சாரு நிவேதிதா's Blog, page 232
December 18, 2020
வித்தியாசமான நாள்
இந்த ஆண்டுப் பிறந்த நாள் மிக வித்தியாசமாகக் கடந்தது. வைன் இல்லாதபடி. நண்பர்களை virtual-ஆகப் பார்த்தபடி. வீட்டில் இருந்தபடியே. ஒருபோதும் இப்படி வீட்டிலேயே இருந்ததில்லை. எல்லாம் கொரோனா. என் சகா கிம் கி டுக்கும் போய் விட்ட பிறகு இன்னும் உஷாராக வேண்டி வந்து விட்டது. மார்ஷல் ஆர்ட்ஸ் வீரன். ப்ரூஸ்லீ மாதிரி இருப்பான். ஸ்ப்ரிங் ஸம்மர் படத்தின் அசகாயசூரன் கிம் கி டுக் தான் என்பது பலரும் அறியாதது. பலரும் அவனை இயக்குனர் என்றே அறிவர். ... Read more
Published on December 18, 2020 19:17
என் எழுத்து பற்றிய மிகச் சிறந்த ஆய்வு
இதுவரை என் எழுத்து பற்றி பலரும் எழுதியிருக்கிறார்கள். முதலில் எழுதியவர்கள் ஜமாலன், நாகார்ச்சுனன். பிறகு இந்திரா பார்த்தசாரதி. அ. மார்க்ஸ். அதற்குப் பிறகு சிலர். இவர்கள் அத்தனை பேரையும் நான் எப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பதுண்டு. சென்ற ஆண்டு புத்தக விழாவின்போது எஸ். சண்முகத்துடன் ஜமாலனைப் பார்த்த போது அது ஜமாலன் என்று தெரியாமல் விட்டு விட்டேன். பிறகுதான் சண்முகம் சொன்ன போது அடடா, பேசாமல் போனோமே என்று மிகவும் வருத்தப்பட்டேன். போன் பண்ணிச் சொல்லியிருக்கலாம். அதையும் ... Read more
Published on December 18, 2020 17:00
எழுத்தறிவித்தவன்
அன்புள்ள சாரு , வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டதற்கு முக்கிய காரணமே நீங்கள் தான். 15 அல்லது 16 வயது இருக்குமென்று நினைக்கிறேன் முதன் முதலில் தேகத்தை கையில் ஏந்திய போது , என்ன இது அடல்ட் கண்டன்ட் நாவல் போலிருக்கிறதே என்று தான் வாசிக்க ஆரம்பித்தேன். அந்த வயதில் அது எதைப்பற்றிப் பேசுகின்றதென்று சுத்தமாகப் புரியவில்லை ஆனாலும் அது எழுதப்பட்டிருந்த விதம் என்னை அப்போது வாசிக்கத் தூண்டியது. அப்போதிருந்தே தேகம் என்பது மனதில் பதிந்த ஒரு ... Read more
Published on December 18, 2020 01:28
184. அந்த வெளிர்நீலப் புள்ளி…
அன்புள்ள சாரு, எப்போதும் எனக்குள்ளே ஒரு கர்வம் இருக்கும் – என் சிந்தனைகள் என் சார்புகள் எல்லாம் என்னாலே என் மூலம் உருவானது, நான் சுயம்பானவன் என நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் என் சிந்தனைகளின் ஆழத்தில் சென்று பாத்த்தால் அது எல்லாமே உங்களைப் படித்து, நீங்கள் பேசியதைக் கேட்டு உங்கள் சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு அதுவாகவே நான் மாறியிருக்கிறேன் என்பதே நிஜம். என்னை உருவாக்கிய உங்களுக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாரு. இந்த வீடீயோவை உங்களுக்கு சமர்பிக்கிறேன் சாரு, இதில் இருக்கும் ஒவ்வொரு வாக்கியமும் நீங்கள் என்னிடம் சொல்வது போலவே இருக்கும். இந்த வீடியோவில் சொல்ல வரும் கருத்துக்கள் கூட நீங்கள் ஏற்கனவே பல முறை கூறியவை தான் சாரு, இறைவன் படைத்ததை மீண்டும் அவருக்கே படைப்பது போல் இதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். சாரு இன்று மாலைக்கான zoom meetigல் கலந்துக்கொள்ள விருப்பமாக இருக்கிறேன், link தர முடியுமா? அன்புடன் கார்த்திக் வளனைப் போலவே கார்த்திக் என்னுடைய இன்னொரு பிள்ளை. கார்த்திக், முத்துக்குமார், ஸ்ரீராம் போன்ற நண்பர்கள் இல்லையேல் என்னால் இத்தனை எழுதியிருக்க முடியுமா என்பதே சந்தேகம்தான். என் குடும்பத்தில் ஒருவர் கார்த்திக். நானாக யாருக்கும் லிங்க் அனுப்பாததன் காரணம், நான் அனுப்பி அவர்களால் வர முடியாத சூழல் இருந்தால் அவர்களுக்கு மிகவும் தர்மசங்கடமாகப் போகுமே என்றுதான். மேலும், கார்த்திக் எல்லாம் மனோவிடம் ... Read more
Published on December 18, 2020 00:24
December 17, 2020
இனிது இனிது
சாரு, நீங்கள் எனக்குப் பொருள்வயமாக ஒன்றைக் கொடுத்தாக நான் கருதவில்லை நீங்கள் எனக்குள் இருளை நகர்த்தி இருக்கிறீர்கள் அதனால் அதுவரை நான் உணர்ந்திராத ஒரு விசாலமான அறையின் கதவு திறந்தது எனக்கு நீங்கள் அதை அடையாளம் காட்டினீர்கள் என் அம்மா அப்பா இவரெனச் சொன்னது போலிருந்தது இதெல்லாம் சொல்லியாக வேண்டும் அல்லது சொல்ல வேண்டாம் என்னுமளவு நீங்கள் அன்னியருமில்லை இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் *** செல்வகுமார்
Published on December 17, 2020 20:55
182. சில கடிதங்கள்
வணக்கம் சாரு, தாங்கள் மதுரை வந்து இருந்த பொழுது அலைபேசியில் தத்து பித்து என்று பேசிய அதே கோபிநாத் தான் நான். மன்னிக்கவும். இதற்கு முன் நான் இவரை நேரில் சந்தித்தால் என்ன பேசுவோம். என்று கனவு கண்டவர்களில் நீங்களும் ஒருவர்…….அதுவே தத்து பித்துவுக்குக் காரணம். கடந்த ஜுலை மாதம் என்னுடைய அவ்வா காலம் ஆனார் . என் மடியில் தான். இறப்பில் எதுவும் புதிதில்லை, அநேகமாக தங்களின் அவ்வா சிறுகதையில் வரும் அவ்வா போல் தான் ... Read more
Published on December 17, 2020 18:56
181. அடியேனின் எழுத்து
Hi Charu, நான் உங்கள் புத்தகங்களில் ‘தேகம்’, ‘மூடுபனிச் சாலை’ படித்து இருக்கிறேன். உங்கள் எழுத்து படிக்கப் பிடிக்கும். ஆனால் எழுத்து வகைமை புரியாமல் இருந்தது. சமீபத்தில் அபிலாஷ் பேசிய ‘சாருவை பிரதியாக வாசித்தல்’ உரை பெரிய திறப்பாக இருந்தது. அது உங்கள் படைப்புகளுக்குள் அணுக்கமாக என்னை அழைத்துச் செல்ல பெரும் உதவிபுரியும் என்று நம்புகிறேன். உங்கள் வலைப்பக்கத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். சமீபத்திய ‘இசை பற்றிய குறிப்புகள்’ சீரிஸ் அல்டிமேட் சாரு. எனக்கு இசைக் கேட்பவர்கள் ... Read more
Published on December 17, 2020 16:45
ஒரு வாழ்த்து
அன்புள்ள சாரு, உங்களது புதிய வாசகன் நான். உங்களது எழுத்திற்கும் எனக்குமான தொடர்பு “விருப்பு மற்றும் பதற்றத்திலிருந்து விருப்பிற்கு” என்பதாகிய ஒரு தொடர்பாகும். உங்களது எழுத்தைப் படித்தவுடன் பின்வரும் இரு நிலைகளில் ஏதோ ஒன்றையே நான் எட்டுகிறேன். ஒன்று: படித்தவுடன் விருப்பம் கொள்வது / பிடித்துப் போவது இரண்டு: படித்தவுடன் ஒருவாறான பதற்றத்திற்கு உள்ளாகி, ஏன் இப்படி எழுதுகிறார் எனும் உணர்வு தோன்றும். பின்னர் அது குறித்த சிந்தனை எழும். நம்முடைய பிரச்சினையைத் தானே எழுதுகிறார் அல்லது நம்மை சுற்றி இருப்போரின் பிரச்சினையைத் தானே எழுதுகிறார் என்ற எண்ணம் தோன்றும். பதற்றமின்றி மீண்டும் படிக்கும் நிலை அமையும், அதன் பின்னர் அவ்வெழுத்தில் விருப்பம் வரும் / பிடித்துப் போகும். இந்த இரண்டாம் நிலை ஏற்படக் காரணம், படிக்கவோ எழுதவோ பேசவோ கூடாது என வரையறுக்கப்பட்டவைகளையும் உங்கள் எழுத்து கொண்டுள்ளது. அதற்கும் மேலாக அதை எந்த ஒரு பாசாங்கும் இல்லாமல், உண்மையை உண்மையாய் நீங்கள் எழுதிச்செல்வது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நீங்கள் தரும் உண்மையை பெற்றுக்கொள்ள ... Read more
Published on December 17, 2020 08:00
180. நாளைய சந்திப்பு (2)
ஒரு முக்கியமான விஷயத்தை எழுத மறந்து போனேன். உங்களுக்கு என்ன வேண்டும், சொன்னால் வாங்கி வந்து கொடுத்து விட்டுக் கிளம்புகிறேன் என்று மனோ கேட்டபோது எதுவுமே ஞாபகம் வரவில்லை. ஆனால் அவர் கிளம்பிய அடுத்த கணம் ஒரு முக்கியமான விஷயம் ஞாபகம் வந்தது. நான் ஒரு தஞ்சாவூர்க்காரன் என்பதால் ஏற்பட்ட பழக்கம். இன்னமும் போகவில்லை. எப்போதும் போகாது. ஏனென்றால், நான் எதற்குமே அடிக்ட் ஆவதில்லை. பயங்கரமான அடிக்ஷன் குணமுள்ள கஞ்சாவுக்கே அடிக்ட் ஆகவில்லை. உணவில் மட்டும் காஃபிக்கும் ... Read more
Published on December 17, 2020 04:21
179. நாளைய சந்திப்பு
பாதிரியாரான வளன் நேற்றைய பதிவைப் படித்து விட்டு, குடும்பம் என்றால் இத்தனை பிரச்சினை இருக்கிறதா என்று ஆச்சரியத்துடன் கேட்டான். அவந்திகாவின் version-ஐ அவன் கேட்கவில்லை. அதைக் கேட்டால் இன்னும் பயங்கரமாக இருக்கும். “எழுத்தாளர்களையே கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது. நண்பர்களாகப் பழகலாம். கல்யாணம் மட்டும் பண்ணிக் கொள்ளவே கூடாது” என்பாள். ”கடவுளே மனிதனாகப் பிறந்து ஒரு கணவனாக வாழ்ந்தால் எப்படி வாழ்வானோ அப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் பார்த்தா இப்படிச் சொல்கிறாய்? சரி, அப்படி உனக்கு என்னதான் ... Read more
Published on December 17, 2020 00:04
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

