சாரு நிவேதிதா's Blog, page 240

October 28, 2020

October 27, 2020

மனு ஸ்மிருதி

மனு ஸ்மிருதி பற்றிக் கருத்து கூறுபவர்கள் பெரும்பாலும் மனுவைப் படித்தது இல்லை. ஒரு வார்த்தை கூட. நான் அதை ஆங்கிலத்திலும் தமிழிலும் பலமுறை வாசித்திருக்கிறேன். இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளும் சரி தானா என்றும் சம்ஸ்கிருதத்தோடு ஒப்பிட்டும் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் சில சமயங்களில் மொழிபெயர்ப்பாளர்களே தங்கள் வசதிக்கேற்ப தகிடுதித்தங்கள் செய்வதுண்டு. இப்போது மனு ஸ்மிருதி பற்றிய பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு இது எல்லாமே ஒரு கேளிக்கை. இலக்கிய வாசிப்பே இல்லாத ஒரு கூட்டத்தில் இது எதிர்பார்க்கக் கூடியதும்தான். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 27, 2020 21:59

பகவான் கிருஷ்ணரும் பரமசிவனும் (ஒரு குட்டிக் கதை)

அது ஏன் கிருஷ்ணருக்கு ர் விகுதி, அடுத்ததுக்கு ன் விகுதி, ஏன் பெயர்களில் கூட இந்தப் பாகுபாடு என்ற ஐயம் உங்களுக்கு எழலாம்.  பரமசிவனும் கிருஷ்ணரும் இரண்டு அவதாரங்கள்.  நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவராகவே இருந்தாலும் இந்த அவதார விஷயங்களில் நம்பிக்கை கொண்டவராக இருக்க சாத்தியம் இல்லை.  அப்படிப்பட்ட ஆட்களெல்லாம் விவேகானந்தரோடு முடிந்து போய் விட்டார்கள்.  ஆனால் நான் அவதாரத்தை நம்புகிறேன்.  பரமசிவன் சாட்சாத் பரமசிவனின் அவதாரம்.  கிருஷ்ணர் சாட்சாத் கிருஷ்ணரின் அவதாரம்.  கிருஷ்ணரைப் பற்றி எனக்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 27, 2020 00:05

October 26, 2020

இன்னொரு அதிமுக்கியமான கதை

புதுமைப்பித்தன் எழுதிய இன்னொரு அதிமுக்கியமான கதை பிரம்மராக்ஷஸ் நித்தியத்துவத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப்பட்டு அழிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந்தது அவன் கதை.      அவன் பொன்னை விரும்பவில்லை. பொருளை விரும்பவில்லை. போகத்தை விரும்பவில்லை. மனக் கோடியில் உருவம் பெறாது வைகறைபோல் எழும் ஆசை எண்ணங்களைத் துருவியறியவே ஆசைப்பட்டான். மரணத்தால் முற்றுப்புள்ளி பெறாது, ஆராய்ச்சியின் நுனிக் கொழுந்து வளர வேண்டுமென்ற நினைப்பினால் அவன் ஏற்றுக் கொண்ட சிலுவை அது. அன்று முதல் – ஆம், அது நடந்து வெகுகாலமாகிவிட்டது – இன்றுவரை, ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 26, 2020 08:18

October 25, 2020

புதுமைப்பித்தனின் கபாடபுரம்

புதுமைப்பித்தனின் சில முக்கியமான கதைகளை நம் தளத்தில் கொடுத்து வருகிறேன். ஆனால் எந்த எதிர்வினையும் இல்லை. தொடர்ந்து கொடுக்கவா, நிறுத்தி விடவா? பின்வரும் லிங்கில் புதுமைப்பித்தனின் பல கதைகள் உள்ளன. அதில் கபாடபுரமும் உள்ளது. புதுமைப்பித்தன் அதை 75 ஆண்டுகள் முந்தி எழுதி விட்டார். இன்று எழுதியிருந்தால் அது மிகப் பெரிய உலக சாதனை. 75 ஆண்டு முந்தி விட்டதால் இன்றைய வாசகர்களுக்குத் தெரியாமலே போய் விட்டது. என்றாலும் எழுத்தாளர்கள் அனைவரும் படித்திருக்கிறார்கள். பலர் அது பற்றி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 25, 2020 04:06

October 24, 2020

க.நா.சு.வை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்த கதை

நான் படித்த இரண்டாவது கதை புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம். அதுதான் என்னை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்தது. அதைப் போன்ற கதை உலகத்துச் சிறுகதைகளிலேயே வெகுசிலதான் தேடினாலும் கிடைக்கும். க.நா.சு. புதுமையும் பித்தமும் என்ற நூலில் சிற்பியின் நரகம் : புதுமைப்பித்தன் 1. சூரியாஸ்தமன சமயம். காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் என்றையும்விட அதிக நெருக்கடி. கறுத்து ஒடுங்கிய மிசிர தேசவாசிகளும், வெளுத்து ஒடுங்கிய கடாரவாசிகளும், தசை வலிமையின் இலட்சியம் போன்ற கறுத்த காப்பிரிகளும், வெளுத்த யவனர்களும், தென்னாட்டுத் தமிழும், ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 24, 2020 07:24

இன்னொரு உலகச் சிறுகதை

சாப விமோசனம்: புதுமைப்பித்தன் ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை. சாலையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நொடிந்துபோன தசைக் கூட்டத்திலும் வீரியத்தைத் துள்ளவைக்கும் மோகன வடிவம்; ஓர் அபூர்வ சிற்பி பூலோகத்தில் இதற்காகவென்றே பிறந்து தன் கனவையெல்லாம் கல்லில் வடித்துவைத்தானோ என்று தோன்றும் அவ்வளவு லாகிரியை ஊட்டுவது. ஆனால் அந்தப் பதுமையின் கண்களிலே ஒரு சோகம் – சொல்லில் அடைபடாத சோகம் – மிதந்து, பார்க்கிறவர்களின் வெறும் தசை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 24, 2020 04:27

உலகின் மிகச் சிறந்த நூறு கதைகளில் ஒன்று

செல்லம்மாள் : புதுமைப்பித்தன் 1 செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள். நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று எட்ட வைத்துவிட்டு, செல்லம்மாளாக இருந்த அந்த உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று அரைக்கண் போட்டபடி திறந்திருந்த இமைகளை மூடினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக வசமிழந்து ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 24, 2020 04:16

October 20, 2020

என்னுடைய நாவல்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில்…

சமீப காலமாக என்னை வாசிக்க ஆரம்பித்திருக்கும் பலருக்கும் என் நாவல்களில் பரிச்சயம் இருப்பதில்லை. அவர்கள் என் கட்டுரைத் தொகுப்புகளையே படித்திருக்கிறார்கள். இப்போது ஸீரோ டிகிரியின் எழுத்து பிரசுரத்தில் என்னுடைய எல்லா நாவல்களும் சேர்த்து 1499 ரூ. விலையில் கிடைக்கிறது. 34 சதவிகிதத் தள்ளுபடியில். இதை யாவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 20, 2020 03:22

October 19, 2020

162. இந்தியா பற்றி சில நல்ல வார்த்தைகள்…

வரும் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை (நவம்பர் 1, இந்திய நேரம் காலை ஆறு மணி) புதுமைப்பித்தன் பற்றிய என் உரைக்குத் தயாராகுங்கள்.  புதுமைப்பித்தனின் கதைகள் இணையத்திலும் கிடைக்கும்.  ஐந்து கதையாவது படித்திருந்தால் நல்லது.  *** என் எழுத்துக்கு யாரிடமிருந்து எதிர்வினை வருகிறதோ இல்லையோ என் நண்பர் பாலசுப்ரமணியனிடமிருந்து குறைந்த பட்சம் ஐந்து கடிதங்களாவது வந்து விடும்.  பாராட்டும் கடிதங்கள் அல்ல, எதிர்வினைகள்.  பல சமயங்களில் அவர் கொடுக்கும் விவரங்கள் எனக்குப் பெரிதும் உதவி செய்திருக்கின்றன.  கடுமையான ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 19, 2020 21:57

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.