ஏழரை ஆண்டுகள்வீட்டின் சுவர்கள்சிறையென மூடியபோதுஅமைதியேஅவளின் நிழலாயிருந்ததுகாற்றற்ற நீரின் வதனமாகஎதையும் பிரதிபலிக்காமல்எல்லாவற்றையும் தாங்கிஅமைதியே அவளதுஅடையாளமாயிற்று சிறை மீண்டு வந்த பிறகுஅவளுக்குஅமைதியை உடைத்து வரக்கற்பித்தேன்ஆனால்காற்றில் மிதக்கும் மலரின் நிழலெனஅமைதி என்னில்குடி பெயர்ந்தது
Published on August 01, 2025 00:43