சாரு நிவேதிதா's Blog, page 22

July 24, 2025

தீராத அக்கப்போர்

நேற்று முன்னிரவு ஒரு கவிதைசில நிமிடங்களில் எழுதினேன்அத்தனை சடுதியில் இதுவரைவந்ததில்லைஉனக்கு அனுப்பினேன்இன்று பேசும்போதுகேட்க மறந்து போனேன்படித்தாயா இல்லையாதெரிந்தால் போதும்வேறெதுவும் வேண்டாம்எழுபத்திரண்டு மணி நேரம்சென்று கூட படிகவலையில்லைஆனால்ப்ளூ டிக் மறைக்கப்படாதிருந்தால்’உனக்கு நேரமில்லை, படிக்கவில்லை’என்றோ‘ஆ, படித்து விட்டாள்’என்றோதெரிந்து கொள்வேன்இப்போது முழு இருள்படித்தாயா இல்லையாதெரியாதுநீ படித்தால் நான் வாழ்வேன்.படிக்காவிட்டால்இன்னும் எழுதுவேன். ஒரு முடிவு செய்தேன்இந்த ப்ளூ டிக் அக்கப்போரெல்லாம்இனி எதற்குநம் ஃபோனைஅணைத்து வைப்போம்உன் ஃபோன்உன் சுதந்திரம்என் ஃபோன்என் சுதந்திரம்வெளியுலகத் தொடர்புக்குஇனி மின்னஞ்சல் மட்டும்தான் பாதிக்கப்படுவோர் பலர்என்கிறாயாதனியொருவனுக்கு ப்ளூ டிக்இல்லையெனில்ஜெகத்தினை அழித்திடுவோம்கபர்தார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2025 22:49

நோயும் மருந்தும்

அடிக்கடி கேட்கப்படுகிறதுஏன் கவிதை எழுதுகிறீர்கள்நெரூதாவிடமும் கேட்கப்பட்டதுநானா கவிதையைத் தேடிப் போனேன்கவிதை என்னைத் தேடி வந்ததுஎன்றார் அவர் ஒரு பத்திரிகைக்குக்கவிதை அனுப்பினேன்எடிட்டர் கேட்டார்ஏன் கவிதை எழுதுகிறீர்கள் எனக்குத் தெரியவில்லைஎன்றேன் வெகுளியாய் மாரத்தன் ஓட்டத்தைப் போல்இன்று ஒரு ஆறு கவிதை எழுதினேன் படித்து விட்டுஏனிந்த வெறிஏனிந்தப் பித்தநிலைஎன்ன செய்தால் அடங்கும்எனக் கேட்டாள்கவிதைக்கு உரியவள் சிசு வெளியேற ஒன்பது மாதம்வெளியே வந்தால் உயிரின் மலர்ச்சிஉள்ளே இருந்தால் மரணத்தின்காரிருள்கவிதைக்கு எத்தனைக் காலம்என்பதை யாரறிவார்வெளியே வந்தால் உயிர்உள்ளே இருந்தால் மரணம்என்றேன் இன்னொரு பதிலும் உண்டுசொர்க்கம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2025 07:15

மந்திர வனத்தில் தொலைந்து போனவன்

அடியேய்நீயே சொல்ஏன் என்னை இப்படிப் பித்தனாக்கினாய்?உன் இதயத்தைத் தொட்டு உறுதியாகச் சொல்நீதானே இந்தப் பைத்தியத்தின் மூலம்? மூன்று ஆண்டுகள் நானுண்டுஎன் எழுத்து உண்டு என்றுதானே இருந்தேன்?உன்னைத் தொந்தரவு செய்தேனா?உன் மௌனம் பற்றி வாதாடினேனா?உன் ப்ளூ டிக்கை மறைத்ததற்கு நொந்தேனா?ஏன் என்னை சந்திக்கவில்லையெனப் புகார் செய்தேனா? இப்போது பார்நீ ஒரு மந்திரக் கண்ணாடிஎன் ஆன்மாவில் புகுந்துஎன்னை உன் நிழலில் கட்டிப் போட்டாய்அந்த மலைப்பிரதேசத்தில்என்னை விட்டுப் பிரிய மனமில்லாமல்நீ விட்ட கண்ணீர்தான்என்னை இப்படிப் பித்தனாக்கியதுஅந்த உன் கண்ணீர்தீயாய் மாறிஎன் இதயத்தையும்நரம்புகளையும்எரித்துக்கொண்டிருக்கிறது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2025 05:26

மந்திர வனத்தில் தொலைந்தவன்

அடியேய்நீயே சொல்ஏன் என்னை இப்படிப் பித்தனாக்கினாய்?உன் இதயத்தைத் தொட்டு உறுதியாகச் சொல்நீதானே இந்தப் பைத்தியத்தின் மூலம்? மூன்று ஆண்டுகள் நானுண்டுஎன் எழுத்து உண்டு என்றுதானே இருந்தேன்?உன்னைத் தொந்தரவு செய்தேனா?உன் மௌனம் பற்றி வாதாடினேனா?உன் ப்ளூ டிக்கை மறைத்ததற்கு நொந்தேனா?ஏன் என்னை சந்திக்கவில்லையெனப் புகார் செய்தேனா? இப்போது பார்நீ ஒரு மந்திரக் கண்ணாடிஎன் ஆன்மாவில் புகுந்துஎன்னை உன் நிழலில் கட்டிப் போட்டாய்அந்த மலைப்பிரதேசத்தில்என்னை விட்டுப் பிரிய மனமில்லாமல்நீ விட்ட கண்ணீர்தான்என்னை இப்படிப் பித்தனாக்கியதுஅந்த உன் கண்ணீர்தீயாய் மாறிஎன் இதயத்தையும்நரம்புகளையும்எரித்துக்கொண்டிருக்கிறது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2025 05:26

நம்பிக்கை

நம்மால் செய்யக்கூடியதெல்லாம் நம்பிக்கை கொள்வது மட்டுமே நாம் நேசிப்பவர்கள் நம்மையும் நேசிக்க முடியும் என்றும் நாம் யாருடன் நேரம் செலவிட விரும்புகிறோமோ அவர்கள் நம்முடன் நேரம் செலவிட முடியும் என்றும்… Salena Godden
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2025 03:48

ஆத்மவதம்

மரப்பாச்சி பொம்மைக்குசீலை கட்டிதலை வாரிசடை பின்னிபால் அன்னம் ஊட்டிய சிறுமியிடம்ஒருத்தி சொன்னாள்:”ஏய் மூடத்திஅது வெறும் மரக்கட்டைஅதற்கு உயிரில்லை.”அன்றிலிருந்துமனநலம் குன்றினாள் சிறுமி ஒருவன் தன்னைஞானியென சொல்லி வந்தான்ஒருத்தி அவனிடம்“அனுபவத்தில் சொல்கிறேன்நீ ஞானியல்லபைத்தியம்” என்றாள்அன்றிலிருந்துபைத்தியமானான் ஞானி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2025 02:14

எரிமலையின் தனிமை

கடல் பற்றியெரிகிறதுஎதிரே நான்—மௌனம் தளும்புகிறது.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2025 00:48

பனிக்காட்டில் தனித்திருப்பவன்

1 மைனாவின் பாடல் கேட்பதைசெவிகள் நிறுத்தி விட்டனதேன்சிட்டின் இசையும் தொலைந்து போயிற்றுஇரவுநட்சத்திரங்களின் ஒளியை மறைக்கிறதுநிலவு ஒரு மங்கிய கண்ணாடிசொற்கள் என்னை விட்டு ஓடி விட்டனவாசிப்பு கானல் நீர்சலன சித்திரங்கள் அர்த்தமற்ற நிழல்கள்சிநேகத்துடன் பழகி வந்தவிருட்சங்களும் கைவிட்டனநாய் பூனை என் குரல் மறந்தனநித்திரை தூரத்து நினைவுஊணும் சுவை குன்றியதுகனவுகளால் வேட்டையாடப்பட்டுகவிதையில் தஞ்சமடைகிறேன் 2 மனிதர் யாவரும் ஒருவரையொருவர்காயப்படுத்திக் கொள்கிறார்கள்ஆனாலும்ஒருவர் மீதொருவர்அன்பு செலுத்துவதாகவே நம்புகிறார்கள்அன்பின் மொழியை மட்டுமேகவிதையாக்குவதாகநான் நம்புவதைப் போல
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2025 00:26

July 23, 2025

இசையெனும் உன்மத்தம்

பெட்டியோ நாவலில் வரும் நாயகி நயநதினி ஒருமுறை Samuel Barber Adaggio for Strings பாடலை இரவு முழுவதும் கேட்டு இறுதியில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவாள். மோகமுள்ளில் யமுனா ஒரு ஹிந்துஸ்தானி இசை கேட்டு செத்து விடலாம் போலிருக்கிறது பாபு என்று சொல்வாள். பரவசத்தின் உச்சத்தில் அப்படித் தோன்றும். PD1 90187 bex dc paidsocial dv video youtube nomatterwhat edge ind en 16×9 15 சில தினங்களுக்கு முன் ஸ்ரீ மேரி ஹம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2025 00:01

July 22, 2025

தாளிடப்பட்ட கதவின் மௌனம்

1 கஞ்சா மயக்கத்தில்சிறுதுளி சர்க்கரையும்கோஹிநூர் வைரமாய்த் தெரியும்அப்படித்தான் நீபேனைப் பெருமாளாக்கிஎன் கையில் திணிக்கிறாய். மறுக்கிறேன்கவிதை எழுதச் சொன்னது நீங்கள்இப்போது வார்த்தைகள் கவிதையாகிஎன் விரல்களை மீறி வழிகின்றனநிறுத்தும் வழி தெரியவில்லைஒவ்வொரு எழுத்தும் நீங்களேஎழுதி ஈரம் காய்வதற்குள் உங்கள்பார்வைக்கு வருகிறதுஎந்த அவசரமுமில்லைவாய்த்த நேரத்தில் வாசிக்கலாம்ப்ளூ டிக் ஒரு சிறு மகிழ்ச்சி அது என்னதிடீரென்று நீங்கள்? பாராட்டு தேவையில்லைசன்மானம் கேட்கவில்லைவாசித்த விவரமறிந்தால்ஒரு மெல்லிய மகிழ்ச்சிஅதற்கும் தாளிடுபவர்களைவேறெப்படி அழைப்பது? 2 நீயில்லாமல்என் கவிதையில்லைநீ அதை வாசிக்கையில்-அது ஒரு நதியின் நிழலாய்என் கரையையும்உன் மௌனத்தையும்இணைக்கிறது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2025 22:20

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.