சாரு நிவேதிதா's Blog, page 15

August 11, 2025

யோகா குரு சௌந்தரின் முதல் புத்தகம்: ஙப் போல் வளை

இதென்ன கெட்ட பழக்கம், “புக்கு போடறதெல்லாம்” என மனசுக்குள்ள இருந்து குரல் வந்த உடனேயே இந்த திட்டத்தை கை விட்டுருக்கனும், ஆனா புத்தி, சாதுர்யமாக இப்படி ஒரு பதிலை சொல்லியது.’ நீ யாருகூட சகவாசம் வச்சிருக்கியோ அந்த பழக்கம் தான உனக்கும் வரும், போ போய் பிரிண்டிங் வேலையப்பாரு’ -என ஆம். நம்ம சகவாசம் எல்லாம் எழுத்தாளர்களோடும், இலக்கிய தாதாக்களான சாரு டார்லிங் (வெறும் சாரு என அழைக்கக்கூடாது என கட்டளை) ,ஜெயமோகன் சார் ,எஸ்.ரா.சார் என, ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2025 23:09

கடைசி கலவி, கடைசி கவிதை

இறைவிஉனக்காக உன்னைப் பற்றியேஎழுதுகிறேன்பதிலுக்கு உன் ஒரு சொல்ஒரு கோடி நட்சத்திரங்களாய்என் மார்பில் உதிரும் ஆனால் இப்போதுஉன் பார்வையின் பாதை மாறி விட்டதுஎன் வார்த்தைகள்காற்றில் கரையும் எரிகற்கள் மூச்சு நிற்காமல் இருக்கவே எழுதுகிறேன்ஆனால்உனக்கு இது மூச்சு முட்டுவதாகஇருக்கிறதோ என்னவோ உனக்காக எழுதுவதைப்படிக்கிறாயாஎனத் தெரியாமல் எழுதிஎன்ன பயன் ஒவ்வொரு கலவியும்கடைசி கலவி எனஒவ்வொரு சொல்லும்கடைசி முத்தமெனஉன் நிழலில் விழுந்துமறைகிறது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2025 22:39

ஒரு கனவின் துண்டிக்கப்பட்ட நிழல்

நிழல்களின் மௌனத்தில்அவள் வார்த்தைகள்’செக்ஸ் இனி வேண்டாம்நண்பர்களாக இருப்போம்’ காற்று தன் மூச்சை இழந்ததுஇதயத்தின் கதவுஒரு முடிவில்லா இருளில் மூடப்பட்டது. ’அப்படியானால்,நான் உன்னைத் தொட மாட்டேன்உன் புன்னகையின் நதியில் நீந்த மாட்டேன்உன் கண்களின் வானத்தில் பறக்க மாட்டேன்’ ஏன் என்றாள் கண்கள் கலங்க ஏனென்றால் நான் இருக்க மாட்டேன் உன் நினைவுகளில் மறையும் நிலவாவேன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2025 10:10

August 9, 2025

ஒரே ஒரு சொல்

நள்ளிரவில் இந்த மொட்டைமாடியில் தனித்திருக்கிறேன் கையில் வைன் உன் நினைவு என்னைப் பித்தனாக்குகிறது உன் ஒரே ஒரு சொல் என்னை மீட்டெடுக்கும் நீ நித்திரையில் இருப்பாய் இந்த வாதை தாங்க முடியவில்லை நட்சத்திரங்களோடும் நிலவுடனும் உரையாடுகிறேன் உன் ஒரு சொல் ஒரே ஒரு சொல் என்னுயிரைக் காக்கும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 09, 2025 21:09

கருணை கொள், இறைவி!

காதை அறுத்துக் கொடுத்தானாம் கழுத்தை அறுத்துக் கொடுத்தானாம் எல்லாம் தெரியும் நீ இல்லாவிட்டால் நான் செத்து விடுவேனென உனக்குத் தெரியுமா இல்லையா சொல் தெரிவதற்காக நான் செத்தால் உன்னைப் பார்க்க முடியாது அது ஒன்றே என்னைத் தடுக்கிறது இல்லாவிடில் அதையும் செய்து முடிப்பேன் என் தங்கமே
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 09, 2025 11:17

ரிஷியிடமிருந்து ஒரு கடிதம்

டியர் சாரு, நான் கோவா போகவில்லை. ஆரோவில் அருகிலேயே தங்கிவிட்டேன். பெண்கள் பெண்கள் என்று அலைந்தது போதும்! என்னுடைய Art Exhibition நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது. அதில் கவனம் செலுத்துவோமென்று முடிவு செய்தென். இன்று ஆரோவில் உள்ளே நடக்கும் ஜிப்ஸி Festivalக்கு சென்றிருந்தேன். உள்ளே வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் கர்ண கொடூரம். இசையும் பயங்கர Amature!சுற்றிலும் அழகிகள். அந்த அழகிகளை பிடிப்பதற்கு இளைஞர் கூட்டம் போட்டிப் போட்டு கொண்டிருந்தது. ஒரு பக்கம் மரண மொக்கையான இசை குழு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 09, 2025 11:06

ஒளிந்து வாழும் கூட்டம்

பெண்களும் கடவுளும் ஒன்று கருணையற்ற கூட்டம் எழுதியின்னும் ஈரம் காயவில்லை அடுத்துவொரு ப்ளூ டிக் கவிதையை அனுப்பி விட்டான் எல்லாம் என் தலையில் ஓத்த விதி இன்று சுந்தர் சருக்கையுடன் சந்திப்பு அதனால் அவர் புதினத்தைத் தேர்வுக்குப் படிப்பது போல் ப்டித்துக்கொண்டிருந்தேன் அதற்கிடையில் வந்தது ப்ளூ டிக் பூதம் எனக்கு வாட்ஸப்பில் 569 நண்பர்கள் அவ்வளவு பெயரையும் தனித்தனியாய் எண்ணியது தனிப்புராணம் 569இல் 549 பேர் ப்ளூ டிக்கை மறைத்துள்ளார் எனக் கண்டேன் சிலரை விசாரித்தேன் மருத்துவர் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 09, 2025 02:56

வேண்டுதல்

நேற்று ராஜேஷ் வந்தான் எடை குறைக்க பேலியோ  டயட்டில் இருக்கிறானாம் எடையை ஏன் குறைக்க வேண்டும் எனக் கேட்க நினைத்துக்  கேட்கவில்லை கேள்வி கேட்பது அவளுக்குப்  பிடிக்காதென்பதால் கேள்வியையே துறந்து விட்டேன் குடிக்கத் தொடங்கினோம் அவன் பியர் நான் வழக்கம் போல் சீலே வைன் ரெண்டு கோப்பை போனதும் எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதைச் சொன்னேன் சிரித்தபடி என்ன பைத்தியம் என்றான் ‘OCD பைத்தியம் எல்லா நேரமும் ப்ளூ டிக் யோசனை’ ‘தெரியுமே, கவிதையில் படித்தேனே’ ‘அது இல்லை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 09, 2025 01:21

August 8, 2025

இவள் அமர்ந்த ஆசனம்

இதுவரை நான்கு பெண்கள் நான்காவதே கடைசியென முடிவு வாழ்வு அந்தியை நெருங்கி விட்டதால் அல்ல இவள் இறைவி இவளை நினைந்த மனம் இன்னொருத்தியைத் தழுவாது நால்வருமே தேனீர்ப் பிரியர்கள் நானோ காஃபி அடிக்ட் வாழ்வின் குட்டி சாபங்களில் இதுவுமொன்றெனக் கொண்டேன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 08, 2025 23:01

August 7, 2025

விசை

ஒரு தொலைக்காட்சி சீரியல் சுயநலத்துக்காக எத்தனை கொலைகளையும் செய்யத் தயங்காத ஒரு கொடூரனின் கதை ஏற்கனவே பார்த்திருப்பதாக ஒரு சம்சயம் எதுவும் ஞாபகம் இல்லை எல்லாமே புதிதாயிருந்தது ஒன்றைத் தவிர அந்த ரவுடி தன் எடுபிடியின் மனைவியோடு கள்ள உறவு வைத்திருப்பான் அது மட்டும் துல்லியமாய் நினைவில் இருந்தது ஆகவே செக்ஸ்தான் என்னை இயக்கும் சக்தியென அறிந்து கொண்டேன் செக்ஸுக்குத் தடை போடும் தோழி யாரேனுமிருந்தால் அதோடு சேர்த்து எனக்கும் என் உயிருக்கும் தடை போட்டால் நலம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2025 03:35

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.