சாரு நிவேதிதா's Blog, page 235
November 25, 2020
Pithy thoughts – 22
10 Downingஇல் எட்டு ரவுண்டு டகீலா அப்புறம் கொஞ்சம் ஆட்டம் எல்லாம் முடித்து வோலாவில் தெரேஸாவை அனுப்பி விட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பக்கத்தில் ஒரு ஆள் யாரென்று புரியவில்லை எட்டு ரவுண்டு டகீலாவும் ஆடியதில் போய் விட்டதே யார் நீர் என்றதற்குக் கடவுள் என்று பதில் வந்தது சமீபத்தில் புதுமைப்பித்தனைப் படித்து பித்தமாகி விட்டதா என ஐயத்துடன் என்னய்யா உளறுகிறீர் அதெல்லாம் கதையில்தான் நடக்குமென்றேன் நிஜத்திலும் நடக்கும் என்ன வரம் வேண்டும் கேள் என்றார் ... Read more
Published on November 25, 2020 07:17
November 23, 2020
Pithy thoughts – 21
நீ எங்கும் நிறைந்தவள் என்பதை மறந்து விட்டு இங்கே வந்து விட்டேன் நீ சிந்தனைக்கு அப்பாற்பட்டவள் என்பதை மறந்து விட்டு உன்னைப் பற்றிச் சிந்தித்து விட்டேன் நீ வார்த்தைகளுக்குள் அடங்க மறுப்பவள் என்பதை மறந்து விட்டு உன்னைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன் (Source: Adi Shankara)
Published on November 23, 2020 06:47
Pithy thoughts – 19
அவனும் அவளும் போகம் துய்த்தார்கள் துய்ப்பின் உச்சத்தில் அவனுயிர் பிரிந்தது இப்போது அவளுக்கு அவனுடல் தொட அச்சம்
Published on November 23, 2020 00:50
November 22, 2020
Pithy thoughts – 18
அன்னையாகி நின்ற ஸ்மாஷன் தாராவிடம் என் தந்தையைக் காண்பி எனக் கேட்டேன் மூன்று ஆண்டுகள் மசானத்திலே சவ சாதனம் செய்தேன் மனமிரங்கிய தாரா தந்தையைக் காணும் மந்திரம் தந்தாள் அதைப் பார்த்த நகரசபை ஊழியரொருவர் மந்திரவாதியெனச் சொல்லி எனை அடித்து விரட்ட இந்தப் பெருநகரம் சவ சாதனத்துக்கு ஆகாதென மணிகர்ணிகா மகாமசானம் சென்றேன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இந்த மகாமசானத்தில் பிரேதம் எரியாத ஒரு கணமில்லை மசானத்தை சும்மா எட்டிப் பார்த்து விட்டுப் போனால் உனக்கு வரும் மசான ... Read more
Published on November 22, 2020 19:36
காந்தி ஹிட்லருக்கு எழுதிய இரண்டு கடிதங்கள்
காந்தி பற்றி என்னிடம் மாதம் ஒருமுறையாவது ஒரு வாசகர் கேள்வி கேட்டு விடுகிறார். கேள்விகள் பொதுவாக காந்தியை நிராகரிப்பதாகவே இருக்கும். அல்லது, முகநூலில் யாராவது காந்தியைக் கடுமையாக விமர்சித்து எழுதியதற்கு விளக்கம் கேட்டு இருக்கும். இவர்களுக்கு எல்லாம் நான் சொல்லக் கூடிய ஒரே பதில், Homer A Jack தொகுத்த The Gandhi Reader என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் என்பதுதான். நீங்களே படித்து முடிவு செய்து கொள்ளுங்கள். இங்கே காந்தியை விமர்சிப்பவர்கள் அனைவருமே காந்தி பற்றிய ... Read more
Published on November 22, 2020 02:23
November 21, 2020
பூச்சி 173: என் கவிதை
நான் வரையறைகளுக்குள் அடங்க மறுப்பவன். அடையாளங்களிலும் அடைபட மாட்டேன். எனவே என் கவிதைகள் பொது அர்த்தத்தளத்தில் கவிதைகளாகவே ஆக மாட்டா. கவிதைப் புலத்தில் எனக்கு முன்னுதாரணங்கள் இல்லை. நிகானோர் பார்ராவை எதிர்க் கவிதை என்கிறார்கள். ஆனால் அவருடைய எதிர்க் கவிதையே ஒரு அடையாளத்துக்குள் வந்து விட்டது. எந்த அடையாளத்திலும் வரையறையிலும் வராத கவிதைகள் என்றால் ஒரே ஒரு ஆள்தான் இருக்கிறார். அவர் கவிஞர்களுள் சாதி விலக்கம் செய்யப்பட்டவர். சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி. எக்கச்சக்கமான கவிதைகளை எழுதிக் குவித்தார். அவர் ... Read more
Published on November 21, 2020 21:55
Pithy thoughts – 17
பூஜ்யம் ஒன்று பூஜ்யமும் ஒன்றும் பூஜ்யம் பூஜ்யமும் ரெண்டும் பூஜ்யம் பூஜ்யமும் மூணும் பூஜ்யம் பூஜ்யமும் பூஜ்யமும் பூஜ்யம் ஒன்றும் பூஜ்யமும் ஒன்று ஒன்றும் ஒன்றும் ஒன்று ஒன்றும் ரெண்டும் ஒன்று ஒன்றும் மூணும் ஒன்று ஒன்றும் ஒன்றும் ஒன்று ஒன்று பூஜ்யம் ஒன்று பூஜ்யம் ஒன்றுக்குள் பூஜ்யம் பூஜ்யத்துக்குள் ஒன்று பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம் ஒன்று ஒன்று ஒன்று
Published on November 21, 2020 07:23
Pithy thoughts – 16
பிரம்மனின் கனவில் மழை பெய்து கொண்டிருக்கிறது மழையில் உலகம் அழிந்து கொண்டிருக்கிறது அழிந்து போன உலகத்தில் திரும்பவும் தலையெடுக்கிறது காலம் பிரம்மனின் கனவில் மேகங்கள் திரள்கின்றன…
Published on November 21, 2020 07:08
November 20, 2020
Pithy thoughts – 15
நேற்று வந்த வெர்னரின் கடிதத்தைப் படித்ததிலிருந்து பாவ்லோ கொய்லோவின் சாகசத் தனிமை ஞாபகத்தில் வந்து மோதுகிறது தென் ஃப்ரான்ஸில் மனித வாடையற்ற ஒரு நிலப்பகுதியில் ஆறு மாதம் பிறகு ப்ரஸீலில் குடும்பத்தோடு ஆறு மாதம் வால்டன் வனத்தில் தோரோ வாழ்ந்தது இரண்டு ஆண்கள் இரண்டு மாதங்கள் இரண்டு நாட்கள் வனம் அலுத்ததும் நகரத்துக்குச் சென்று விட்டார் தோரோ என் ஜெர்மானிய நண்பன் வெர்னர் முப்பத்து மூன்று வயது ஆய்வு மாணவன் குடும்பமில்லை உற்றமில்லை சுற்றமில்லை தேசமுமில்லை பணம் ... Read more
Published on November 20, 2020 22:44
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

