சமையல் பற்றி புத்தகம் எழுதினால் பிய்த்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறேன். நான் எழுதிய மிளகாய்ச் சட்னிக்கு ஏகப்பட்ட எதிர்வினைகள் வந்தன. என் நண்பர் டாக்டர் சிவராமன் சவூதியிலிருந்து தான் செய்த மிளகாய்ச் சட்னியைப் படம் பிடித்தே அனுப்பியிருந்தார். அதுவும் படிப் படியாக. அதாவது, மிக்ஸியில் போட்ட நிலையில். பிறகு அரைத்து வந்த பிறகு. செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் சவூதியில் கிடைத்ததா என்று கேட்க மறந்து போனேன். ஆனால் உலகம் சுருங்கிய பிறகு எல்லாமும் எல்லா இடத்திலும் ...
Read more
Published on September 14, 2020 05:52