சாரு நிவேதிதா's Blog, page 248
August 31, 2020
பூச்சி 121
மாணவர்கள் பணம் அனுப்ப வேண்டாம் என்று சொல்லியும் சில மாணவர்கள் மாதம் ஐநூறும் முன்னூறும் அனுப்புகிறார்கள். ஆனால் அதை விட ஆச்சரியம் என்னவென்றால் – இங்கே ஆச்சரியம் என்ற வார்த்தைப் பிரயோகம் அபத்தம், ஆனால் வேறு வார்த்தை போட்டால் பணம் அனுப்பும் அந்த நண்பர்களுக்கு மரியாதை இல்லை, உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது நம் மரபு, அதனால் ஆச்சரியம் என்றே வாசியுங்கள் – பத்துப் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பவர்களெல்லாம் மாதம் முன்னூறு ரூபாய் அனுப்புகிறார்கள். வேண்டாம் என்று ... Read more
Published on August 31, 2020 05:03
பூச்சி 121: டாண்டெக்ஸ் ஜட்டியும் கோடீஸ்வர நண்பனும்
என் வாழ்நாளில் ஒரு இரண்டு வருட காலம் பணப் பிரச்சினை என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தேன். பணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. காரணம், ஒரு நண்பர். கற்பனைப் பெயராக வினோத் என்று வைப்போம். அடா பொடா நண்பர். அவரைப் பொறுத்தவரை டேய் சாரு என்பதுதான் என் பெயரே. என் மீது பேரன்பு கொண்டவர். வேலைப் பளு காரணமாக நான் ஒரு மாதம் அவரை அழைக்காவிட்டாலும் அவரே அழைப்பார். அப்படி அவர் வாழ்வில் அவராக அழைக்கும் ஒரே ஆள் ... Read more
Published on August 31, 2020 04:47
பூச்சி 120: டாண்டெக்ஸ் ஜட்டியும் கோடீஸ்வர நண்பனும்
என் வாழ்நாளில் ஒரு இரண்டு வருட காலம் பணப் பிரச்சினை என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தேன். பணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. காரணம், ஒரு நண்பர். கற்பனைப் பெயராக வினோத் என்று வைப்போம். அடா பொடா நண்பர். அவரைப் பொறுத்தவரை டேய் சாரு என்பதுதான் என் பெயரே. என் மீது பேரன்பு கொண்டவர். வேலைப் பளு காரணமாக நான் ஒரு மாதம் அவரை அழைக்காவிட்டாலும் அவரே அழைப்பார். அப்படி அவர் வாழ்வில் அவராக அழைக்கும் ஒரே ஆள் ... Read more
Published on August 31, 2020 04:47
August 30, 2020
24. நாளும் நேரமும்
அன்புள்ள சாரு.. உங்கள் மூன்று மணிநேர உரையை இரண்டாகப் பிரித்து இரு நாட்கள் நடத்தலாம் என்ற யோசனை நல்லதல்ல என்பது என் கருத்து ஏன் ? உங்களது எழுத்தும் உங்கள் பேச்சும் அறிமனதுடன் உரையாடுவதை விட அறிமனதில் அறிந்ததை உடைத்து ஆழ்மனதைத் தொடுபவை. அனைத்தையும் மிகவும் அறிவுபூர்வமாகக் கட்டமைக்க முயலும் இந்தப் பைத்தியக்கார உலகில் தாக்குப் பிடிக்க நமக்கு ஒரு madness தேவை என்கிறார் கொர்த்தசார் உங்களது உரை கல்லூரிப் பேராசிரியர் உரை அன்று. மனோதத்துவ செயல்பாடு ... Read more
Published on August 30, 2020 03:28
23. முன்னோடிகள்
அன்புள்ள சாரு, நான் மதுரையில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது கண்டடைந்தேன். உங்களுடைய கட்டுரைகளைப் படித்த பிறகு உங்கள் நாவலை படிக்கலாம் என்று எண்ணி ராஸ லீலா வாங்கினேன். அதை மூன்று நாட்களில் படித்து முடித்தேன். அது எனக்கு என்றென்றைக்கும் நான் விரும்பிப் படிக்கும் புத்தகமானது. ராஸலீலா படித்து உங்கள் ரசிகன் ஆகி விட்டேன். நீங்கள் குறிப்பிடும் புத்தகங்கள், இசை, திரைப்படம் என அனைத்தையும் தேடி பார்த்து படிக்க ... Read more
Published on August 30, 2020 02:36
August 29, 2020
22. முன்னோடிகள்: கோபி கிருஷ்ணன் சந்திப்பு தொடர்கிறது…
நேற்று (29.8.2020) முன்னிரவு எட்டு மணியிலிருந்து பதினோரு மணி வரை கோபி கிருஷ்ணனின் கதைகளுக்குள் நுழையும் முன் மனப்பிறழ்வு பற்றிப் பேசினேன். பதினோரு மணி ஆகி விட்டதால் அதற்கு மேல் கேள்வி பதில் நேரம் ஆகி விட்டது. கோபியின் கதைகளுக்குள் செல்ல முடியவில்லை. ஆனால் அந்த மூன்று மணி நேரமும் ஃப்ரெஞ்ச் இலக்கியம் பற்றிய ஓர் அறிமுகம் கிடைத்திருக்கும். அது பற்றி வந்த சில எதிர்வினைகளை இங்கே தொகுத்துக் கொள்ளலாம். இந்த எதிர்வினைகள் எனக்கு மிகவும் முக்கியம். ... Read more
Published on August 29, 2020 23:14
August 27, 2020
நாளைய சந்திப்பு
நாளைய சந்திப்பில் நான் பேச இருப்பதுதான் என் உரைகளில் ஆக முக்கியமானதாக இருக்கும். மூன்றரை மணி நேரம் பேசுகிறேன் என்றால், அதில் இரண்டரை மணி நேரம் சில ஃப்ரெஞ்ச் இலக்கியவாதிகளைப் பற்றித்தான் பேசுவேன். அதற்கான தேவையிருக்கிறது. அதைத் திறவுகோலாக வைத்துக் கொண்டு நீங்கள் கோபி கிருஷ்ணனை அணுகலாம். வேறு எல்லா எழுத்தாளரையும் அணுகலாம். ஏன், இந்த வாழ்க்கையையும், இந்த உலக மாந்தரையும் கூட அந்தக் கோணத்தில் அணுகலாம். அதில் பேசப்பட இருக்கும் எழுத்தாளர்களின் பெயரை மனதில் குறித்து ... Read more
Published on August 27, 2020 20:38
ArtReviewவில் என் கட்டுரை
லண்டனிலிருந்து வெளிவரும் ArtReview பத்திரிகையில் என் கட்டுரை வந்துள்ளது. நான்கு ஆண்டுகளாக ArtReview Asia பத்திரிகையில் Notes from Madras என்ற பத்தியை எழுதி வருகிறேன். ஆர்ட்ரெவ்யூ ஏஷியா என்றால் இன்னும் ஒரு பக்கம் கூட கொடுப்பார்கள். இன்னும் வலுவாக இருக்கும் கட்டுரை. இது ஆர்ட்ரெவ்யூ என்பதால் கொஞ்சம் கனம் குறைவாக இருக்கிறதோ என்று எண்ணுகிறேன். சென்ற கோடைக்காலத்து இதழின் கட்டுரையிலும் ஜெயமோகன் பற்றிக் குறிப்பிட்டேன். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் நான் எந்த வெளிநாட்டுப் பத்திரிகையில் ... Read more
Published on August 27, 2020 07:38
August 24, 2020
பூச்சி 120: வரும் போகும்
என் நண்பர்கள் இருவர் ஃப்ரெஞ்ச் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் வழக்கம்போல் பாதியில் விட்டு விட்டேன். பாதியில் அல்ல; ஆரம்பத்திலேயே. நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஃப்ரெஞ்சை விட அது முக்கியம். ஃப்ரெஞ்சில் இறங்கினால் தினம் இரண்டு மணி நேரம் வீட்டுப் பாடத்துக்கு ஒதுக்க வேண்டும். தினமும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஒதுக்காவிட்டால் ஃப்ரெஞ்ச் அல்ல, எதுவுமே வராது. அதனால்தான் பெண்களிடமிருந்தும், பூனைகளிடமிருந்தும், ஆண்களிடமிருந்தும் ஒதுங்கி இருக்கிறேன். ஆனால் நடைப் பயிற்சியின் போது முழுக்க முழுக்க ஃப்ரெஞ்ச் ... Read more
Published on August 24, 2020 23:30
முன்னோடிகள் – 20
அப்பா, கோபி கிருஷ்ணனின் கதைகளைப் படிக்கும் போது இந்தக் கேள்வி உதித்தது: கோபியின் பல கதைகள் ஒரு பதிவைப் போல உள்ளது. அதாவது கதை என்கிற வடிவில் இல்லை. நம் தமிழ்நாட்டில் வரலாறு என்பதையே இப்படி இலக்கிய வடிவில்தான் அறிகிறோம். பண்டைய தமிழ் நாகரீகம் எப்படி இருந்தது என்பதைச் சங்க இலக்கியங்களிலும் இதர இலக்கியக்கியங்களிலும்தான் பார்க்கிறோம். ஆனால் மேற்கு நாடுகளில் அப்படியில்லை. கலங்கரைவிளக்கம் ஒன்று ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அதை வடிவமைத்தவர், கட்டிய ... Read more
Published on August 24, 2020 20:14
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

