நேற்றைய க.நா.சு. உரை இனிதே முடிந்தது. மூன்று மணி நேரம் நிறுத்தாமல் பேசினேன். நாற்பது பக்கங்களுக்குக் குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன். அதில் பதினைந்து பக்கங்களைத்தான் உபயோகப்படுத்தினேன். அதற்கே மூன்று மணி நேரம். காலை ஆறிலிருந்து ஒன்பது மணி வரை. பிறகு கேள்வி பதில் முக்கால் மணி நேரம். மொத்தம் நாற்பது பக்கக் குறிப்புகளையும் உபயோகப்படுத்தியிருந்தால் மதியம் பனிரண்டு ஆகியிருக்கும். பேசியிருக்கவும் முடியும் என்றே தோன்றியது. வாசகர் வட்டச் சந்திப்புகளில் அப்படித்தானே நடக்கும். என்ன, பக்கத்தில் ரெமி மார்ட்டின் ...
Read more
Published on July 27, 2020 03:31