சாரு நிவேதிதா's Blog, page 231
January 3, 2021
நாகார்ஜுனர் – அபிலாஷ்
தமிழ்நாட்டில் செக்ஸ் ஸ்டார்வேஷன் பற்றித்தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஃபிலாசஃபி ஸ்டார்வேஷனும் இந்த அளவுக்கு இருந்திருக்கிறதா என்கிற அளவில் பிய்த்துக் கொண்டு போகிறது அபிலாஷின் நாகார்ஜுனா தத்துவ விவாதம். அபிலாஷ் நாகார்ஜுனரின் Mulamadyamakakarika என்ற நூலைப் பற்றி தினமும் அரை மணி நேரம் உரையாற்றப் போகிறேன் என்று சொன்னதும் புத்தாண்டு தினத்தில் ஏன் இந்த சோகச் செய்தி என்றே முதலில் நினைத்தேன். முதலில் அந்த நூலின் பெயரையே சரியா உச்சரிக்க வராதே? சம்ஸ்கிருதத்தில் பிரித்துப் பிரித்துப் போட ... Read more
Published on January 03, 2021 20:30
ஒரு அற்புதமான இலக்கிய அனுபவம்
கடந்த ஒரு ஆண்டாக பிரபலமாகப் பேசப்பட்டு வரும் ஒரு நாவலைப் படிக்க எடுத்தேன். பின்னட்டையிலேயே தப்பு. முருகண் என்று வருகிறது. ஒரு எழுத்தாளரின் பெயரை இப்படி முருகண் என்று போட்டிருக்கிறார்கள். அந்த நாவலை எழுதியவர் முருகண் அல்ல. அவர் வேறு. அவர் பெயரில் தப்பு செய்யவில்லை. என்ன ஆகிறது என்றால், இப்படி அட்டையிலேயே தப்பு இருந்தால் உள்ளே எப்படி இருக்கும் என்று பயம் உண்டாகி விடுகிறது. இருந்தாலும் நாவலைப் படித்து விடுவேன். வலுவான சிபாரிசு. எதையும் சுலபத்தில் ... Read more
Published on January 03, 2021 06:58
January 1, 2021
1.
எதையெல்லாம் நீ துறக்கிறாயோ… புத்தாண்டில் எழுதும் முதல் கட்டுரை. கிருமி முற்றாகப் போகவில்லை என்றாலும் நாம் பூச்சியை முடித்து விடுவோம். இதற்கு வேறு ஏதாவது ஒரு தலைப்பு வைக்க வேண்டும். அதுவரை எண்கள். சென்ற ஆண்டு நிறைய எழுதியவர்களில் என்னையும் சேர்த்திருந்தார் பா. ராகவன். சந்தோஷமாக இருந்தது. ஆனால் வேறொரு விஷயத்தை நான் உங்களுக்கு இதுவரை சொல்லவில்லையே என நினைத்து சற்று என் மீதே வருத்தமாகவும் இருந்தது. நான் எழுதிய பூச்சி அனைத்தும் நான் ஈடுபட்ட வேலையிலிருந்து ... Read more
Published on January 01, 2021 22:04
December 31, 2020
சிறப்புத் தள்ளுபடி
புத்தாண்டை ஒட்டி ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் என்னுடைய புத்தகங்களுக்கு மாபெரும் விலைக் குறைப்பை அறிவித்திருக்கிறார்கள். 35% இலிருந்து 50% சதவிகிதம் வரை விலைக் குறைப்பு. இதை நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். https://www.zerodegreepublishing.com/...
Published on December 31, 2020 02:51
December 30, 2020
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய சஞ்சய் சுப்ரமணியம் அவர்களுக்கு,
வணக்கம். உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுத எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. இருந்தாலும் கடைக்கோடி ரசிகனின் ஏதோ ஒரு மனத்தாங்கலை உங்களிடம் கொட்டி விடலாம் என்று எழுதுகிறேன். நான் சொல்வது முழுக்கவே தவறாக இருக்கலாம். இருந்தாலும் என் மனசாட்சி ‘இப்படி ஒரு பார்வையும் இருக்கலாம்தானே? இதை சம்பந்தப்பட்டவரிடமே சொல்லி விடலாமே?’ என்று சொன்னதால் மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு இதை எழுதத் துணிந்தேன். சமீபத்தில் ரா. கணபதி எழுதிய மகா பெரியவர் விருந்து என்ற நூலில் மகா ... Read more
Published on December 30, 2020 06:38
2021
2020 முடிய இன்னும் இருபத்து நான்கு மணி நேரம் இருக்கிறது. இதுவரை எந்த ஆண்டும் புத்தாண்டு பற்றிப் பெரிதாக யோசித்ததில்லை. எல்லா நாளும் ஒரே நாளே என்ற மனநிலையே எனக்கு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காட்டில் அராத்து புத்தக வெளியீட்டு விழா. கோலாகலம். சென்ற ஆண்டு கிழக்குக் கடற்கரைச் சாலை. அராத்து புத்தக வெளியீடு. இந்த ஆண்டு புத்தக வெளியீடு இருந்தாலும் நான் வருவதற்கில்லை என்று சொல்லியிருந்தேன். இப்போது நண்பர்கள் ஏற்காட்டில் சந்திப்பதாக அறிந்தேன். எனக்கு மிக ... Read more
Published on December 30, 2020 06:34
December 26, 2020
an open letter to Sanjay Subrahmanyan
இந்த வார குமுதத்தில் நான் எழுதியுள்ள மேற்கண்ட கடிதம் கடும் விவாதங்களுக்கு உட்பட்டிருப்பதை அறிந்தேன். நான் சற்றும் எதிர்பார்த்திராதவர்களெல்லாம் எனக்கு போன் செய்து பேசினார்கள். கடும் சர்ச்சையையும் விவாதத்தையும் எழுப்பியுள்ள அந்தக் கடிதத்தை என் ப்ளாக் வாசகர்களும் படிக்க வேண்டும் என்று பிரியப்படுகிறேன். பொதுவாக பத்திரிகைகளில் நான் எழுதுவதை என் ப்ளாகில் மறுபிரசுரம் செய்வது என் வழக்கம் இல்லை. எனவே நீங்களே குமுதத்தை ஆன்லைனிலோ, உள்ளூர் நண்பர்கள் கடையிலோ வாங்கிப் படிக்கலாம். படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
Published on December 26, 2020 02:40
188. ராம்ஜிக்கு ஒரு கடிதம்…
ஸீரோ டிகிரி பதிப்பக பார்ட்னரும் என் ஆருயிர் நண்பருமான ராம்ஜிக்கு, நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன் ராம்ஜி. இதை நான் உங்களுக்கு ஒரு போன் போட்டுக் கூட சொல்லியிருக்கலாம். அப்படிச் சொன்னால் அதை நீங்கள் விளையாட்டாக எடுத்துக் கொண்டு விடுவீர்கள் என்பதால் இப்படி ஒரு பகிரங்கக் கடிதமாக எழுதத் துணிந்தேன். விஷயம் இதுதான். ரொம்ப சிம்பிள். ஆனால் ரொம்பக் கஷ்டம். நானும் நேர்வழியில் செல்ல எத்தனையோ முயற்சி பண்ணினேன். 45 ஆண்டுகளாக முயற்சி பண்ணினேன். தெய்வத்தால் ஆகாது ... Read more
Published on December 26, 2020 02:01
December 21, 2020
Farewell, Damascus
Farewell, Damascus என்ற அருமையான நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். Ghada al-Samman எழுதியது. இதில் பல வாசகங்கள் நான் உணர்ந்ததைப் போலவே இருந்தன. இவர் என் நண்பரும் கூட. இந்த நாவல் அவருடைய இள வயது அனுபவங்களைச் சொல்வது. கிட்டத்தட்ட சுயசரிதை. அதில் ஒரு வாக்கியம்: The things you write shake people up, scare them. It isn’t that they hate you. In fact, what you say arouses their ... Read more
Published on December 21, 2020 17:04
December 20, 2020
186. இசையும் கொண்டாட்டமும்
பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஹேங் ஓவர் நேற்று வரை நீடித்தது. எல்லாம் ஓய்ந்தது என்று வேலையைத் தொடங்கிய போது சுநீல் கிருஷ்ணனின் வாழ்த்து வந்தது. சுநீல் கிருஷ்ணன் போன்ற ஒரு முக்கியமான படைப்பாளியை இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்தது பற்றிய வருத்தத்துடன் சென்ற ஆண்டுதான் அவருடைய நூல்களை வாங்கி வந்தேன். எடுத்திருக்கும் வேலையை முடித்து விட்டு அவரை வாசிக்க வேண்டும். இடையில் அவருடைய தளத்தில் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகளை வாசித்தபோது எக்ஸைல் நாவலின் அடியோட்டமாக நான் தொட்டிருக்கும் ... Read more
Published on December 20, 2020 04:22
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

