சாரு நிவேதிதா's Blog, page 14

August 15, 2025

Requiemஇல் விடுபட்டது

நண்ப,உனக்கு என் தோழிபச்சைக்கண் பேரழகியைத் தெரியும்அவள் என் அருகில் கூட அல்ல,என் மடிமீது அமர்ந்தே பேசுவாள்ஆனால்அவள் என் எழுத்தைப் படித்ததில்லைபடி என்றேன்காலக்கெடுவும் வைத்தேன்அப்போதும் படிக்கவில்லைநீங்கி விட்டேன் அவளைஆதலனினால், புரிந்து கொள்உன்னை என்னருகேஅமர்ந்து கொள் எனஅழைத்ததுஉன்னை என் சிறந்த மாணாக்கனெனநினைத்தனால் மட்டுமேவேறெந்தக் காரணமும் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2025 06:28

Requiem

1 நண்ப,உனை அழைத்தேன்ஒரு பயணியின் குரலில்நதியின் கரையில் அமர்ந்துஞானத்தின் புதிர்களைப் பகிர்ந்து கொள்ள பிஸி என்றாய்சில தினங்கள் சென்று அழைத்தேன்சற்றே குற்ற உணர்வுடன்நானே அழைக்கிறேனென்றாய்காத்திருந்தேன், காஃபி குடித்தபடிசுவர்களின் விரிசல்களை எண்ணிக்கொண்டுநீ வரவில்லை, மனதில் பதிந்து வைத்தேன் தற்செயலாய் ஒரு மாலையில்நண்பர்களின் சந்திப்பில்உனைக் கண்டேன்அருகில் அமர அழைத்தேன்நெருக்கியடித்து அமர்வது அசௌகர்யமெனதூரத்தில் அமர்ந்தாய்நீ என்னைத் தவிர்க்கவில்லை, தெரியும்ஆனால்,நீ வேறோர் உலகத்தில் இருக்கிறாய் அன்று அலெஹோ கார்ப்பெந்த்தியர்குறித்துப் பேசினேன்அது காற்றில் மிதந்துநிலவின் ஒளியில் கரைந்ததுகேட்காத தொலைவில் நீஇருந்தாய்அதற்கு முன் பேசியதில்லைஇனி பேசப் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2025 05:47

சிற்பியின் வீட்டிலிருந்த சிப்பிப்பாறை: பிரபு காளிதாஸ் எடுத்த என் மிகச் சிறந்த புகைப்படம்

கும்பகோணத்தில் ஒரு சிற்பியின் வீட்டில் இருந்த ஒரு நாய் என்னைக் கொஞ்சிக் கொண்டிருந்தபோது இதை எடுத்தார் பிரபு காளிதாஸ். போஸ் கொடுக்கவில்லை. இயல்பாக எடுத்தது. சிப்பிப் பாறை. ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் எழுதிக்கொண்டிருந்த சமயம். பிரபு காளிதாஸ்தான் என்னுடைய எல்லா கட்டுரைகளுக்கும் புகைப்படம். அவரது புகைப்படங்களுக்கு ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவின் ஆசிரியர் குழுவே ரசிகர் கூட்டமாக மாறியிருந்தது அப்போது. படத்தைப் பார்த்தால் எனக்குத் தோன்றுகிறது, உலகில் உள்ள எல்லா நாய்களும், பூனைகளும் என் மேல் அன்பு பாராட்டுகின்றன, ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2025 03:02

August 14, 2025

மனதால் நினைந்து…

’நீயெனைப் பிரிந்தால்உனக்கு இன்னொருத்திநீ சொல்வாய்,பிரேதங்கள் மீது நடந்து செல்வதாகஅந்தப் பிரேத வரிசையிலேநான் கிடப்பேன் கடைசியாக,இல்லையா?’ அடியேய்,நின் பெயரைமனதால் நினைந்துவாயால் சொல்லிநின்றேன் இருந்தேன்கிடந்தேன் திரிந்தேன் நாடாத மலர் நாடிநின் வாடாத மலர் அடிக்கீழ்வைத்தேன்கூடவேநினைந்து நைந்து கரைந்துருகிபுனைந்த என்கவிதை ஐநூறும் சாற்றினேன் இதற்கு மேலுமா சந்தேகம்?சரி, இனியொரு ஐநூறுபுனைவேன்அப்போதேனும்நம்புவாயாஎன் நந்தா விளக்கமே? (காலையிலிருந்து நம்மாழ்வாரையும் பெரியாழ்வாரையும் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தோன்றிய கவிதை இது. டி.எஸ். எலியட்டின் இண்டர்டெக்ஸ்சுவாலிட்டி டெக்னிக்கைப் பயன்படுத்தினேன். பல சொற்றடர்கள் இரண்டு ஆழ்வார்களிடமிருந்தும் பெற்றது.)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2025 04:21

August 13, 2025

அதனாலே அவள் இறைவி

1 அவன் அவளிடம்ஒரு பாதகம் செய்தான்மன்னிப்பு கோரினான்ஆனால் மன்னிக்க முடியாததுஉறவை உடைக்கக் கூடியது கொலை, தற்கொலை—நிகழ்ந்திருக்கலாம்ஆனாலும் அறியாமல் செய்த குற்றம்கன்றைக் கொன்ற சோழனைப் போலகோவலனைக் கொன்ற சேரனைப் போல அவள் வார்த்தைகளால் தாக்கினாள்வசைகள் ஆன்மாவைக் கிழித்தன சோழனைப் போல் சேரனைப் போல்அவன் தன்னுயிரை மாய்க்க முடிவு செய்தான்சாகசமாய் மாத்திரைகள் வாங்கினான்நண்பனை அழைத்துகாலை பத்து மணிக்குஅவன் கவிதைகளை இணையத்திலிருந்துநீக்கச் சொன்னான்—பொய்யான காரணம் சொல்லி. காலையில் அவளிடம் வசை தின்றபோது“நான் உயிரை மாய்த்துக்கொண்டால்என்ன செய்வாய்?” என்றான்செத்துப் போவேன் என்றாள். அந்த ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 13, 2025 09:46

இனிமேல் கவிதை இல்லை…

என் எழுத்து எப்போதும் கொண்டாட்டத்தையும் உற்சாகத்தையும் தந்து கொண்டிருந்தன. எவ்வளவு வலியையும் வாதையையும் எழுதினாலும் அது எல்லோரையும் சிரிக்கச் செய்தன. ஆனால் இப்போதைய கவிதைகள் வலி மிகுந்திருக்கின்றன. எழுதுபவனுக்கும் அது யாரைப் பற்றியதோ அவருக்கும். என் எழுத்து எப்போதும் உற்சாகத்தை மட்டுமே தர வேண்டும். அதனால் இப்போதைக்குக் கவிதைகளை நிறுத்துகிறேன். நேற்று எந்த நேரத்தில் ஒரு நண்பன் “ஏன் உங்கள் அந்தரங்க விஷயங்களைப் பொதுவெளியில் வைக்கிறீர்கள்?” என்று கேட்டானோ அதுவே கவிதைக்கு முற்றுப்புள்ளி ஆகி விட்டது. ஏனென்றால், ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 13, 2025 07:08

சலிப்பு

வாசகனின் தற்கொலைக் கடிதம்வாசித்ததிலிருந்து தற்கொலை எண்ணம்நீரில் நனைந்த சிகரெட்டைப் போல்மனதில் புகைகிறது யோசிக்கும் வேளையில்வந்தமர்ந்த மைனாவிடம்சேதி சொன்னேன்சிறிது நேரம் மௌனித்த மைனாகாரணம் கேட்டது’எல்லாவற்றுக்கும் காரணம் உண்டா?பேரரசனாய் வாழ்ந்த ஹெமிங்வேஏன் தன்னை சுட்டுக் கொண்டான்?’ மேஜை மேலிருந்த மாத்திரைகளைக்காண்பித்தேன்சாகசம் செய்து வாங்கியவைவாழ்க்கையை முடித்து வைக்கும்சிறு வெள்ளைத் துண்டுகள் பார்த்து விட்டுச் சிரித்த மைனாதற்கொலைக் கவிதை எழுதுபவனெவனும்தற்கொலை செய்து கொண்டதில்லை என்றது ’உளறாதே, ஒரு நூறு உதாரணம் சொல்வேன்வுல்ஃப் பற்றித் தெரியாதா?தற்கொலை பற்றியே எழுதினாள்பல முறை முயன்றுகடைசியில் ஆற்றில் மூழ்கினாள்’ ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 13, 2025 02:43

August 12, 2025

குற்றமும் தண்டனையும்…

ஒவ்வொரு கவிதையும்கடைசி கவிதை என்கிறேன்இன்றுதான் வாக்களித்தேன்இதோ வந்திருக்கிறது ஒரு மரணத்தின் கவிதைமரணம் கூட கவிதையாக மாறுவதுவிபரீத ஆட்டம்தான் அவன் வயது இருபதுகாதல், கல்யாணம் எல்லாம் முடிந்ததுஒரு வருடத்தில் விலகி விட்டாள் மனையாள்இன்று அவனிடமிருந்து வந்த கடிதத்தில்மரணத்தின் மணம் ‘போதையில் செய்த பிழைபிழை அல்லமரண தண்டனைக்குரிய குற்றம்மன்னித்து விடு என்று கெஞ்சினேன்குடியையே விட்டு விடுகிறேன்என்று சத்தியமளித்தேன்எதுவும் நடக்கவில்லைஒரு மாதம் பார்த்தேன் இன்று மன அழுத்தத்துக்கானமாத்திரைகள் உட்கொண்டுநிறைய விஸ்கியும் குடித்தேன்நினைவு மங்குகிறதுவிடை பெறுவதற்குள்உங்களுக்கு இதை அனுப்ப வேண்டும்எவருக்கும் தீங்கு செய்ததில்லைஇவளுக்குப் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2025 23:45

அரை நிமிட முட்டாள்தனம்

வேலையின் கயிறுகழுத்தை இறுக்கும் நிழல்ஆனால் அவளின் நினைவுமணலில் எழுதப்பட்ட மந்திரம்காற்றின் மொழியில் அலைகிறதுமறையாமல்மறுக்கப்படாமல். இம்சை செய்யேனென சத்தியமளித்தேன்பன்னிரண்டு மணி நேரம்ஒரு புனிதனைப் போல்ஒரு முட்டாளைப் போல்மௌனத்திலிருந்தேன்பிறகுமாலையின் மஞ்சள் நிறத்தில்சத்தியம் மீறிஃபோன் செய்தேன்அரை நிமிட உரையாடல்பைத்தியத்தின் பாலையில் விழுந்தநீர்த்துளிநட்சத்திரங்களாய் மாறுகிறது இந்த இம்சை இல்லாமல்விடுதலை எப்படி?நினைவுகள் பாசிபடிந்த கற்கள்கைகளில் பிடிபடாமல் நழுவுகின்றன நண்பன் கேட்கிறான்ஏன் உன் அந்தரங்கத்தைஉலகுக்குப் பகிர்ந்தளிக்கிறாய்? ஐம்பது ஆண்டுகளாய்அந்தரங்கத்தைத்தானே காகிதத்தில்வீசுகிறேன்?கவிதைக்குச் சலுகையில்லையா? வேப்பை இழுத்துவிட்டுபிரியத்துக்குரியவர்களுக்குஇம்சை கொடுக்காமல்வாழ்வது எப்படியென யோசித்தேன்ஆனால்அவள் நினைவு கத்தியைப் போல்மார்பைக் கிழிக்கிறது குதிரையின் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2025 09:05

August 11, 2025

சாருவின் கவிதைகளைப் படிக்கிறீர்களா?

அன்புள்ள சாரு,பணிச்சுமையால் வழக்கமாகச் சந்திக்கும் சில நண்பர்களை சில மாதங்களாகப் பார்க்கவில்லை.ஆனால், எப்போதாவது அவர்கள் போனில் அழைக்கும்போது, உங்கள் கவிதைகளைப் பற்றி “சாருவின் கவிதைகளை படிக்கிறீர்களா?” என்கிறார்கள்.  ஒன்றிரண்டைத் தவிர எல்லாவற்றையும் படித்திருப்பேன்.  சில கவிதைகளைப் படித்துவிட்டு (எசக்) கவிதைகளை எழுதி பார்ப்பதுண்டு.ஆனால், என்னிடம் ஒரு தடுப்பாற்றல் இருக்கிறது.  நான் எல்லா கவிதைகளிலும் உட்புகுவதில்லை.  அதன் வாதையை, அல்லது இன்பத்தை வேண்டாம் என மறுத்து வெறும் வார்த்தைகளாக மட்டும் கடந்துவிடுவேன். அது லெளகீக வாழ்வில் சமநிலையைப் பேண ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2025 23:50

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.