சாரு நிவேதிதா's Blog, page 245
September 21, 2020
135. அந்தணர் என்போர்…
இன்று முகநூலில் ராஜேஷ் எழுதியிருந்த பதிவு என் மனதைத் தொட்டது. அவர் தனக்கென்று வாங்கி வைத்திருந்த பரோட்டாவையும் சால்னாவையும் ஒரு நாய் வந்து சாப்பிட்டு விட்டது. மற்ற சமயமாக இருந்தால் அடி பின்னி எடுத்திருப்பார். நேற்று ஏதோ என் ஞாபகம் வந்ததால் விட்டு விட்டார். இன்று அந்த நாய்க்கு செம உதை இருக்கிறது. அதைத் தடுக்கவே இந்தப் பதிவு. எல்லா உயிரிலும் இருப்பது நம்முடைய ஆன்மாதான், எல்லா உயிருமே நாம்தான் என்றெல்லாம் நான் ராஜேஷுக்கு சொல்ல வரவில்லை. ... Read more
Published on September 21, 2020 01:12
September 20, 2020
பூச்சி 134: வணிக எழுத்தும் இலக்கியமும் (தொடர்கிறது)
அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு, வணக்கம், நலம் விழைகிறேன். என்னுடைய 17 வயதில் முதன்முதலாக உங்களை வாசித்தேன். இப்போது 25 வயதில் இருக்கிறேன். இத்தனை ஆண்டுகால வாசிப்பில் விடுபட்டவற்றையும், ஏற்கெனவே வாசித்தவற்றை மீள்வாசிப்பு செய்வதற்கும் உங்கள் புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் ஏற்கெனவே இருந்த உங்கள் புத்தகங்கள் நண்பர்களிடம் வாசிக்கக் கொடுக்க, அவை அப்படியே கைமாறிச் சென்றுவிட்டன. நான் புத்தகங்களைக் கடனளிக்கிறவன் அல்லன் என்றபோதிலும், புதிதாக வாசிக்கத் தொடங்கும் நண்பர்களுக்கு உங்கள் கட்டுரைத் தொகுப்புகளைத் தருவது வழக்கம். ... Read more
Published on September 20, 2020 08:43
இசை பற்றிய சில குறிப்புகள் – 1
இந்த விஷயத்தில் நான் இந்தச் சமயத்தில் இறங்கவே கூடாது. ஹராம். நாவலை முடிக்கும் அவசரத்தில் இருக்கிறேன். ஆனாலும் சூழலின் நெருக்கடி என்னை இந்த இடத்தை நோக்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறது. நான் எழுதாவிட்டால் இதை எழுத ஆட்களே இருக்க மாட்டார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அதனால்தான் அவ்வப்போது இதை எழுதி விடலாம் என்று நினைத்தேன். இது உங்களில் பெரும்பாலானவர்களுக்கு உவப்பளிக்காது என்று தெரியும். ஆனாலும் என்னைப் போல் யாரேனும் இதைப் பதிவு செய்யத்தான் வேண்டியிருக்கிறது. இது ஒரு ... Read more
Published on September 20, 2020 05:10
September 18, 2020
பூச்சி 133: வணிக எழுத்தும் இலக்கியமும்
இன்னும் ஐம்பது ஆண்டுகளில் தமிழ் செத்து விடும் என்று எழுதியிருந்ததைப் படித்து பல நண்பர்கள் வருத்தப்பட்டு எழுதியிருந்தார்கள். அதில் ஒரு சிறிய திருத்தம். பாலி முற்றிலுமாக கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே அழிந்து விட்டது. ஆனால் சம்ஸ்கிருதம் இப்போதும் அறிஞர்கள் மத்தியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. காரணம், பாலியில் இலக்கியம் இல்லை; சம்ஸ்கிருத இலக்கியமும் இலக்கணமும் கடல் போல் கிடக்கிறது. இப்படியாக தமிழையும் அறிஞர்கள் காலம் உள்ளளவும் படித்துக் கொண்டிருப்பார்கள். இப்போதும் அதுதானே நடந்து கொண்டிருக்கிறது? ப. சிங்காரத்தை ... Read more
Published on September 18, 2020 21:22
September 16, 2020
பூச்சி 132: மொழியின் அழிவு
நாவலை எழுதி முடிக்கும் வரை வேறு எந்தப் பஞ்சாயத்திலும் ஈடுபடக் கூடாது என்ற வைராக்கியம் ஒரே ஒரு வார்த்தையைப் பார்த்ததால் வயிறு பற்றி எரிந்து இங்கே வந்து விட்டேன். அந்த வார்த்தை கலோக்கியல். எழுதியவர் நம் அராத்து. இந்தப் பஞ்சாயத்து பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஹேப்பனிங் ப்ளேஸ் என்பதற்குத் தமிழில் வார்த்தை இல்லை. ஃபீலிங் என்பதற்குத் தமிழில் வார்த்தை இல்லை. மிஸ் யூ என்பதற்குத் தமிழில் வார்த்தை இல்லை. லவ் யூ என்பதற்குத் தமிழில் வார்த்தை ... Read more
Published on September 16, 2020 08:00
September 15, 2020
மாபெரும் விலை குறைப்பில் என் புத்தகங்கள்
இந்த விலைச் சலுகை இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் என்னுடைய புத்தகங்கள் தள்ளுபடி விலையில் இன்னும் ஐந்து நாட்களுக்குக் கிடைக்கும். புத்தக விழாவில் கூட பத்து சத தள்ளுபடிதான். ஆனால் இப்போது 25 சதவீதத்திலிருந்து நாற்பது சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. உதாரணமாக, ராஸ லீலாவின் விலை 900 ரூ. அது தள்ளுபடியில் 600 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஒருசில நூல்களுக்கு நாற்பது சதவிகிதத் தள்ளுபடியை விட அதிகம். இதைப் பயன்படுத்திக் ... Read more
Published on September 15, 2020 20:04
September 14, 2020
பூச்சி 131 : மாசிக் கருவாடு செய்வது எப்படி?
சமையல் பற்றி புத்தகம் எழுதினால் பிய்த்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறேன். நான் எழுதிய மிளகாய்ச் சட்னிக்கு ஏகப்பட்ட எதிர்வினைகள் வந்தன. என் நண்பர் டாக்டர் சிவராமன் சவூதியிலிருந்து தான் செய்த மிளகாய்ச் சட்னியைப் படம் பிடித்தே அனுப்பியிருந்தார். அதுவும் படிப் படியாக. அதாவது, மிக்ஸியில் போட்ட நிலையில். பிறகு அரைத்து வந்த பிறகு. செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் சவூதியில் கிடைத்ததா என்று கேட்க மறந்து போனேன். ஆனால் உலகம் சுருங்கிய பிறகு எல்லாமும் எல்லா இடத்திலும் ... Read more
Published on September 14, 2020 05:52
September 13, 2020
தமிழ்க் கேணியில் இதற்கு மேல் இறைக்க முடியாது: அபிலாஷ்
வர வர அபிலாஷின் அதகளம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இப்போதுதான் முகநூலில் அவரது இந்தப் பதிவைப் படித்தேன். அவருடைய அனுமதி இல்லாமலேயே இங்கே எடுத்துப் போடுகிறேன். எதாவது புக்கர் கிக்கர் கொடுத்தான்கள் என்றால் இதற்கான கட்டணத்தை அவரிடம் கொடுத்து விடுகிறேன். அதுவரை அபிலாஷுக்கு வெறும் நன்றி மட்டுமே. சமீபத்தில் நான் மிகவும் ரசித்துப் படித்த பதிவு இது. சார்த்தர் இதைத்தான் living intensely என்கிறார். அபிலாஷ் சொல்லும் இன்பத்தை ஒத்திப் போடுதல் (postponing the pleasure) பற்றியும் ... Read more
Published on September 13, 2020 09:08
September 12, 2020
ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் தள்ளுபடி விலையில் என் புத்தகங்கள்…
ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் என்னுடைய புத்தகங்கள் தள்ளுபடி விலையில் இன்னும் எட்டு நாட்களுக்குக் கிடைக்கும். புத்தக விழாவில் கூட பத்து சத தள்ளுபடிதான். ஆனால் இப்போது 25 சதவீதத்திலிருந்து நாற்பது சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. உதாரணமாக, ராஸ லீலாவின் விலை 900 ரூ. அது தள்ளுபடியில் 600 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஒருசில நூல்களுக்கு நாற்பது சதவிகிதத் தள்ளுபடியை விட அதிகம். இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Published on September 12, 2020 23:07
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

