சாரு நிவேதிதா's Blog, page 249

August 24, 2020

அடியேனைப் பற்றி அராத்து

என்னைப் பற்றி எழுதப்பட்டவற்றிலேயே ஆகச் சிறந்தது: சாருவும் பொய்யும் இது கொஞ்சம் காம்ப்ளெக்ஸான போஸ்ட்தான். கவனமாகப் படிக்கவும். சாருவே தான் பொய் சொல்வதாகச் சொல்லப்படுவதைப் பற்றி விளக்கமாக எழுதி இருக்கிறார். ஆனால் அது தப்பு. அவருக்கு அவரைப் பற்றி தெரியாது. யாருக்குத்தான் யாரைப்பற்றி தெரிகிறது சாருவுக்கு பொய் சொல்லத் தெரியாது. உண்மையும் சொல்லத் தெரியாது. குழப்பமாக இருக்கிறதா ? அவர் டிக்‌ஷனரியில் உண்மை , பொய் என்ற பூலியன் அல்ஜீப்ரா கிடையாது. அது வேறு மாதிரி செயல்படும். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2020 17:51

பூச்சி – 119

அன்புள்ள சாரு, ‘என்ன இன்னும் பதில் வரவில்லையே’ என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, நீங்கள் உங்கள் பூச்சி கட்டுரையிலேயே என் கடிதத்தை பகிர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. உண்மைதான். நான் புத்தகங்கள் வாங்கும் முன் பல மதிப்புரைகளைப் படித்து விட்டுத் தான் வாங்குவேன்.  (இது சரியான முறையா என்று தெரியவில்லை.) அப்படித்தான் நான் ஜெயமோகனையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் கண்டு பிடித்தேன். ஒரு புத்தகம் வாங்கும் முன் அவர்கள் தளத்தில் அதனைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டுத்தான் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2020 05:54

முன்னோடிகள் – 19

கோபி கிருஷ்ணன் உரைக்காக முழுமூச்சில் படித்துக் கொண்டிருக்கிறேன்.  கோபி கிருஷ்ணனை அல்ல.  அவரை ஏற்கனவே பலமுறை படித்து விட்டேன். வெறுமனே புரட்டினால் போதும்.  நான் படிப்பது, இப்போதைய என் பேச்சு ஒரு ஒப்பீட்டு ஆய்வு போல் இருக்கும்.  ஃப்ரெஞ்ச் இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்தப் பேச்சைத் தவற விடாதீர்கள்.  முக்கியமான Gerard de Nerval மற்றும் Arthur Rimbaud.  இவர்கள் பெயரை ஷெரார் தெ நெர்வால் என்றும் ஆர்த்தர் ரேம்போ என்றும் உச்சரிக்க வேண்டும்.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2020 05:14

August 21, 2020

கோபி கிருஷ்ணன் சந்திப்பு

சி.சு. செல்லப்பா, நகுலன், க.நா.சு. சந்திப்புகளை விட கோபி கிருஷ்ணன் சந்திப்பே ஆக முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால், இதில் பைத்தியத்தன்மை பற்றியும், அதன் வரலாறு பற்றியும், அதற்கும் கலாச்சாரத்துக்கும் உள்ள உறவு பற்றியும், அதற்கும் அதிகாரத்துக்கும் உள்ள எதிர்வு நிலை பற்றியும், பைத்தியத்தன்மையின் வரலாற்றை எழுதுவதில் மிஷல் ஃபூக்கோவின் பங்களிப்பு பற்றியும், இவை எல்லாவற்றுக்கும் கோபி கிருஷ்ணனின் எழுத்துக்கும் உள்ள தொடர்பு பற்றியும் பேச இருக்கிறேன். கலந்து கொள்ளுங்கள். நூறு பேர் மட்டுமே கலந்து கொள்ள இயலும். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2020 10:32

பூச்சி 118: பொய்களின் உலகம்

நான் பயணம் செல்லும் போது தவறாமல் செய்யும் விஷயம், அங்கே உள்ள டான்ஸ் பார்களுக்குச் செல்வது.  குடிக்க அல்ல.  டான்ஸ் ஆட.  உஸ்பெகிஸ்தானில் என்ன காரணத்தினாலோ டான்ஸ் பார் சென்றாலும் நடனங்களில் கலந்து கொள்ளவில்லை.  சீனி எவ்வளவோ வற்புறுத்தினார்.  அந்தப் பெண்களும் வற்புறுத்தினார்கள்.  ஆனால் அந்த இடங்கள் ரொம்பவும் மலினமாக இருந்ததால் நான் என் வசத்திலேயே இல்லை.  எங்கேயோ ஒரு பிச்சைக்கார நாட்டுக்கு வந்து விட்டாற்போல் இருந்தது.  அது வறுமை மட்டும் அல்ல.  கலாச்சார வறுமை.  அருவருப்பாக ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2020 09:03

பூச்சி 117 : 13-inch MacBook Air Space Gray

சீனி என்ற அராத்துவிடம் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் – அல்லது பதினைந்து ஆண்டுகளும் இருக்கலாம், சரியாக ஞாபகம் இல்லை – எழுதித் தருகிறேன், நீங்கள் ஒரு காலத்திலும் எழுத்தாளன் ஆக முடியாது என்று சொன்னேன்.  காரணம், அந்தக் காலத்தில் நான் கையால் எழுதிக் கொண்டிருந்தேன்.  அல்லது, கணினிக்கு மாறியிருந்த காலம்.  எழுதுவது என்பது கடும் உடல் உழைப்பைக் கோருகின்ற ஒரு விஷயம்.  சீனியும் கடுமையாக வேலை செய்வார்.  பதினைந்து மணி நேரம் கண் துஞ்சாமல், கொஞ்சம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2020 03:56

August 20, 2020

பூச்சி 116 – Toy Boy

(இந்தப் பதிவு முப்பது வயதுக்குக் குறைவானவர்களுக்கு மட்டுமே.  பெரியவர்கள் இதைப் படிக்க வேண்டாம்.  படித்தால் தொடர்பு படுத்திக் கொள்ள முடியாது.) Toy Boy என்று ஒரு வெப்சீரீஸ்.  வெப்சீரீஸ் பற்றி எழுதுவதில்லை என்று உறுதி எடுத்திருப்பதால் டாய் பாய் பற்றி எழுதவில்லை.  இல்லாவிட்டால் ஒரு ஐம்பது பக்கம் எழுதும் அளவுக்கு விஷயம் உள்ள சீரீஸ் அது.  இதன் கதை  Male Strippers-ஐ சுற்றி வருவதால் இரண்டு விஷயங்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  இந்த ஆண் நடிகர்கள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2020 22:09

August 18, 2020

முன்னோடிகள் – 18

கோபி கிருஷ்ணனின் உலகுக்குள் நுழைந்து விட்டேன்.  இனி பத்து நாட்கள் நான் கோபியாகவே இருப்பேன்.  அதற்கு இடையில் என் உயிர் நண்பனின் ஒரு நாவலை எடிட் பண்ணிக் கொண்டிருப்பதாக அவ்வப்போது சொன்னேன் அல்லவா, அந்தப் பணியில் கடந்த ஐந்து மாதமாக ராப்பகலாக உழைத்தேன்.  மூன்று தினங்களுக்கு முன் முடித்தும் விட்டேன்.  பதிப்பகத்திடம் கொடுக்கும் நிலையில் இன்னும் நிறைய வேலை இருப்பதாகத் தெரிந்து, இப்போது காயத்ரியும் நானும் ஸூம் மூலமாக தினம் ஐந்து மணி நேரம் அந்தப் பணியைச் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2020 20:59

பூச்சி 115

நேற்றைய கட்டுரையை பூச்சி 114 எனக் கொள்ளவும்.  அதற்கு முன்னால் மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள் பற்றி எழுதியிருந்தேன்.  அந்தப் பதிவு மிகவும் மூர்க்கமாக இருப்பதாகவும், அதிலும் “செய்வதற்கு ஒன்றும் இல்லாவிட்டால் சன்னி லியோனியின் படத்தைப் பார்த்துக் கர மைதுனம் செய்யுங்கள்” என்பதெல்லாம் ரொம்ப அதிகம், அதை நீக்கி விட வேண்டும் என்றும் ஒரு நண்பர் ஆலோசனை சொன்னார்.  அவரைப் புரிந்து கொள்கிறேன்.  நான் இப்போது இருக்கும் இடத்துக்கு அது பொருந்தாது.  எல்லாம் புரிகிறது.  ஆனால் தமிழ் எனக்கு தெய்வத்தைப் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2020 08:58

August 16, 2020

சாருவை வாசிப்பது எப்படி? அபிலாஷ் சந்திரன்

என் எழுத்து குறித்து அபிலாஷின் பேச்சை நீங்கள் கேட்டீர்களா? முகநூலில் இருக்கிறது. கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம். என் எழுத்து குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அபிலாஷ் விளக்கம் சொல்லியிருக்கிறார். இது பற்றி விரிவாக எழுத விஷயம் இருக்கிறது. எடுத்துக் கொண்டிருக்கும் வேலையை முடித்து விட்டு எழுதுவேன். அபிலாஷின் உரையை அவர் பேசும்போதே கேட்டேன். வெகுவாக ரசித்தேன். பல சந்தேகங்களுக்கு அவர் கொடுத்த பதில் நான் கொடுத்திருக்கக் கூடிய பதில்களுக்கு நேர் எதிர் நிலையில் இருந்தாலும் அவையெல்லாம் ஒப்புக் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2020 22:36

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.