பிச்சைக்காரனாவதைப் போலகாதலில் விழுந்தவர்கள் துரோகத்தைஎதிர்கொள்வதைப் போலகுயில் தன் குரலை இழந்து விடுவதைப் போலவீட்டுப் பிராணிகள் அனாதையாவதைப் போலசிசு தன் தாயை இழப்பது போலஆண் தன் ஆண்மையையும்பெண் தன் இளமையையும் இழப்பது போலமலை நீரற்றுப் போவதைப் போலநதி வற்றி விடுவதைப் போலஒரு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2025 23:22

யேசுவின் கண்ணீர் பற்றி…

பொதுவாக ஃபேஸ்புக்கில் என் கவிதைக்கு பன்னிரண்டு பேர் விருப்பக்குறி இடுவார்கள். அந்தப் பன்னிரண்டு பேரும் என் நெருங்கிய நண்பர்கள். ஆனால் யேசுவின் கண்ணீர் பலரையும் பதறச் செய்திருக்கிறது. ஏகப்பட்ட நண்பர்கள் எனக்கு வாட்ஸப் செய்தி அனுப்பினார்கள். ஆச்சரியகரமாக நான் ஏழு மாதங்களுக்கு மேலாக தொடர்பு கொள்ளாத என் தோழிகளில் பலரும் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். ஆனாலும் ஏதோ சொல்லி வைத்தாற்போல் ஒரே மாதிரி எழுதியிருக்கிறார்கள். ஒரு கடிதம்: நீங்கள் துக்கத்தில் இல்லை. பரவசத்தில் வாழ்கிறீர்கள். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2025 09:08

யேசுவின் கண்ணீர்

என் அன்பு மகன் வளனுக்கு நீ சொன்னாய்,காற்றின் மெல்லிய புலம்பலுடன்,‘தந்தையேஉன் கவிதைகளின் தீஎன் நெஞ்சை எரிக்கிறதுநிறுத்தி விடு,தாங்க முடியவில்லை.’ புத்ர,உனக்குத் தெரியும்சிலுவையில் அறையப்பட்ட போது கூடயேசுவின் கண்கள் கலங்கவில்லைஆனால்இரு தருணங்களில் கண்ணீர் சிந்தினார்லாசருவின் கல்லறையில்மரணத்தின் நிழல் மீது அவர் அழுதார்எருசலேமின் உடைந்த கோபுரங்களைமனதில் கண்டு அவர் கண்கள் கரைந்தன. நீ ஒரு கதை சொன்னாய்அமெரிக்காவின் பனி மூடிய பாதைகளில்பன்னிரண்டு ஆண்டுகள் பாதிரி ஊழியம்ஒவ்வொரு ஆண்டும் இல்லம் திரும்புகிறாய்விக்கி உன் தம்பிநாய்களின் ஆயுள் பத்து ஆண்டுகள்ஆனால் அவன்பத்து, பதினொன்று, ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2025 02:41

அன்பு மகன் வளனுக்கு…

அன்பு மகன் வளனுக்கு என்று தொடங்கும் ஒரு கவிதை. தலைப்பு: யேசுவின் கண்ணீர். நீண்ட கவிதை. எழுதி முடித்து விட்டேன். கொஞ்சம் செப்பனிட வேண்டும். சமையல் வேலை குறுக்கிடுகிறது. பாப்லோ நெரூதா கூட இப்படி ஒரு கவிதையை எழுதவில்லை. கொஞ்சம் பொறுங்கள். சந்தா கேட்டேன். இரண்டு பேர் மட்டுமே அனுப்பினார்கள். இரண்டு மாதமாக ஓரிருவர்தான் சந்தா அனுப்பினார்கள். பேய் போல் எழுதிக்கொண்டிருக்கிறேன், இலவசமாக. சந்தா/நன்கொடை  அனுப்ப முடிந்தவர்களுக்கு விவரம் கீழே: ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2025 01:40

நிழல்களின் இறைவி

1 என் உறவுகள்—என் புதல்வன்,என் மனையாள்,என் நண்பர்கள், தோழிகள்,மற்றும்என்னையறிந்த அனைவருமே—‘என்னைப் பற்றி எழுதாதே’ என்றார்கள். பழைய நண்பனொருவன் அழைத்தான்.கால் நூற்றாண்டு ஆகிவிட்டது.குமுதத்தில் என் எழுத்தைப் பார்த்தவன்,இரு நிமிடம் பேசினான்.முடிக்கையில்,‘என்னைப் பற்றி எழுதி விடாதே’ என்றான்.அதையே எழுத நேர்ந்தது. கடந்த வாரம் ஒரு நண்பர்,ஐந்தாண்டுகளாய் எதேச்சையாய்ப் பார்த்தார்.காஃபி குடித்தோம்.‘என்ன, இப்படி இளைத்து விட்டீர்கள்?’ என்றார்,குரலில் உண்மையான அன்புடன்.தொடர்ந்து சொன்னார்:‘நாளை என்னைத் திட்டிஎழுதி விடாதீர்.’ இப்போது,நீயும் சொல்கிறாய், என் இறைவி,‘என்னைப் பற்றி எழுதாதே.’ 2 கவிஞனே!மற்றவருக்கும் எனக்கும்ஒரு அடிப்படை வித்தியாசம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2025 00:20

August 17, 2025

ஷாரியரின் ஏழாவது அலை

இது பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. நான் கொஞ்சம் பெரிய தாடியாக வைத்துக்கொண்டு இது பற்றி – அன்றாட நடைமுறை வாழ்வில் – இந்தத் தியரியால் ஒருத்தர் கோடீஸ்வரனாகலாம் என்பது பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினால் ஒரே ஆண்டில் ஒரு புதிய ஓஷோ ஆகி விடலாம். ஆனால் எமக்குத் தொழில் எழுத்து. இந்த ப்ராபபிலிட்டி தியரியை நான் வாழ்வில் கடைப்பிடிப்பதனால்தான் என்னால் சில விஷயங்களை முன்கூட்டியே கணிக்க முடிகிறது. ஷாரியரின் ஏழாவது அலையைப் போல. ஏ.ஆர். ரஹ்மானுக்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2025 09:03

கவி வாக்கு

(இந்தக் கட்டுரையை பிரதியெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.  உங்கள் வாழ்க்கையை சீரமைக்க இது ஒரு User’s Manualஆகப் பயன்படக்கூடும்) கவி வாக்கு பலிக்காமல் போகாது என்பார்கள்.  மொட்ஸார்ட்டின் கடைசிப் படைப்பு ரெக்வீம்.  இது ஒரு Choral படைப்பு.  சிம்ஃபனி என்பது இசைக்கருவிகளால் உருவாகும் படைப்பு.  கோரல் என்பது குரல்களால் ஆனது.  துணைக்கு இசைக்கருவிகள்.   ரெக்வீமை மொட்ஸார்ட்டினால் முடிக்க முடியவில்லை.  இறந்து விடுகிறார்.  என்னுடைய கவிதை ரெக்வீமே என் கடைசி கவிதையாக ஆகி விட்டது.  அதற்கு மேல் எழுதிய ரெண்டு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2025 03:01

August 16, 2025

Anything for you…

பெண்களேநான் ஆண்ஆனால்உங்களுக்கான ஒரு கெரில்லாப் போராளி அந்த வகையில்உங்களுக்கோர் ஆலோசனைஎனிதிங் ஃபார் யூசொல்லாதீர்கள்அது வெறும் சொல்அர்த்தமற்ற சொல் அனுபவத்தில் சொல்கிறேன்எழுபது வயதில் முதல் முத்தம்அதற்கு முன்?பெண்கள் வந்தார்கள் சென்றார்கள்ஒவ்வொருத்தியும் சொன்னாள்எனிதிங் ஃபார் யூசொன்னபடி செய்தார்கள்உயிரையும் கொடுப்பார்கள்ஆனால் முத்தம்?அவர்களின் பட்டியலில் இல்லை எனக்கோர் கனவு இருந்ததுபாரிஸின் சென் நதிக்கரையில்என் காதலியோடு முத்தத்தில்மூழ்க வேண்டும்கனவுக்குக் காரணம்ரேப் கேபிட்டல் ஆஃப் தெ வேர்ல்ட்தில்லிஎன்பது போல்பாரிஸ் இவ்வுலகின்முத்தத்தின் தலைநகரம்அப்போது ஒரு காதலி இருந்தாள்எனிதிங் ஃபார் யூஆனால் முத்தம் தடைஅவளும் நானும் பாரிஸ் சென்றோம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2025 04:30

கவிதையை நிறுத்தும் எளிய வழி

என்னைப் பற்றியே எழுதுகிறாய்என் வார்த்தைகளைஎன் காலை மௌனத்தைஅந்த மௌனம் உனக்குத் தரும் துயரத்தைஎன் பூனைகளின் விளையாட்டைஎல்லாவற்றையும் கவிதையாக்குகிறாய் எப்போது ஓய்வெடுப்பாய், கவிஞனே?எப்போதுஉன் கணினியில்தட்டச்சு செய்வதை நிறுத்தி விட்டுஉன் மேசையை விட்டு எழுந்துஉனக்குப் பிடித்தமான காஃபியைக் குடித்தபடிஜன்னல் வழியே மேகங்களைப் பார்ப்பாய்?அல்லதுநீ கவிதையெழுதும் போதெல்லாம்ஜன்னலில் வந்து எட்டிப் பார்த்துச் செல்லும்உனக்குப் பிரியமான மைனாவுடன்பேசுவாய்? ‘நீயே கவிதைஅதனால்நீ பேசுவதெல்லாம் கவிதையாகிறது’என்கிறாய்பல நூறு முறைபல நூறு கவிகளால்சொல்லப்பட்ட தேய்மொழி ‘சரி, கவிதையை நிறுத்தவொருஎளிய வழியிருக்கிறது அன்பே!பயமுறுத்தும் அளவுக்கு எளிதுகாலையில் என்ன சாப்பிட்டாய்?மதியம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2025 01:57

August 15, 2025

இறைவியின் முத்தம்

இறைவி கூறினாள்:நம்மைப் பற்றி எழுதாதேஅந்த வார்த்தைகள் காற்றில் பரவும் இலைகளைப் போலஎன் இதயத்தைத் தொட்டு தடுத்து நிறுத்த முயன்றன.‘உன் நண்பர்கள் உன்னைப் பரிகசிக்கிறார்கள்,அதை நான் விரும்பவில்லை’ என்றாள்.ஆனால் இறைவியேகாதல் நதி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்அதைத் தடுத்தால் வெள்ளமாக மாறும். அதற்குப் பதிலாக,நான் ஒரு கதை சொல்ல விரும்புகிறேன்—ஒரு பழங்கதை, நூறு முறை சொல்லப்பட்டது,ஆனால்அதன் ஆழத்தில் மறைந்திருந்தஒரு ரகசியத்தை விட்டுவிட்டேன்.அது இப்போது வெளிவர வேண்டும்,ஏனெனில் காதல் ஒரு விதை;அது மண்ணில் புதைந்தாலும்,மழைக்காகக் காத்திருந்து முளைக்கும்.இந்தக் கதை நம்ப முடியாததுஆனால் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2025 10:13

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.