சாரு நிவேதிதா's Blog, page 11

August 27, 2025

நான்தான் ஔரங்ஸேப் – மலையாளத்தில் – றியாஸ் முஹம்மத்

நான்தான் ஔரங்ஸேப் நாவலை றியாஸ் முஹம்மத் மலையாளத்தில் மொழிபெயர்த்து முடித்து விட்டார். ஒரு வாக்கியத்தைக் கூட நீக்கவில்லை. அது ஒரு பெரிய மகிழ்ச்சி. நீளம் கருதி அடுத்த மொழிக்குப் போகும்போது சுருக்கி விடுவது ஆங்கிலத்தில் ஒரு கேடு கெட்ட விஷயமாக இருந்து வருகிறது. ஆங்கிலத்தில் வந்த மொழிபெயர்ப்பு மூல நூலில் மூன்றில் ஒரு பகுதிதான். ராஸ லீலாவில் அந்த ஆபத்து நடக்கவே கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். ஆனால் எக்ஸைலை கொஞ்சம் சுருக்கியிருக்க வேண்டும். அது அடுத்த ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 27, 2025 00:28

August 26, 2025

பிரபஞ்ச லயம் – 2 (தினை விதைத்தால் தினை)

தகப்பனின் வளர்ப்பு மகன் அவன்.  ஆனாலும் அவனை தகப்பன் ஒருநாளும் வளர்ப்பு மகனென நினைத்ததில்லை.  மகன் மரீன் எஞ்ஜினியரிங் படிக்கிறான்.  இரண்டாம் ஆண்டு கட்டணம் கட்ட காசு இல்லை.  அம்மா மகனிடம் சொன்னாள்.  படிப்பைப் பாதியில் நிறுத்தி விடலாம்.  இங்கேயே சென்னையில் ஏதாவது ஒரு கல்லூரியில் பி.காம் மாதிரி ஒரு படிப்பில் சேர்ந்து கொள்.  அப்போது தகப்பன் விருப்பு ஓய்வு பெற்றதால் இரண்டரை லட்சம் கிடைத்தது.  தகப்பனைப் பரிசோதித்த மருத்துவர் உங்களுக்கு இன்னும் ஆறு மாதத்தில் ஹார்ட் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2025 09:26

பிரபஞ்ச லயம் – 2 (திணை விதைத்தால் திணை)

தகப்பனின் வளர்ப்பு மகன் அவன்.  ஆனாலும் அவனை தகப்பன் ஒருநாளும் வளர்ப்பு மகனென நினைத்ததில்லை.  மகன் மரீன் எஞ்ஜினியரிங் படிக்கிறான்.  இரண்டாம் ஆண்டு கட்டணம் கட்ட காசு இல்லை.  அம்மா மகனிடம் சொன்னாள்.  படிப்பைப் பாதியில் நிறுத்தி விடலாம்.  இங்கேயே சென்னையில் ஏதாவது ஒரு கல்லூரியில் பி.காம் மாதிரி ஒரு படிப்பில் சேர்ந்து கொள்.  அப்போது தகப்பன் விருப்பு ஓய்வு பெற்றதால் இரண்டரை லட்சம் கிடைத்தது.  தகப்பனைப் பரிசோதித்த மருத்துவர் உங்களுக்கு இன்னும் ஆறு மாதத்தில் ஹார்ட் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2025 09:26

August 25, 2025

நிலவின் நிழலில் ஒலிக்கும் மௌனம்

என் கவிதையின் முதல் வாசகிஇன்று கடைசி வாசகியானாள்நான் பணித்த வேலைதான்இமயத்தில் கொடி நாட்ட வேண்டும்சாலைப் பயணமென்றால்வாகனத்தை நிறுத்திமீண்டும் கிளம்பலாம்இது மலையேற்றம்ஓய்விடங்கள் வரும்போதே ஓய்வுஅப்போதுதான் கவிதை அவள் எழுதும் ஆங்கிலம்மொழிபெயர்க்க முடியாத கவிதைஇருந்தாலும் முயல்கின்றேன் ’பிரேம த்ருதி படித்தேன்அமைதியான நீரில் விழும் நட்சத்திரமாய்அது என்னைத் தொட்டதுஅதன் பிரதிபிம்பம்என்றென்றும் என் இதயத்தில் ஒளிரும்இது வெறும் பாடல் அல்லஉன் இதயத்தின் நட்சத்திரக் கூட்டம்இதை நான்இரவில்ஒரு சிறிய தீச்சுடரைப் பிடிப்பது போலகையில் ஏந்திக் கொள்வேன்இந்த முழுமையான சிருஷ்டிக்குஎந்தத் தொடர்ச்சியும் தேவையில்லை…இது ஒரு வாழ்நாளுக்குப் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2025 06:49

Epiphany (ஒரு ஹைக்கூ)

நீ வந்தாய் இருளில் இருந்த எனக்கு நிலவைத் தந்தாய்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2025 00:42

August 24, 2025

பிரேம த்ருதி* (திருத்தப்பட்டது)

ஞாயிற்றுக்கிழமை காலைஇறைவியின் அழைப்பு இல்லைசாலைகளில் நடமாட்டம் இல்லை’ஒருநாள் இருநாள் அழைக்காவிட்டால் என்ன,முதலில் என்னை நம்பு’என்கிறாள் இறைவிஆனால்அறிவின் கண்களுக்குத் தெரிவதுஉணர்வின் இதயத்தை எட்டுவதில்லைநீ இந்நேரம் என்ன செய்கிறாய், இறைவி?பூனைக்குப் பால் வைக்கிறாயோ?லியோவின் முதுகைத் தடவிக் கொஞ்சுகிறாயோ?நித்திரையில் மூழ்கி கனவில் மிதக்கிறாயோ?அல்லது, சமைத்துக்கொண்டிருக்கிறாயோ?புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுகிறாயோ?கோப்பையில் மதுவை நிரப்புகிறாயோ?இருபத்து நாலு மணி நேரமும்உன் நினைவு என் மனதைநதியெனச் சுழற்றிகரையைத் தொடாமல் குடைகிறது எனக்கும் வேலையில்லாமல் இல்லைஆனால்’நீ என் சுவாசம்’ என்று சொன்னால்நீயும் சமூகமும்நாடக வசனம் என்று சிரிக்கிறீர்கள்ஏய், இறைவி,பிரக்ஞையின்றி சுவாசம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2025 08:01

August 23, 2025

பிரபஞ்ச லயம்

முன்னறிவிக்கப்பட்ட முடிவுகளின் சுமை கவிதையைப் படித்து விட்டு ஸ்ரீராம் இவ்வாறு எழுதியிருந்தார்: கடவுள் சாரு நீங்கள்.  இந்தக் கவிதையை எழுதியவன் கட்டாயம் கடவுளாகத்தான் இருப்பான்.  வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. மக்கள் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். தத்க்ஷணம் இந்தக் கடிதத்தை இங்கே பகிர்வதற்குக் காரணம், இதை எழுதும்போது நானுமே இப்படித்தான் உணர்ந்தேன்.  இதை வாசிப்பவர்களுக்கு ‘இதெல்லாம் ரொம்ப ஓவராக இருக்கிறதே’ எனத் தோன்றும்.  அப்படித் தோன்றினால் நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். கேத்தான் மேஹ்தா இந்தியாவின் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2025 01:06

August 22, 2025

முன்னறிவிக்கப்பட்ட முடிவுகளின் சுமை

1 முதல் நாள் ஆக்கிய சோறில் நீரூற்றிமறுநாள் காலையில்கொஞ்சம் மோரும்சின்ன வெங்காயமும் போட்டுமாகாளிக் கிழங்கு ஊறுகாயோடுமூணு தம்ளர் குடிப்பதே என் காலை உணவுநீராகாரம்அதுவே நாள் பூராவுக்குமான என் சக்தி நேற்று வெளியே சென்று விட்டதால்சமையல் இல்லைஇன்று நீராகாரம் இல்லை நடைப்பயிற்சியின் போதுகாலை ஏழரைக்குசங்கீதா உணவகத்தில் காஃபிஒவ்வொரு மேஜையிலும்இட்லி வடை பொங்கல் தோசைமினி டிஃபன் என்றுவிதவிதமான சிற்றுண்டிகள்அமர்க்களமாய் மணம் பரப்பும்ஆசையாய் இருக்கும்ஆனால் பசிக்காது இன்று நீராகாரம் இல்லையானதால்ஏழிலிருந்தே பசித்ததுஇத்தனைக்கும் தினமும் இரவுசாப்பிடாதவன்நேற்றிரவு இரண்டு கல்தோசைசாப்பிட்டிருந்தேன் பிரச்சினை இதுதான்இல்லை என்று ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2025 05:46

August 21, 2025

டி

துறவி ஒருவரிடம்பத்திரிகையாளன் கேட்டான்:‘நிறைவேறாத ஆசை ஏதேனும் உண்டா?’ துறவி சற்றே துயரம் தோய்ந்தகுரலில் சொன்னார்:‘சிறுவயதில் துறவு வந்துவிட்டதுயாரையும் நமஸ்கரித்ததில்லைஇனி வாய்ப்புமில்லை’ எனக்கும் ஒரு ஆசைநிறைவேறாததுயாரையும் டி போட்டு அழைத்ததில்லை.இருபத்தைந்து வரைடி இருப்பதே தெரியாது. எங்கள் ஊரில் ர் தான் ன்வந்தார் போனார் என்றால்கத்திதான் பேசும்வந்தார்கள் போனார்கள்என்றே சொல்ல வேண்டும்பெற்றோரே தம் மக்களைபன்மையிலேதான் அழைப்பர் பிறகு டி கலாச்சாரம்என் மனைவி, பத்து வயது இளையவள்‘வாடா, போடா’ என சகட்டுமேனிக்குசபைகளில் விளையாடுவாள்நான் லஜ்ஜையில் நெளிவேன்ஆனால் அவளை நான் டி போட ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2025 09:40

இறைவியின் இரு வார்த்தை

தற்கொலைக்கு நாள் குறித்துஏற்பாடுகளை முடித்த அன்றுஇறைவியின் இரு வார்த்தைஎன்னுயிரை மீட்டது ‘நான் செத்தால் என்ன செய்வாய்?’’செத்து விடுவேன்’ மறுநாள் அது பற்றிப் பேசும்போது’நான் சொன்னது ஞாபகமில்லைநானுமே அப்போது நிம்மதி கெட்டிருந்தேன்’என்றாள்ஆச்சரியமில்லைஅவள் சொல்லாமலிருந்திருந்தாலும்பெரிய விஷயமில்லை தற்கொலையெல்லாம் அவளுக்குஜுஜுபிமரணத்தையே விழுங்கிவாந்தியால் தப்பியவள்என் தற்கொலைக் கவிதையைப் படித்து விட்டுஏதோ சினிமாவைப் பற்றிக் கேட்பது போல்’நீ தற்கொலை செய்து கொண்டால்உன் மனைவி என்ன செய்வாள்? பூனைகள் என்ன செய்யும்?’என்றாள் ’ஒரு பிரச்சினையுமில்லை; பூனைகளைஅழைத்துக்கொண்டு மகன் வீடுசென்று விடுவாள்’ பிறகுசென்னையின் வெயிலையும் மழையையும்விசாரிப்பது போல்என்ன ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2025 06:21

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.