மூன்று தினங்களாக முழு மூச்சாக எடிட்டிங் வேலையில் மூழ்கிக் கிடந்தேன். அதை முடித்தால்தான் பிற வேலைகளை கவனிக்க முடியும். இன்னும் ஒரு பத்து நாள் அதில் போகும். இன்று காலை ராகவனோடு நீண்ட நேரம் பேச முடிந்தது. சி.சு. செல்லப்பா பற்றிய என் உரையைக் கேட்டாராம். மிகவும் சிலாகித்துச் சொன்னார். ராகவனிடம் ஒரு திறமை உண்டு. எவ்வளவு சின்ன தப்பாக இருந்தாலும் கண்டு பிடித்து விடுவார். அவர் கண்ணுக்கோ காதுக்கோ அது மாட்டி விடும். ஜீவனாம்சம் நாவலில் ...
Read more
Published on August 01, 2020 08:10