நள்ளிரவில் இந்த மொட்டைமாடியில் தனித்திருக்கிறேன் கையில் வைன் உன் நினைவு என்னைப் பித்தனாக்குகிறது உன் ஒரே ஒரு சொல் என்னை மீட்டெடுக்கும் நீ நித்திரையில் இருப்பாய் இந்த வாதை தாங்க முடியவில்லை நட்சத்திரங்களோடும் நிலவுடனும் உரையாடுகிறேன் உன் ஒரு சொல் ஒரே ஒரு சொல் என்னுயிரைக் காக்கும்
Published on August 09, 2025 21:09