சாரு நிவேதிதா's Blog, page 233

December 14, 2020

178. இசை கேட்கும் காலம்

என்னுடைய புதுமைப்பித்தன் உரைகள் இரண்டும் எல்லோருக்கும் வந்து சேர்ந்து விட்டதா?  இல்லையென்றால் எழுதுங்கள். பதினெட்டாம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை ஏழு மணிக்கு ஸூமில் என்னைச் சந்திக்க விரும்புபவர்கள் எனக்கு எழுத வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  ஏனென்றால், இது ஒரு கலந்துரையாடல் என்பதால் பெரும் கூட்டமாக இருந்தால் யாருமே உரையாடவோ பேசவோ முடியாது.  ஒரு இருபத்தைந்து பேர் இருந்தால் போதும் என்று நினைக்கிறேன்.  அதனால் பாஸ்வேர்ட் போன்ற தகவல்களை பொதுவில் வைக்கவில்லை.  வர விரும்பிக் கேட்பவர்களுக்கு மட்டும் அனுப்புகிறேன்.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2020 21:49

December 12, 2020

177. ஓஷோ

அன்புள்ள சாரு, நான் சமீபத்தில் உங்களது சில புத்தகங்களை ஜீரோ டிகிரி பப்ளிகேஷன் மூலம் வாங்கினேன். அவற்றில் ஃபேன்ஸி பனியன் மற்றும் பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 1 இரண்டையும் படித்து முடித்து விட்டேன். இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்து இருந்தன. ஃபேன்ஸி பனியன் நாவல் மிகவும் புதுமையாக இருந்தது. நான் இதுவரை பல நாவல்கள் படித்திருந்தாலும் இது வித்தியாசமானதாக தோன்றியது. இது சுயசரிதை போலவும் இருக்கிறது அதே சமயம் புனைவு போலவும் இருக்கிறது. எது எவ்வளவு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2020 06:19

December 11, 2020

176. பண உறவு

என் நைனா ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாராக இருந்து உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றார்கள்.  ஆறு குழந்தைகள்தான் வாழ்வின் ஒரே பொழுதுபோக்கு.  ஒரே இன்பம்.  பைசா பைசாவாகச் சேர்த்து, உலக மகா கஞ்சனாக வாழ்ந்து சென்னை கௌரிவாக்கம் அருகே ஒரு ரெண்டு கிரௌண்டு நிலம் வாங்கி குடிசை போட்டுக் கொண்டு இன்பமாக வாழ்ந்தார்கள்.  என் கடைசித் தம்பிக்கு சுழி சரியாக இல்லாததால் உருப்படவில்லை. அதனால் அந்த நிலத்தையும் வீட்டையும் அவன் பெயரிலேயே எழுதி வைத்து விட்டு இறந்து போனார்கள்.  கூடவே அம்மாவும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2020 22:58

December 10, 2020

பூச்சி 175: ஆஞ்சநேயர்

S.Y. Krishnaswamy எழுதிய Thyagaraja: Saint and Singer என்ற புத்தகம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  யாருக்கும் ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் எழுதுங்கள்.  கிண்டிலில் கிடைத்தாலும் பரவாயில்லை.  அல்லது, ஏதாவது நூலகத்தில் இருக்கிறதா?  இசை தொடரை இன்றும் எழுத நிறைய உத்வேகம் கிடைத்தது.  இசை தொடருக்குக் கிடைத்தது போன்ற உற்சாகமான பாராட்டு இதுவரை என் வாழ்நாளில் பார்த்திராதது.  இன்றும் ஒரு பன்னிரண்டு மணி நேரக் கட்டுரைக்கு வேலை இருந்தது.  அசோகாவில் உட்கார்ந்து விட்டேன்.  மார்ச்  கெடு என்று ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 10, 2020 01:07

December 9, 2020

8. இசை பற்றிய சில குறிப்புகள்

இன்னும் ஒரு வாரம் கழித்தே இசைக்கு வருவேன் என்றேன்.  ஆனால் இதை இன்று எழுதாமல் போனால் மனதிலிருந்து போய் விடும் என்பதால் சுருக்கமாக எழுதி விடுகிறேன்.  பக்தி என்ற வார்த்தையை முந்தைய அத்தியாயத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.  திருக்குறள் போன்ற ஒரு உலகப் பொதுமறையை உலக இலக்கியத்தில் காண்பது அரிது.  ஈடு இணையில்லாத ஒரு அறநூல் அது.  அறநூல் மட்டும் இல்லை.  காமத்துப் பாலும் இருக்கிறது.  வள்ளுவரின் காலத்தில் எந்த நூலுமே கடவுள் வாழ்த்தோடுதான் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 09, 2020 04:29

December 8, 2020

7. இசை பற்றிய சில குறிப்புகள்

(இன்னும் ஒரு வாரம் கழித்துத்தான் இசைக்கு வருவேன். இந்தக் கட்டுரை சற்றே நீளமானது. எழுதி முடிக்க பன்னிரண்டு மணி நேரம் ஆயிற்று. படித்துப் பாருங்கள். உங்கள் கருத்தை அறிந்து கொள்ளவும் ஆவல்.) நேற்று எழுதப்பட்ட இசை கட்டுரையில் எடுத்த எடுப்பில் ஒரு தவறு இருந்தது போலும்.  பாலசுப்ரமணியன் தான் அதை இப்போது சுட்டிக் காட்டினார்.  அரியக்குடி மஹா பெரியவரைச் சந்தித்தது 1981 என்று உள்ளதே, அரியக்குடி 1967இலேயே காலமாகி விட்டாரே என்று கேட்டு, அந்த 1981 என்பது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2020 05:12

December 7, 2020

6. இசை பற்றிய சில குறிப்புகள்

இப்போது நாம் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.  ஒருமுறை அரியக்குடியைத் தன் இடத்துக்கு வரவழைத்த மஹாப் பெரியவர் அவரிடம் முத்துஸ்வாமி தீட்சிதரின் ஒரு கிருதியை வாசிக்கச் சொல்லிக் கேட்டு, பிறகு, அதை ஒவ்வொரு வரியாகப் பாடச் சொல்லி அதற்கான அர்த்தத்தை விளக்கியிருக்கிறார்.  1961 ஜூனில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.  மஹாப் பெரியவர் தேவகோட்டையில் நீண்ட காலம் முகாமிட்டிருந்தார்.  மௌன விரதத்தில் இருக்கிறார்.  ஜாடையில் கூட எதுவும் தெரிவிக்காத காஷ்ட மௌனம்.  ஒரு வாரம் பத்து ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 07, 2020 06:49

December 6, 2020

முன்னோடிகள்: புதுமைப்பித்தன் (2)

Dear sir, thanks for today’s session. It was a good opportunity for me to learn new perspectives on Pudumaipithan stories.  குறிப்பாக, இன்று நீங்கள் பகிர்ந்த கதைகளில் பல எனக்கு மிகவும் விருப்பமானவை; என்னை பாதித்தவை. காலனும் கிழவியும் கதை முதல்முறை வாசிக்கும்போது என்னிடம் ஒட்டியுள்ள வாழ்வின் அற்பத்தனங்களை, நம்பிக்கையின்மையை, அச்சங்களை உதறி வீசச் சொல்லும் ஒரு திறப்பாக அது எனக்குத் தோன்றியது. மரணம் குறித்த விசாரணையாக இருந்தாலும் வாழ்க்கையை நோக்கியே என்னை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2020 21:47

முன்னோடிகள்: புதுமைப்பித்தன் (1)

அன்புள்ள சாரு, புதுமைப்பித்தன் உரையின் முதல் பாகம் கேட்டேன். படு விறுவிறுப்பான சினிமா போல் இருந்தது. 5 நிமிடம் கேட்கலாம் என்று உட்கார்ந்தேன். முன்றரை மணிநேரம் கழித்துத்தான் எழுந்தேன். ஆனால் கோபி கிருஷ்ணன் உரை தான் இது வரை நான் கேட்ட உரைகளிலேயே உச்சம். நகுலன் உரையில் உங்கள் அறையின் ஒளி, நீங்கள் உங்கள் பூனைகளுடன் பேசுவது என்று அற்புத அனுபவமாக இருந்ததென்றால், கோபி கிருஷ்ணன் உரையைத் தமிழ்நாடு மின்சார வாரியம் வேறு தளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டனர். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2020 04:53

இசை பற்றிய சில குறிப்புகள்

நாளை காலைக்குள் இசை தொடரின் அடுத்த அத்தியாயத்தைப் பதிவேற்றுவேன். இசை கட்டுரையை ஒரு ஓட்டத்தில் எழுதி விட இயலாது. பல மணி நேரங்கள் இசைக் கச்சேரிகளைக் கேட்க வேண்டும். ஏற்கனவே பல முறை கேட்டிருந்தாலும் எழுதுவதற்கு முன் ஒரு முறை கேட்டு விட்டால்தான் எழுத வசதி. எனவேதான் இத்தனை நேரம் ஆகும் என்றேன். அடுத்த கட்டுரை இசை தொடரின் ஆறாவது அத்தியாயம். அந்த ஆறாவது அத்தியாயத்தைப் படித்துத் தொடர இந்த நான்காவது அத்தியாயத்தைப் படித்து விடுவதே நல்லது. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2020 02:52

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.