சாரு நிவேதிதா's Blog, page 250
August 15, 2020
பூச்சி – 113
ரொம்ப காலத்துக்குப் பிறகு இங்கே வருவது போல் உள்ளது. எடுத்த வேலை இன்னும் முடியவில்லை. இன்று காலை நாலு மணிக்கே எழுந்து கரதலையாக உட்கார்ந்து முடித்து விடுவோம் என்று ஆரம்பித்தேன். எடுத்ததுமே ஆப்பு. வேர்டில் இருந்த ஃபைலைத் திறக்க முடியவில்லை. எர்ரர் என்று வந்தது. மணி நாலு. என் பையன்கள் முத்துக்குமாருக்கும் பாக்யராஜுக்கும் மெஸேஜ் கொடுத்தேன். எழுந்தவுடன் அழையுங்கள். ஒன்பது மணிக்கு முன்னதாக அழைக்க மாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் கொடுத்து வைத்தேன். எடிட்டிங் வேலையை முடித்து ... Read more
Published on August 15, 2020 05:15
August 14, 2020
ஒரு ஆலோசனை
சுமார் ஒரு லட்சம் வார்த்தைகள். எடிட்டிங் பணி. உயிர் நண்பன். முந்தாநாள் முடித்தேன். இப்போது கடைசியாகத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்று முடித்து விடுவேன். தினமும் பத்துப் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியதாயிற்று. மராமத்துதானே என்று நினைத்தேன். அப்படி இல்லை. மொழிபெயர்ப்பு என்பதால் மொழியில் அதிகவனம் செலுத்த வேண்டியதாயிற்று. பூச்சிக்கு எழுத படை மாதிரி இருக்கின்றன விஷயங்கள். நாளை எல்லாம் வரும். ஆச்சரியம் என்னவென்றால், நான் மௌனமானதும் வாசகர்களும் மௌனம். ஒரு மின்னஞ்சல் இல்லை. ... Read more
Published on August 14, 2020 17:07
August 12, 2020
சாருவை எப்படி வாசிப்பது? – அபிலாஷ்
Published on August 12, 2020 22:42
August 11, 2020
சொல் தீண்டிப் பழகு – 1,2
ஒரு முக்கியமான எடிட்டிங் பணியினால் பூச்சி வரவில்லை. ஆனால் எழுத எக்கச்சக்கமாகக் கிடக்கிறது. நாளை அந்தப் பணி முடிந்து விடும். நாளையிலிருந்து நமது ஃபாக்டரி ஆரம்பித்து விடும். அதற்கு இடையில் நீங்கள் படிக்க, நான் குமுதத்தில் எழுதி வரும் தொடரின் சில அத்தியாயங்களைத் தருகிறேன். 25 ஆண்டுகளாக – ஏன், அதற்கு மேலேயே இருக்கும் – லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் போய் வர வேண்டும் என்பது என் லட்சியமாக இருந்து வந்தது. அது என்ன லட்சியம்? கனவு ... Read more
Published on August 11, 2020 08:09
August 9, 2020
சாரு நிவேதிதாவை ஒரு பிரதியாக வாசித்தல் – அபிலாஷ்
நன்றி ஸ்ருதி டிவி
Published on August 09, 2020 09:07
சாரு நிவேதிதா கொண்டாடும் இசைக் கலைஞர்கள் – R. P. ராஜநாயஹம்
சாரு நிவேதிதா கொண்டாடும் இசைக் கலைஞர்கள் – நம் தேசத்து செவ்வியல் இசை வடிவங்கள் – R. P. ராஜநாயஹத்துடன் ஒரு கலந்துரையாடல். நன்றி ஸ்ருதி டிவி.
Published on August 09, 2020 09:06
August 6, 2020
சாரு நிவேதிதாவை ஒரு பிரதியாக வாசித்தல்: அபிலாஷ் சந்திரன்
கீழே உள்ள குறிப்பு அபிலாஷ் சந்திரன் எழுதியது. தேதியையும் நேரத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். 9-ஆம் தேதி ஆகஸ்ட். இந்திய நேரம் மாலை ஆறு மணிக்கு சாரு நிவேதிதாவை ஒரு பிரதியாக வாசித்தல் என்ற தலைப்பில் அபிலாஷ் சந்திரன் முகநூலில் பேசுகிறார். நானும் கலந்து கொள்வேன். எல்லோரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள் கிடையாது. குறுக்கே பேசக் கூடாது என்ற சாதாரண நடைமுறை மட்டும்தான். கேள்விகள் இருந்தால் மேலே கண்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். முடிந்தவர்கள் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களே,சாருவை ... Read more
Published on August 06, 2020 22:22
August 4, 2020
முன்னோடிகள் – 17
கோபி கிருஷ்ணனின் படைப்புகளுக்குள் நான் இன்னும் நுழையவில்லை. பதினைந்து தேதிக்கு மேல் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க ஆரம்பிக்கலாம். புத்தகம் நற்றிணையில் கிடைக்கிறது. ஒரே தொகுப்பு. மின்னூல் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. இணையத்தில் கிடைத்தவரை நாலைந்து கதைகளின் லிங்க்கை நேற்று கொடுத்திருந்தேன். வளன் அரசு கோபி பற்றி ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். அப்பா, கோபி கிருஷ்ணனின் கதைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஃபூக்கோவின் Madness and Civilization போலத் தமிழ்ச் சூழலில் எழுதப்பட்ட மிக முக்கியமான ... Read more
Published on August 04, 2020 22:50
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

