சாரு நிவேதிதா's Blog, page 252

July 24, 2020

ஐயோ பாவம்…

அன்பர் கமல்ஹாசனின் கவிதையை பல நண்பர்கள் அனுப்பியிருந்தனர். பலவிதமான கலவையான உணர்ச்சி ஏற்பட்டது. ஒரு மனிதன் எப்படி இந்த அளவு தனிமைப்பட்டுப் போக முடியும் என்று மிக மிக மிக வருத்தமாக இருந்தது. உலகத்தில் உள்ள முக்கியமான புத்தகங்களையெல்லாம் படித்து விட்டு, நான் விஷயமறிந்தவர்கள் என்று நினைக்கும் சிலரே கமல் நம்பமுடியாத அளவுக்கு ஒரு படிப்பாளி என்று சொல்லும்படியான பேர் வாங்கின ஒரு ஆள், இப்படியுமா கவிதை என்ற பெயரில் உளற முடியும்? உளறுவதற்கு ஒரு அளவு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2020 08:52

July 23, 2020

July 22, 2020

To You Through Me – 13

Dear Charu This one interview of yours is a Ph.D. thesis material. As a researcher who dwelt extensively on one material (Oxide material) and spent my entire life in that, I can visualize the benefits and pleasures. I’m sure, one day a thesis will be made on your writings. The real issue for a true ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2020 23:51

க.நா.சு. உரை: 26 ஜூலை

உரை கேட்க வந்து விட்டு ஏற்கனவே நூறு பேர் வந்து இடம் பிடித்து விட்டதால் இடம் இன்றித் திரும்புகின்றவர்கள் சுமார் நூறு பேர் இருக்கும். அதைத் தவிர்க்க நூறுக்கு மேற்பட்டவர்களை இணைக்கும் வசதியைப் பெற முயன்றோம். 20 டாலர் தானே என்று பார்த்தால் 20 டாலரை அழுத்தி உள்ளே போனால் 200 டாலர் என்கிறான். இந்தியர்களிடமிருந்து அமெரிக்கர்களும் கற்றுக் கொள்கிறார்கள் போல. அதனால் பழையபடியே நூறு பேர்தான் பங்கேற்க இயலும். ஆனால் பங்கேற்க இயலாதவர்கள் எனக்கு எழுதினால் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2020 18:27

July 21, 2020

பூச்சி 109

அன்பு சாரு சார், முதலில் உங்களிடம் வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். இன்றைய பூச்சி கட்டுரை படித்தவுடன் ஒருவித குற்ற உணர்வு ஏற்பட்டுவிட்டது. அரூ இதழில் வெளிவந்த தங்களின் நேர்காணல் பற்றி எதிர்வினை வரவில்லை என்று எழுதியதுதான் அந்த குற்ற உணர்விற்குக் காரணம். நான் படித்தவுடனே உங்களுக்கு நன்றி தெரிவித்து எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நள்ளிரவில்  வாசித்துமுடித்ததால் எழுதமுடியவில்லை. அதை அப்படியே மறந்தும் போய்விட்டேன். இன்று பூச்சி கட்டுரையில் குறிப்பிட்டவுடன் குட்டுவிழுந்தது போல் முழிப்புவந்து எழுதுகிறேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2020 23:23

க.நா.சு. உரை

வருகின்ற 26-ஆம் தேதி ஸூம் சந்திப்பு இந்திய நேரம் காலை ஆறு மணி. ஞாயிற்றுக் கிழமை. மூன்று மணி நேரம். இரண்டு மணி நேரம் உரை. ஒரு மணி நேரம் கேள்வி பதில். ஆனால் கேள்விகள் இன்னும் எதுவும் வரவில்லை. அதில் எனக்குச் சிறிதும் ஆச்சரியம் இல்லை. ஏன் வரவில்லை என்று என் உரையில் பதில் இருக்கும். அதுதான் உரையின் மையச் சரடு. இடையில் க.நா.சு.வை நீங்கள் கொஞ்சம் வாசிக்க விரும்பினால் கிண்டிலில் கிடைக்கிறது. இன்றுதான் பார்த்தேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2020 00:17

July 20, 2020

வைரமுத்து பற்றி அராத்து

மீடூ என்பது ஆண்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி செக்ஸுவலாக அத்துமீறுவது என்று பார்த்தோம். தமிழகத்தில் இது வைரமுத்து – சின்மயி என்று முன்வைக்கப்பட்டு பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது. மீடூவுக்கு ஆதரவாக பேசினாலோ , வைரமுத்துவை எதிர்த்துப் பேசினாலோ , சின்மயி ஆள் என்று முத்திரை. வைரமுத்துவை ஆதரித்துப் பேசினால் திராவிட இன உணர்வாளன் என்று அடையாளம். திராவிட இயக்கங்கள்தான் இந்த மீடூவை ஆதரித்து இருக்க வேண்டும். அதுதான் இயற்கை. ஆனால் ஏனோ இந்த விஷயத்தில் தலைகீழாக அப்படி ஒரு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2020 06:07

பூச்சி 108

ஜெபமாலையில் 108 மணிகள் இருக்கும்.  108 இந்திய மரபில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.  இந்திய மரபு என்பது இந்து, பௌத்தம், சமணம்.  சித்தர் மரபில் அண்டமும் பிண்டமும் என்பார்கள் இல்லையா, அண்டம் உங்களுக்குத் தெரியும்.  பிரபஞ்சம்.  பிண்டம் சரீரம்.  அந்த சரீரத்தையும் பிரபஞ்சத்தையும் இணைப்பது சரீரத்தில் உள்ள 108 புள்ளிகள்.  வர்மம், மர்மம் என்றும் சொல்வார்கள்.  சித்தா மற்றும் ஆயுர்வேத வைத்தியத்தின் அடிப்படையும் இதுதான்.  சரீரத்தில் 108 புள்ளிகள் உள்ளன.  தலை முதல் கழுத்து வரை 25, ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2020 01:52

July 19, 2020

பூச்சி 107

மற்றவர்களுக்கெல்லாம் இதோடு நாலு மாதம் லாக் டவுன் என்றால் எனக்கு ஐந்து மாதம்.  கொரோனாவுக்கு முன்பே ஸிஸ்ஸிக்கு கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை நடந்து விட்டதால் ஒரு மாத காலம் ஸிஸ்ஸியை வீட்டுக்குள்ளேயே வைத்துப் பாதுகாக்க வேண்டியதாகி விட்டது.  கதவைத் திறந்தாலே வெளியே பாய்ந்து விடும்.  வெளியே போனால் காயத்தில் தொற்று ஏற்பட்டு சீழ் பிடித்து பெரிய ரணகளமாகி விடும்.  திரும்பத் திரும்ப தையல் போடுவது ஆபத்து.  நண்பர்களை சந்தித்தே ஐந்து மாதம் ஆகிறது.  திடீரென்று இன்று ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2020 07:19

பாற்கடல்

ஆண்டன் செகாவ் போன்ற வெளிநாட்டு எழுத்தாளர்களை என் சக எழுத்தாளர்களும் வாசகர்களும் வியந்து வியந்து போற்றும் போது செகாவுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத – இன்னும் சொல்லப் போனால் – அவரிலும் மேம்பட்ட நம் தமிழ் எழுத்தாளர்கள் பற்றி யார் பேசுவார், எப்போது பேசுவார் என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து போவது என் வழக்கம்.  பச்சைக் கனவு என்று ஒரு கதை.  ஜனனி என்று ஒரு கதை.  வேண்டப்படாதவர்கள் என்று ஒரு கதை.  லாசராவைப் போய் புரியாமல் எழுதுகிறார் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2020 02:51

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.