சாரு நிவேதிதா's Blog, page 236

November 20, 2020

Pithy thoughts – 14

ஆயுதங்கள் மாறின தேசங்கள் மாறின குதிரை விமானமாயிற்று ஆனாலும் காதலில் தோல்வியுற்ற மனிதன் இன்னமும் மதுவைத்தான் நாடி ஓடிக் கொண்டிருக்கிறான் கணவனின் துரோகம் தாங்க முடியாத பெண் இன்னமும் அரளி விதையைத்தான் அரைத்துக் கொண்டிருக்கிறாள் இன்னமும் ஒரு குழந்தை தாயைத் தேடி அழுது கொண்டிருக்கிறது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2020 07:46

172. டிஸம்பர் 18

அந்நியன் சமாச்சாரத்தை இனி ஒருபோதும் எழுத மாட்டேன்.  அது என் வாசகர்களுக்குக் கொஞ்சம் மனக்கிலேசத்தை அளிப்பதாக அறிகிறேன்.  இவர் ஏன் இதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதாகவே பல கடிதங்கள் வந்துள்ளன.  இனி அந்த சப்ஜெக்டைத் தொட மாட்டேன்.  அதுவே கடைசி.  நான் தீபாவளி அன்று ஊரில் இருக்கத் தேவையில்லை; பொங்கலுக்கும் இருக்க வேண்டாம்; ஏன், ஊரே கொண்டாட்டமாய்க் கிடக்கும் ஜனவரி ஒன்று கூட ஊரில் இல்லாமல் போனால் அத்தனை பிரச்சினை வராது.  ஆனால் டிசம்பர் 16 நான் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2020 02:56

November 19, 2020

Pithy thoughts – 13

பால்வீதி பார்க்க அந்த அராபியப் பாலைவனத்துக்கு சகாக்களுடன் சென்றிருந்தேன் அரபுச் சட்டத்துக்கு அஞ்சி மதுபானம் எடுத்துப் போகவில்லை ஆனாலும் கில்லாடி பிரபு எனக்காகக் கொண்டு வந்திருந்த ஒரே ஒரு போத்தலை தீர்த்தம்போல் குடித்துத் தீர்த்தோம் எல்லாரும் மூத்தவன் என்பதால் என் பங்கு அதிகமாச்சு மணலில் படுத்தால் தேள் வரும் பாலைவனத் தேள் உயிரைக் குடிக்குமென்று உள்ளே போகச் சொல்லி கூடாரத்தைக் காண்பித்தான் பிரபு பால்வீதிக்கு முன்னால் உயிரும் மயிரும் ஒண்ணு என்று சொல்லி துண்டை உதறி மணலில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 19, 2020 08:18

November 18, 2020

171. அந்நியன் (2)

அசோகமித்திரன் மிக நெருக்கமாகப் பழகிய ஒரு இலக்கிய நண்பர் அழகியசிங்கர்தான்.  அவரை அசோகமித்திரனுக்கு ரொம்பப் பிடிக்கும். வயதான காலத்தில் அசோகமித்திரனுக்கு மிகவும் உதவியாக இருந்தார் சிங்கர்.  சிங்கரை அசோகமித்திரன் நெருக்கமாக உணர்ந்ததற்குப் பல காரணங்கள் உண்டு.  அழகியசிங்கர் பிரச்சினைகள் இல்லாதவர்.  அசோகமித்திரன் இருந்த மகன் வீட்டுக்கு (தி.நகர்) அடுத்த தெருவில் இருந்தார் அழகியசிங்கர். மட்டும் இல்லாமல் இருவரும் கலாச்சார ரீதியாக ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.  எதில் சாதி இல்லாவிட்டாலும் உணவில் வந்து விடுகிறதே, என்ன செய்வது?  நான் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 18, 2020 21:34

170. அந்நியன்

காலையில் எழுந்ததும் ஒரு ஐந்து நிமிடம் எனக்கு வரும் மின்னஞ்சல்களைப் பார்ப்பேன்.  பொதுவாக எல்லாம் ங்கொம்மா ங்கோத்தா ரக கடிதங்கள்.  எப்போதாவது பாராட்டுக் கடிதங்கள்.  இரண்டையும் சமமாக பாவிக்கும் மனப்பக்குவப் பயிற்சியே அந்தக் காலை நேரக் கடித வாசிப்பு.  ஒருவர் ரேஷன் கடையில் கொரோனா நிவாரணமாகக் கொடுக்கும் ஆயிரம் ரூபாயை வாங்கி எனக்கு அனுப்புகிறார்.  இன்னொருவன் – அவன் எனது புதல்வர்களில் ஒருவன் என்பதால் ஒருமையில் சொல்கிறேன் – இப்போது பாதிரியாக ஆகி விட்டான்.  பாதிரி அங்கியின் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 18, 2020 16:52

5. இசை பற்றிய சில குறிப்புகள்

தமிழில் இசை பற்றி எழுதுபவர்களில் லலிதா ராமின் கட்டுரைகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.  அடுத்து, சேதுபதி அருணாசலம்.  என்னுடைய பழுப்பு நிறப் பக்கங்களில் தி. ஜானகிராமன் பற்றிய நீண்ட கட்டுரையில் சேதுபதி அருணாசலத்தின் தி.ஜானகிராமன் பற்றிய கட்டுரைகளிலிருந்து பல மேற்கோள்களை எடுத்திருக்கிறேன்.  சேது அருணாசலத்தின் கட்டுரைகளை என் source-ஆக அதில் குறிப்பிட்டும் இருக்கிறேன். இன்று காலையில் பாலாசுப்ரமணியன், இசை குறித்து தி.ஜா. எழுதியவற்றை சேதுபதி அருணாசலம் தொகுத்து எழுதியிருக்கும் கட்டுரையின் (தி. ஜானகிராமனின் இசையுலகம்) இணைப்பை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 18, 2020 05:14

November 17, 2020

4. இசை பற்றிய சில குறிப்புகள்

ஒருவர் பிறந்ததிலிருந்தே கண்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்.  ஒருவர் எழுதப் படிக்க ஆரம்பித்ததிலிருந்தே இலக்கியப் பிரதி எதையுமே தொட்டதில்லை.  ஒருவர் தன் வாழ்நாளில் ஒரு உலக சினிமாவைக் கூடப் பார்த்ததில்லை.  தெரிந்ததெல்லாம் விஜய், அஜித், தனுஷ், சூர்யா.  ஒருவர் பிறந்ததிலிருந்தே நல்ல இசையைக் கேட்டதில்லை.  இவர்களுக்கெல்லாம் நீங்கள் காண்பதன் அற்புதங்களையும், இலக்கியத்தின், சினிமாவின், இசையின் சுவைகளையும் மேன்மைகளையும் எப்படிச் சொல்லிப் புரிய வைக்க முடியும்? விவேகானந்தரின் வாழ்வில் நடந்த விஷயத்தை உதாரணமாகச் சொல்லலாம்.  அவர் ஒரு அக்நாஸ்டிக்.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2020 05:25

November 15, 2020

Pithy thoughts – 12

ஒரு கள ஆய்வுக்காகக் கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டுக்குச் சென்றிருந்தபோது பாதியெரிந்த பிரேதத்தைப் புசித்துக் கொண்டிருந்த மனித சாயலிலிருந்த ஒரு உருவத்தைப் பார்த்து நீ கடவுளா மனிதனா எனக் கேட்டேன் சைத்தான் என்றது உருவம் எந்த ஊர் என்றால் அந்தரவாசி என்றது அதோடு விடாமல் என்னோடு கூடவே வந்தது வாயெல்லாம் வழிந்த குருதியைக் கழுவிக் கொள் எனச் சொல்லி என் பையிலிருந்த வாட்டர் பாட்டிலைக் கொடுத்தேன் சுத்தப்படுத்திக் கொண்ட சைத்தான் என்ன வரம் வேண்டும் கேள் என்றது ஆகா உன்னைத்தான் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2020 22:41

Pithy thoughts – 11

நிலம் தீ நீர் வளி விசும்பென ஐந்தும் கலந்ததால் உலகம் தன் சகாக்களிடமிருந்து பிரிந்து தனிமைப்படலாயிற்று உலகவாசியான மனிதனும் தனிமை கொண்டான் தனிமை வாட்டியதால் அந்தரவாசியாய்க் கடவுளைப் படைத்தான் பசியெடுத்த கடவுளுக்குத் தன்னையே தின்னவும் கொடுத்தான் உண்டு கொழுத்த கடவுள் செய்வதற்கேதுமில்லையென இனப்பெருக்கம் செய்ய பலிகள் பெருகின சமயங்களில் கடவுளே பலியான கதைகளும் நடந்தன பசி கொண்ட சிங்கமொன்று சின்னஞ்சிறு மான்குட்டியை வாஞ்சையுடன் நக்கிக் கொடுத்தது *** மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2020 22:32

169. விருக்‌ஷனின் மொழிபெயர்ப்பில் இந்தோனேஷியக் கவிஞர் சபார்டி ஜோகோ தமோனோவின் கவிதைகள்

எனக்கு ஆசிய நாடுகளின் – அதிலும் குறிப்பாக தென்கிழக்கு ஆசிய எழுத்தாளர்கள் யாரையுமே தெரியாது.  இந்தோனேஷியாவில் Garin Nugroho என்ற இயக்குனர் பற்றி மட்டுமே தெரியும்.  அவரது The Poet என்ற அற்புதமான படத்தைப் பற்றி பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருக்கிறேன்.  இப்போது விருக்‌ஷனின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இந்தோனேஷியக் கவிஞர் சபார்டி ஜோகோ தமோனோவின் (Sapardi Djoko Damono) கவிதைகளை வாசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.  அற்புதமான கவிதைகள்.  மிகத் தேர்ந்த மொழிபெயர்ப்பு.  தமிழ் மொழிபெயர்ப்பு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2020 07:42

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.