சாரு நிவேதிதா's Blog, page 18
August 2, 2025
எங்கோ மிச்சமிருக்கும் காதல்
1 சில மொழிகளைப் போலசில இசைக்கருவிகளைப் போலசில நாகரீங்களைப் போலசில தேசங்களைப் போலசில பேரரசுகளைப் போலசில நதிகளைப் போலசில வீடுகளைப் போலசில நட்சத்திரங்களைப் போலசில வனங்களைப் போலசில அருவிகளைப் போலசில மலைகளைப் போச்சில உயிரினங்களைப் போலசில உணவு வகைகளைப் போலசில தாவர வகைகளைப் போலசில ஆடை அலங்காரங்களைப் போலசில பழக்கவழக்கங்களைப் போலசில தத்துவங்களைப் போலசில கடவுள்களைப் போலசில நம்பிக்கைகளைப் போலசில நட்சத்திரங்களைப் போலசில ஞாபகங்களைப் போலகடந்த காலத்தைப் போலகாதலும் அழிந்து விட்டதுஇலக்கியத்தில் மட்டும்மங்கிய சுவடுகளை விட்டு விட்டு ... Read more
Published on August 02, 2025 03:51
August 1, 2025
காதல்: ஒரு உரையாடல்
உன்மத்த நிலையில் எழுதுகிறாய்இப்படி ஒரு காதல் வாய்க்குமாஎனக்கு என்றான் நண்பன் காதலாவது கத்தரிக்காயாவதுபச்சை சுயநலம்சூறையில் அகப்பட்ட சருகாய்அலைவுற்ற எனக்குஇவளைப் போல் தந்தவர்யாருமிலர்அதனாலே இத்தனைப் பிரியம்என்றேன்
Published on August 01, 2025 18:42
நம்ப முடியாத கதை
இனிமைகொண்டாட்டம்துள்ளல்மலர்ச்சிமகிழ்ச்சிமென்மைகுதூகலம்விளையாட்டுகேலிகிண்டல்சாகசம்உற்சாகம்இன்னும் இப்படிஎன்னென்ன உண்டோஅத்தனையும் உருக்கொண்டஅவளிடம் ஏதோவொருநஞ்சைப் பாய்ச்சினேன்அறியாமல் செய்த பிழையென்றாலும்நஞ்சு அதன் வேலையைச் செயதது சொல்லற்று மௌனமானாள்மௌனம் தடைப்பட்டால்சொற்கள் நஞ்சாகி விழுந்தன அவள் ஒரு செல்லப்பிராணி வளர்த்தாள்ஹவானீஸ் இனம்லியோ ’நஞ்சை உமிழ்ந்து விடு,அது லியோவைத் தாக்கும்’என்று சொல்ல நினைத்தும்துணிச்சலில்லைசொன்னாலும் கேட்கும் நிலையில்அவளில்லை ஒரு நாள் ஏதோ ஒன்றைச் சொல்ல’எல்லாம் எனக்குத் தெரியும்’என்ற நஞ்சுத்துளி வந்து விழுந்தது நஞ்சு வெளியேறும் வரைஎன்னை நெருங்காதே பேசாதேஎன்றாள் அமைதியானேன்அமைதியாவதாக பாவனை கொண்டேன் இரண்டு நாள் சென்றுலியோவுக்கு நலமில்லையென்றசெய்தி வந்தது சரியாகுமென நம்பிக்கையளித்தேன் ... Read more
Published on August 01, 2025 09:02
இதயக்குறி அல்லது பிக்ஸல் வாக்குறுதிகளின் வாசிக்கப்படாத நிழல்
என்னை ஒரு பெண் நேசித்தாள்காதல் என்று சொல்லத்தான் ஆசைஆனாலும்காதல் என்றால் கொஞ்சம் கம்மியெனத்தோன்றுகிறதுபேய் நேசம்பெரிய பாரதக் கதைஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன் விடுமுறை தினங்களில்கைபேசியையே கையில் தொடாதவள்ஒரு கட்டத்தில் கைபேசிஅவள் உடலுறுப்புகளில் ஒன்றாக மாறியதுநான் அழைத்தால் எடுக்க வேண்டுமே? காலமெல்லாம் காசுப் பஞ்சத்தில்இருப்பவன் நான் பார்த்தாள்’ஏய் குட்டிநானொரு வேலையை ஒப்புக் கொள்கிறேன்இப்போது எட்டு மணி நேர வேலைஅதில் பதினாறு மணி நேரம்இரட்டிப்புச் சம்பளம்உனக்காகத்தான்மாதம் இன்ன தொகைஉன்னைத் தேடி வரும்இனிமேல் நீ காசு பற்றிப் பேசினால்கழுத்தை நெறித்து விடுவேன்’என்றாள்சொன்னது ... Read more
Published on August 01, 2025 07:05
வாட்ச்
ஏன் நீ வாட்ச் அணிவதில்லைஎன்றாள்குரலில்காலையில் நான் கேட்கும்மைனாவின் பாடல் முப்பது ஆண்டுகளுக்கு முன்ஒரு செல்வந்தர் வீட்டு சீமாட்டிஎன்னுடன் பழகிக்கொண்டிருந்தாள்அவள் வாட்ச் அணிவதில்லைகையிலொரு கயிறுகயிற்றிலொரு பல்புலிப்பல் என்றாள்புலிப்பல்லுக்குத் தடையுண்டுஆனால்சீமாட்டிகளை சட்டம் எட்டுவதில்லைஅப்போது விட்டதுதான்பிறகுயோசித்ததேயில்லைஎன்றேன். நான் அணிகிறேனேஎன்றாள்இளமையின் துள்ளலுடன்மணிக்கட்டைத் திருப்பி காட்டி நானும் அணிகிறேன்என்றேன்ஆனால்என் வாழ்வில்காலம்ஒரு செல்லாக்காசு
Published on August 01, 2025 05:48
அமைதியின் நிழல்
ஏழரை ஆண்டுகள்வீட்டின் சுவர்கள்சிறையென மூடியபோதுஅமைதியேஅவளின் நிழலாயிருந்ததுகாற்றற்ற நீரின் வதனமாகஎதையும் பிரதிபலிக்காமல்எல்லாவற்றையும் தாங்கிஅமைதியே அவளதுஅடையாளமாயிற்று சிறை மீண்டு வந்த பிறகுஅவளுக்குஅமைதியை உடைத்து வரக்கற்பித்தேன்ஆனால்காற்றில் மிதக்கும் மலரின் நிழலெனஅமைதி என்னில்குடி பெயர்ந்தது
Published on August 01, 2025 00:43
July 31, 2025
சார்பியல் கோட்பாடு
‘உன் மீது கொலைவெறி’’சொல் இறைவி’’ஒன்றரை நாள் பேசாததுநீண்ட இடைவெளியா?வாசகர் என்னைப் பற்றிஎன்ன நினைப்பார்?’’ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடுதெரியும்தானே?’’ம்…’’அவர் தன் காரோட்டியிடம்சொன்னது தெரியுமா?ஒரு யுகம் உன்னருகேஒரு நொடிஒரு நொடி உனைப் பிரிந்தால்ஒரு யுகம்’’ம்…’’அப்புறமேன் கொலைவெறி?’
Published on July 31, 2025 22:34
ஒரு அசாதாரணமான காதல் கதை
அந்த எழுத்தாளன் போல்வேறெந்த எழுத்தாளனும்வாழ்ந்ததில்லைஅவனது உற்ற நண்பனென்பதால்உள்கதையெல்லாம் தெரியும் அவனுக்கு ஐம்பது தோழிகள்பல சாதி பல இனம் பல பிராயம்பதினாறில் ஒருத்திஅறுபதிலும் ஒருத்திசிலவேளை மகளும் தோழிதாயும் தோழி சரீரமின்றி உறவு இல்லைவற்புறுத்துவதில்லைகேட்பான்மறுத்தால் விடை கொடுப்பான் ஐம்பதும் நிரந்தரமில்லைவரும் போகும் புனல் போல் ஒழுகும்சில பெண்கள் நிரந்தரம்தோழிகள் மட்டுமல்லமனைவிகளே அரை டஜன்நம்ப மாட்டீர்அரை டஜனும் ஒரே வீட்டில்! அவன் பேச்சைக் கேட்கபெண்கள் கூட்டம் அலைமோதும்பேச்சு முடிந்ததும்சபையிலேயே’ஏடீ ஷ்யாம்ளாஇன்னிக்கு நீ எங்கூட பட்றீ…’என்பான்இத்தனைக்கும்பதினேழு வயது ஷ்யாம்ளாவின் தாயாரும்பக்கத்திலேயே இருப்பாள்மறுநாள்எழுத்தாளன் ஷ்யாம்ளாவின் ... Read more
Published on July 31, 2025 09:37
என்ன மேட்டர்?
தோழர்க்கெல்லாம்மணவாழ்வில் நுழையாதீரெனஅனுபவ அட்வைஸ் கொடுப்பதுவழக்கம்இப்போது இன்னொன்றையும்சேர்க்கலாம்யாரும் காதல் செய்யாதீர்!தேவையெனில்இருக்கவே இருக்கிறதுஒன் நைட் ஸ்டேண்ட் காரணம்? நீண்ட இடைவெளிக்குப் பின்அவளுக்கு ஃபோன் செய்தேன்காரணமெதுவுமில்லையாழினும் குழலினுமினியஅவள் குரலைக் கேட்கலாமே என்றுதான்மேலும்காரணம் வைத்துக்கொண்டாகாதலியை அழைக்கிறோம்? எடுத்த எடுப்பில்என்ன மேட்டர் என்றாள் உன்னைக் கொல்ல வேண்டும்அதுதான் மேட்டர் என்று வந்ததுவந்ததையெல்லாம் வேற்றுக்கிரகவாசிகளிடம்சொன்னால் லோகம் அழிந்து விடும்நிம்மதியும் கெட்டு விடும் அதனால்ஒரு மேட்டருமில்லைஎன்று உண்மை சொன்னேன்
Published on July 31, 2025 08:00
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

