சாரு நிவேதிதா's Blog, page 241
October 17, 2020
161. பிறவிப் பிணியும் பிறவிப் பேறும்…
இதுவரை பார்த்த வெப்சீரீஸில் (வெப்சீரீஸ் என்பதற்குத் தமிழ் என்ன?) என்னை ஆகக் கவர்ந்தது லூசிஃபர். (GOT பற்றிப் பேசவே கூடாது. அது எல்லாவற்றையும் கடந்த ஒரு தனி ராஜ்ஜியம். அது வெப்சீரீஸே இல்லை. அது ஒரு காவியம்.) அதில் வரும் நடிகர் டாம் எல்லிஸ் கிரேட் பிரிட்டனின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மட்டும் பிரிட்டிஷ் உச்சரிப்போடு பேச, மற்ற அனைவரும் அமெரிக்க உச்சரிப்பில் பேச படு ஜாலியாக இருந்தது. என்னைப் போன்ற அவ்வளவு ஆங்கிலப் ... Read more
Published on October 17, 2020 03:29
October 15, 2020
160. பணம்
அதிகாரம், புகழ், காதல் போன்ற வார்த்தைகள் மனித வாழ்க்கையில் செலுத்தும் ஆதிக்கத்தைப் பற்றி எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதிக் கொண்டே போகலாம். மொத்த மகாபாரதமே அதிகாரம் என்ற ஒரே வார்த்தையில் அடங்கி விடும். இன்றைய நிலையில் ஒவ்வொரு தேசத்தின் ராணுவ நடவடிக்கைகளும் அதற்கு செலவிடப்படும் தொகையும் அதிகாரத்தில் வரும். என் கடவுளே உன் கடவுளை விட உசத்தி என்ற எண்ணத்திலிருந்து உருவாவதே இன்றைய மதக் கலவரங்கள். செப்டம்பர் 11 தாக்குதலும் அஃதே. உலக வரலாற்றையே இந்த மூன்று ... Read more
Published on October 15, 2020 01:42
October 13, 2020
அசோகா: ஹ்ருதய சூத்ரம்
நாவல் பற்றி எதைச் சொன்னாலும் அது சஸ்பென்ஸை உடைத்து விடும் என்றுதான் இருந்தேன். ரொம்ப சிரமப்பட்டு வாயைத் திறக்காமல் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் மூன்று தினங்களாக ஹ்ருதய சூத்ரம் என்ற அத்தியாயத்தை எழுதி முடித்து விட்டுப் பார்த்தால் கையா சம்ஸ்கிர்த் (Gaiea) என்ற பெண் ஹ்ருதய சூத்ரத்தை பிரமாதமான குரலில் பாடியிருக்கிறார். உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஹ்ருதய சூத்ரத்தைக் கையில் வைத்துக் கொண்டு கேட்டுப் பாருங்கள். கொகேய்ன் பொடியை மூக்கின் வழியே உறிஞ்சியது போல் ... Read more
Published on October 13, 2020 03:28
October 10, 2020
158. மொழி
நவம்பர் முதல் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் காலை ஆறு மணிக்கு புதுமைப்பித்தன் பற்றிப் பேசுகிறேன். அந்த Zoom சந்திப்பை ஒருங்கிணைத்துக் கொடுக்க உங்களில் யாராலும் முடியுமா? சதீஷ்வருக்கு வேலை வந்து விட்டது. ஐந்து சந்திப்புகளைத் தொடர்ந்து செய்து கொடுத்தார். முடிந்தவர்கள் எனக்கு எழுதுங்கள். நிறைய பேர் முன்வருவார்கள் என்று எண்ணி சும்மா இருந்து விடாதீர்கள். இப்படிப் பொத்தாம் பொதுவாகப் போடும்போது ஒரு எதிர்வினை கூட வருவதில்லை என்பதே என் அனுபவம். ஆனால் நான் போன் செய்து ... Read more
Published on October 10, 2020 02:17
October 8, 2020
157. க.நா.சு.வின் 55 ரஜாய் பெட்டிகள்
நேற்று எழுதிய இனிய அனுபவத்துக்கு ராம்ஜி ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். அது: செருப்பை வெளியில் வைத்து விட்டு சாஷ்டாங்கமாக உங்கள் காலில் விழுந்து, தற்கொலை செய்து கொள்ளாமல் நான் இன்று வாழ்வதே உங்கள் எழுத்தை படித்த பின் தான் என்று எங்கோ ஒரு கிராமத்திலிருந்து வந்த அந்த இளம் மாணவன் சொன்ன தருணம். 80 வயது கடந்த மூதாட்டி புத்தக அரங்கிற்குள் வந்து பழுப்பு நிறப்பக்கங்களில் நீங்கள் தீ ஜாவை பற்றி எழுதியதைப் பேசி நெகிழ்ந்த தருணம். ... Read more
Published on October 08, 2020 23:14
156. இனிய அனுபவம்
என் பதின்ம வயது கொடூரமானது. கொடூரமானது என்றால் மிகவும் கொடூரமானது. உடலியல் ரீதியாக மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன். வீதியில், என்னைக் காணும் சிறுவர்கள், ‘ஏய் பைத்தியமே’ என்று கல்லால் அடிப்பார்கள். முப்பத்தி நான்கு வயதாயிற்று. இன்னும் திருமணமாகவில்லை. திருமணமாகவில்லை என்பதைக் காட்டிலும் யாரும் பெண் கொடுக்கவில்லை என்பதே சரி. இதற்கு, என்னுடைய கடந்த காலமும் ஒரு காரணம். பதின்ம வயதில், உடலியல் ரீதியாக என்றால் இருபதுகளில், மனோரீதியான வன்முறைக்கு உள்ளாகி இருக்கிறேன். அதை விளக்குவது சிக்கலானது. ஒரு மாதிரியாக ... Read more
Published on October 08, 2020 09:28
155. நேசமித்ரன், ஒக்தாவியோ பாஸ், ரொனால்ட் சுகேனிக் மற்றும் சிலர்…
சில தினங்களுக்கு முன்பு ஒரு இளைஞர் எனக்கு ஒரு கடிதம் எழுதி தான் ஒரு நாவல் எழுதியிருப்பதாகவும் அதை நான் படித்துப் பார்க்க வேண்டும் என்றும் சொன்னார். ஐயோ, அசோகாவை முடிக்கும் வரை (மார்ச்) என்னால் எந்தப் பக்கமும் திரும்பக் கூட முடியாதே என்றேன். நான் தான் அவரது ஆதர்சம் என்று அதற்கு முன்பே கூட சில கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவர் விடவில்லை. நாவல் 150 பக்கம், வெறும் ஐந்து பக்கத்தைப் படித்தால் கூடப் போதும் என்றார். ... Read more
Published on October 08, 2020 04:15
October 6, 2020
154. இருவர்
கடந்த பத்தாண்டுகளில் நான் கண்டெடுத்த இரண்டு புதையல்கள் அராத்துவும் சாதனாவும். அராத்துவை இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு எந்த எழுத்தாளரும் எழுத்தாளராக ஒத்துக் கொள்ளப் போவதில்லை. சீ அசிங்கம் என்றுதான் ஒதுக்குவார்கள். எனக்கு 66 வயது ஆகியும் இன்னும் இந்த சீ அசிங்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதைப் பற்றி நான் கவலையும் படுவதில்லை. அராத்துவோ ஒரு படி மேல். போங்கடா dickheads என்று திட்டிவிட்டுப் போய் விடுவார். (ஆனால் அராத்துவை இலக்கிய ஏரியாவுக்கு வெளியே உள்ள இளைஞர்கள் ... Read more
Published on October 06, 2020 22:18
என்ன பெயர் வைக்கலாம்?
வணக்கம் சாரு. நான் வசிக்கும் பகுதிக்கு எழுத்தாளர்களின் பெயர்களை சூட்ட விருப்பம். தங்களின் ஆலோசனைகளையும் மற்றும் ஏதாவது மாற்றங்கள் இருப்பின் தயவுகூர்ந்து பகிரவும். நன்றி. பிரமிள் ஞானக்கூத்தன் ஔவை சூடாமணி பாரதி நகுலன் மௌனி அசோகமித்திரன் ஜெயகாந்தன் கல்கி சாண்டில்யன் சார்வாகன் ஆதவன் சுஜாதா வள்ளுவன் கம்பன் அம்பை தி.ஜானகிராமன் மா. அரங்கநாதன் வல்லிக்கண்ணன் தொ.மு.சி.ரகுநாதன் ராஜம் கிருஷ்ணன் கிருஷ்ணன் நம்பி ஜி.நாகராஜன் கந்தர்வன் கு.அழகிரிசாமி பிரபஞ்சன் புதுமைப்பித்தன் ஆதவன் நீல பத்மநாபன் அகிலன் காசியபன் சிட்டி ... Read more
Published on October 06, 2020 06:38
153. ஒரு ஜாலியான மேட்டர்…
படித்து செம ஜாலியாக ஆகி விட்டதால் இதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதுகிறேன். மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள டி. தர்மராஜ் என் மதிப்புக்கு உரியவர். தமிழ்நாட்டில் நான் மதிக்கும் ஒன்றிரண்டு புத்திஜீவிகளில் அவர் ஒருவர். அவரது சமீபத்திய மரண ஆசை என்ற கதை மாதிரியான கட்டுரை பிரமாதமாக இருந்தது. அவர் இப்போது என்ன எழுதியிருக்கிறார் என்று பார்த்த போது யாரோ எழுதிய ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அது அவரது மரண ஆசை கதை ... Read more
Published on October 06, 2020 04:13
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

