அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு, வணக்கம், நலம் விழைகிறேன். என்னுடைய 17 வயதில் முதன்முதலாக உங்களை வாசித்தேன். இப்போது 25 வயதில் இருக்கிறேன். இத்தனை ஆண்டுகால வாசிப்பில் விடுபட்டவற்றையும், ஏற்கெனவே வாசித்தவற்றை மீள்வாசிப்பு செய்வதற்கும் உங்கள் புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் ஏற்கெனவே இருந்த உங்கள் புத்தகங்கள் நண்பர்களிடம் வாசிக்கக் கொடுக்க, அவை அப்படியே கைமாறிச் சென்றுவிட்டன. நான் புத்தகங்களைக் கடனளிக்கிறவன் அல்லன் என்றபோதிலும், புதிதாக வாசிக்கத் தொடங்கும் நண்பர்களுக்கு உங்கள் கட்டுரைத் தொகுப்புகளைத் தருவது வழக்கம். ...
Read more
Published on September 20, 2020 08:43