சாரு நிவேதிதா's Blog, page 246
September 10, 2020
பூச்சி 130: ecstasy
டேன்ஸ் மங்கி என்ற இந்தப் பாடலை Toni Watson சென்ற ஆண்டு பாடினார். Tones and I என்பது இவர் புனைப்பெயர். ஆஸ்திரேலியன். இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால், உலகம் பூராவும் கொரோனா பரவியதைப் போல் இவரது டேன்ஸ் மங்கி பரவியது. இந்தப் பாடலைக் கேட்காதவரே இல்லை. தெருவில் சும்மா நடந்து செல்பவர் கூட இந்தப் பாடலைக் கேட்டால் உடம்பில் ஒரு நடன அசைவு ஏற்பட்டு விடுகிறது. இந்தப் பாடலைப் பாடாத பாடகரே இல்லை. இந்த சாக்ஸைக் ... Read more
Published on September 10, 2020 23:58
பூச்சி 129: சமகால எழுத்தின் முன் உள்ள சவால்கள்
அராத்துவின் மயிர்க்கூச்செறிதல் சிறுகதை நல்லதொரு விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பி விட்டது. இப்படித்தான் இருக்க வேண்டும். என்ன ஆச்சரியம் என்றால், அராத்துவுக்குப் பெரிய ஒரு ஆர்மியே இருப்பதுதான். ஆர்மியில் இளம் பெண்களின் கூட்டம் அதிகமாக இருப்பது வேறு பொறாமையைக் கிளப்புகிறது. கதை பற்றி என் நண்பரும் பேராசிரியருமான ராஜா ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதம்: அன்புள்ள சாரு, மயிர்க்கூச்செறிதல் கதையைப்படித்துவிட்டு நான் படித்ததில் மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று என என் மனைவியிடம் கூறினேன். அவள் சந்தேகத்துடனே அதைப் படிக்க ... Read more
Published on September 10, 2020 22:27
உலகின் மிகச் சிறந்த நாவல்
நான் தொழில்நுட்ப சமாச்சாரங்களில் பூஜ்யம். ஆனால் இளவட்டங்கள் என்னை விடவும் கீழே இருக்கின்றன. நீங்கள் குறிப்பிட்ட பிடிஎஃப் வேலை செய்யவில்லை என்று இருபது கடிதங்கள். கடவுளே, வேலை செய்யாவிட்டால் என்ன? இடைவெளியின் பிடிஎஃப் கிடைக்கிறது என்ற தகவல்தானே முக்கியம்? இடைவெளி நாவல் PDF என்று கூகிளில் தட்டினால் கண் முன்னே வந்து நிற்கிறது நாவல். இதில் என்ன சிரமம் இளைஞர்களுக்கு? இருபது கடிதங்கள். அதில் ஒரே ஒருவர்தான் லிங்கைக் கொடுப்பதற்குப் பதிலாக லிங்க் முகவரியைக் கொடுத்து விட்டீர்கள் ... Read more
Published on September 10, 2020 02:17
September 9, 2020
உலகின் மிகச் சிறந்த நாவல் இடைவெளி
எஸ். சம்பத்தின் இடைவெளிக்குத்தான் இதுவரையிலான என் நாவல் வாசிப்பு அனுபவத்திலேயே முதல் இடம் கொடுப்பேன். ஏன் என்று பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதியிருக்கிறேன். வாசித்துக் கொள்ளுங்கள். ஒரே வாக்கியத்தில் சொல்வதானால் எவனும் மரண வெளியில் சென்று கள ஆய்வு செய்து நாவல் எழுதி செத்தது இல்லை. சம்பத் செய்திருக்கிறார். செத்தும் இருக்கிறார். நல்ல புத்திசாலி. கஷ்டப்பட்டவர் எல்லாம் இல்லை. வசதியானவர். மரணத்தில் கள ஆய்வு செய்தார், அவ்வளவுதான். இவருடைய ஒரே நாவலான இடைவெளியை வெளியிடுவதில் சில சிக்கல்கள் ... Read more
Published on September 09, 2020 21:03
தள்ளுபடி விலையில் என் நூல்கள்
ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் என் புத்தகங்கள் அனைத்தும் இப்போது பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி வாசகர்களையும் என் நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன். இந்தச் செய்தியை ஈடுபாடு உள்ள மற்ற வாசகர்களிடமும் பகிர்ந்து கொள்ளவும். கீழ்வரும் சுட்டியில் என் நூல்கள் அனைத்தும் உள்ளன.
Published on September 09, 2020 20:40
September 8, 2020
பூச்சி 128 அடியேன் சொன்ன பொய்
அராத்துவின் மயிர்க்கூச்செறிதல் கதையை என் தளத்தில் வெளியிட்டிருந்தேன். ஆனால் அது பற்றி என் கருத்து எதையும் எழுதவில்லை. என் தளத்தில் வெளியிட்டாலே அந்தக் கதை பற்றிய என் கருத்து தெரிவிக்கப்பட்டு விட்டது என்றே பொருள் என்று நினைத்தேன். மேலும், அந்தக் கதை பற்றி நான் உயர்வாக எழுதினால் அதைக் குப்பை என்று நினைப்பவர்களின் சுதந்திரமான மனப்போக்கைத் தடை செய்ததாகவோ அல்லது இடையூறு செய்ததாகவோ ஆகும் என்று நினைத்தும் அப்படியே விட்டு விட்டேன். என் நெருங்கிய நண்பரிடம் பொதுவாக ... Read more
Published on September 08, 2020 22:45
ஊரின் மிக அழகான பெண்
மேற்கண்ட தலைப்பில் என்னுடைய ஒரு மொழிபெயர்ப்பு நூலை ஸீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மறுபதிப்பாக இருந்தாலும் இதில் ஜான் பால் சார்த்ர் எழுதிய சிறுகதை சுவர் சேர்க்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்த்த சிறுகதை அது. படிகள் பத்திரிகையில் வெளிவந்தது. கீழே சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி எழுதிய ஊரின் மிக அழகான பெண் சிறுகதை. புத்தகத்தை வாங்குவதற்கான விவரங்கள்: ஊரின் மிக அழகான பெண் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி அந்த ஐந்து சகோதரிகளில் காஸ்தான் மிகவும் அழகானவள். இளையவள். ... Read more
Published on September 08, 2020 06:05
September 7, 2020
பூச்சி 127: பாஸ்டனில் இட்லி கிடைக்குமா?
அப்பா, பூச்சி 125 படித்தேன். ஒருசில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. பிஸ்கட் பற்றி எழுதியிருந்தீர்கள். இப்போது கொஞ்சம் பத்தியத்தைக் கடைபிடிப்பதால் இங்கே நான் பிஸ்கட் (அமெரிக்காவில் குக்கீஸ்) சாப்பிடுவதை நிறுத்தியிருக்கிறேன். நீங்கள் இன்று ஞாபகப்படுத்திவிட்டீர்கள். இந்தியாவிலே எனக்கு இரண்டே இரண்டு குக்கீஸ்தான் பிடிக்கும்: அவற்றுள் இரண்டாம் இடம் குன்னூரில் கிடைக்கும் பட்டர் பிஸ்கட். நீங்கள் சொன்னதுபோல உப்பு பிஸ்கட்தான். குன்னூரில் இந்தியன் பேக்கரியில் கிடைக்கும் பிஸ்கட்டை பெருமளவில் புகழ்வார்கள். ஆனால் பெட்ஃபோர்டுக்கு அருகில் குறுகிய சந்து ... Read more
Published on September 07, 2020 23:03
ஒளியின் பெருஞ்சலனம்
கிண்டிலில் இன்று மட்டும் சிறப்புத் தள்ளுபடியாக மனம் கொத்திப் பறவையும் ஒளியின் பெருஞ்சலனமும் ரூ. 49க்குக் கிடைக்கும். ஒளியின் பெருஞ்சலனம்https://cutt.ly/9fWrlQr மனம் கொத்திப் பறவைhttps://cutt.ly/MfWrkkM
Published on September 07, 2020 21:35
முன்னோடிகள் 25: பெரியோரைப் புகழ்தலும் இலமே…
ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றிய உரை சிறப்பாக முடிந்தது. இந்த இரண்டு தினங்களில் மூவாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். நல்ல எண்ணிக்கை. இதுவே கட்டண உரை என்றால் இவ்வளவு பேர் பார்க்க வாய்ப்பு இல்லை. ஆனாலும் நம்முடைய மாதாந்திர ஸூம் சந்திப்புகள் மகத்தான வெற்றி என்றே சொல்ல வேண்டும். எந்த நேரத்தில் வைத்தாலும் நூறு பேர் வந்து விடுகிறார்கள். ஆனால் அந்தப் பேச்சை ஏதோ கொஞ்சம் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் மேலும் ஒரு பத்து இருபது ... Read more
Published on September 07, 2020 20:33
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

