சாரு நிவேதிதா's Blog, page 251

August 4, 2020

பூச்சி 112

வேறு எந்தக் காரியத்திலும் ஈடுபடாமல் நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  அதனால்தான் பூச்சி கொஞ்சம் தாமதம்.  இடையில் எந்த வேலையும் செய்யக் கூடாது என்ற தீர்மானத்தையும் உடைத்து விட்டு குட்டி ரேவதியின் நிறைய அறைகள் உள்ள வீடு என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். அற்புதம்.  தொகுப்பு முழுமையும் பற்றி விரிவாக எழுத ஆசை.  இருந்தாலும் ஒரே ஒரு கதை பற்றி மட்டும் இங்கே சொல்கிறேன்.  கட்டுவிரியன் என்பது கதைத் தலைப்பு.  இன்றைய இந்தியாவின் கிராமத்து எதார்த்தம்.  இப்போதெல்லாம்தான் சாதிகள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 04, 2020 10:20

August 3, 2020

August 2, 2020

ஒரு சிறிய ஞாபகமூட்டல்

பல வாசக நண்பர்கள் க.நா.சு. பற்றிய என் உரையின் பதிவைக் கேட்டு எழுதி வருகின்றனர். ஒரு ஐம்பது பேர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் 47 பேர் இதுவரை சாருஆன்லைனுக்கு சந்தா அல்லது நன்கொடை அளிக்காதவர்கள். ஒவ்வொருத்தருக்காக நான் வேலை மெனக்கெட்டு “கட்டணம் இல்லாமல் அனுப்புவதில்லை; இதுவரை கட்டணம் இல்லாமலேயே இருபது ஆண்டுகளாகப் பேசி வந்திருக்கிறேன். இனிமேல் கட்டணம் வாங்குவதாக முடிவு செய்திருக்கிறேன். கட்டணம் வாங்காமல் இருந்தால் உரையின் பதிவை நான் நம்முடைய இணைய தளத்தில் நான் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 02, 2020 22:26

August 1, 2020

பூச்சி 111

சனி ஞாயிறுகளில் காலை நேர நடைப் பயிற்சி இசையிலேயே கழிகிறது.  வீட்டிற்குள் நடந்தால் மட்டுமே அது சாத்தியம்.  மாடிக்குப் போனால் நெட் இணைப்பு போய் விடுகிறது.  இசை கேட்க முடியவில்லை.  அங்கே கிளிகள்தான்.  எதிர்த்த வீட்டு மரங்களில் நூற்றுக்கணக்கான கிளிகள்.  அதிலும் அந்தப் பஞ்சவர்ணக் கிளியின் பேச்சைக் கேட்பதென்றால் அது ஒரு அற்புதம்.  சனி ஞாயிறுகளில் மட்டும் வீட்டுக்குள்ளேயே “எட்டு” போட்டு விடுவேன்.  Infinite walking என்று சொல்வார்கள்.  முழுக்க முழுக்க பாகிஸ்தானின் கோக் ஸ்டுடியோதான்.  இந்திய ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 01, 2020 21:30

முன்னோடிகள் – 16

மூன்று தினங்களாக முழு மூச்சாக எடிட்டிங் வேலையில் மூழ்கிக் கிடந்தேன்.  அதை முடித்தால்தான் பிற வேலைகளை கவனிக்க முடியும்.  இன்னும் ஒரு பத்து நாள் அதில் போகும்.  இன்று காலை ராகவனோடு நீண்ட நேரம் பேச முடிந்தது.  சி.சு. செல்லப்பா பற்றிய என் உரையைக் கேட்டாராம்.  மிகவும் சிலாகித்துச் சொன்னார்.  ராகவனிடம் ஒரு திறமை உண்டு.  எவ்வளவு சின்ன தப்பாக இருந்தாலும் கண்டு பிடித்து விடுவார்.  அவர் கண்ணுக்கோ காதுக்கோ அது மாட்டி விடும்.  ஜீவனாம்சம் நாவலில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 01, 2020 08:10

July 28, 2020

முன்னோடிகள் – 15

To You Through Me என்ற தலைப்பு அழகாக இருந்தாலும் ஆங்கிலத்தில் இருப்பதால், புத்தகங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது பிடிக்காது என்பதால் இந்தத் தலைப்பை முன்னோடிகள் என்று மாற்றி விடலாம் என்று பார்க்கிறேன்.  இலக்கிய முன்னோடிகள் என்று ஜெயமோகன் ஒரு பெரிய புத்தகம் (உண்மையில் இங்கே ‘பெரிய’ தேவையில்லை, பழக்க தோஷமாக வந்து விட்டது, மன்னிக்க) எழுதியிருக்கிறார் என்றாலும் அதில் உள்ள முதல் பாதியை அடித்து விட்டு முன்னோடிகள் என்று வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன்.  இன்று ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2020 22:48

சாருவை ஒரு பிரதியாக வாசித்தல்: ஆர். அபிலாஷ்

எனது நீண்ட கால நண்பரும், சக எழுத்தாளரும், பெங்களூர் க்றைஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியருமான அபிலாஷ் மேற்கண்ட தலைப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி இந்திய நேரம் மாலை ஆறு மணிக்கு உரையாற்ற இருக்கிறார். விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பின்வருவது அபிலாஷின் ப்ளாகில் எழுதியிருப்பது: http://thiruttusavi.blogspot.com/2020... http://thiruttusavi.blogspot.com/2020... நண்பர்களே,சாருவை வாசிப்பதில் பல குழப்பங்கள், இடர்கள் நமக்கு உள்ளன. இவை அவர் நவீனத்துவ எழுத்தாளர்களிடம் இருந்து வேறுபட்டவர் என்பதாலோ, ஒரு transgressive எழுத்தாளர் என்பதாலோ மட்டுமல்ல. மிக முக்கியமாக சாரு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2020 02:47

July 27, 2020

To You Through Me – 14

நேற்றைய க.நா.சு. உரை இனிதே முடிந்தது.  மூன்று மணி நேரம் நிறுத்தாமல் பேசினேன். நாற்பது பக்கங்களுக்குக் குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன்.  அதில் பதினைந்து பக்கங்களைத்தான் உபயோகப்படுத்தினேன்.  அதற்கே மூன்று மணி நேரம்.  காலை ஆறிலிருந்து ஒன்பது மணி வரை.  பிறகு கேள்வி பதில் முக்கால் மணி நேரம்.  மொத்தம் நாற்பது பக்கக் குறிப்புகளையும் உபயோகப்படுத்தியிருந்தால் மதியம் பனிரண்டு ஆகியிருக்கும்.  பேசியிருக்கவும் முடியும் என்றே தோன்றியது.  வாசகர் வட்டச் சந்திப்புகளில் அப்படித்தானே நடக்கும்.  என்ன, பக்கத்தில் ரெமி மார்ட்டின் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2020 03:31

July 24, 2020

ஜூலை 26 காலை ஆறு மணி: கநாசு பற்றிய உரை

ஞாபகப்படுத்துகிறேன். நாளை காலை ஆறு மணி. இந்திய நேரம். அமெரிக்க நேரத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். Satheesh waran is inviting you to a scheduled Zoom meeting.Topic: Session with Charu – கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம்Time: Jul 26, 2020 06:00 AM Mumbai, Kolkata, New Delhi Join Zoom Meetinghttps://zoom.us/j/9205225069?pwd=SHhz... Meeting ID: 920 522 5069Passcode: 7Xed4Nவழக்கமான நடைமுறைகள் தான்:1. Zoom-ல் இருக்கும் வரம்புகளின் காரணமாக 100 நபர்கள் மாத்திரமே ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2020 21:27

பூச்சி 110

க.நா.சு.வைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இப்போது வேறு எதையும் தொடக் கூடாது.  ஆனால் நான் பெருந்தேவியின் கவிதைகளுக்குப் பெரும் ரசிகன்.  ஏற்கனவே பெருந்தேவியின் கவிதை பற்றிப் பலமுறை எழுதியும் இருக்கிறேன்.  இப்போது இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் மாட்டிக் கொண்ட அவர் உரைநடையாக எழுதித் தள்ளுகிறார்.  குறுங்கதைகள்.  ஏற்கனவே சில கதைகளைப் படித்து “ஏன் என்னிடம் முன்னரே சொல்லவில்லை?” என்று அவரிடம் சண்டை போட்டிருக்கிறேன்.  அதனால் இப்போது சில இணைப்புகளை அனுப்பியிருந்தார்.  உடனே அவசர அவசரமாகப் படித்தேன்.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2020 10:16

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.