சாரு நிவேதிதா's Blog, page 239
November 4, 2020
நவம்பர் 8, ஞாயிறு இரவு 9 மணி ஸூம் சந்திப்பு
வரும் ஞாயிறு இந்திய நேரம் இரவு 9 மணிக்கு ஸூமில் வாசகர்களை சந்திக்கிறேன். இந்தச் சந்திப்பை சார்லட் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்திருக்கிறது. அமெரிக்க நேரம் காலை பத்தரை மணி. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். tiny.cc/charlottesangam என்பதை க்ளிக் செய்தால் இணைந்து கொள்ளலாம். நிறைய பேர் வருவார்கள் என்பதால் முன்னூறு பேர் கலந்து கொள்ளும் அளவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எனவே வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒரு மணி நேரம் பேசுவேன். அதற்கு மேல் ... Read more
Published on November 04, 2020 08:36
166. ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்… (புதுமைப்பித்தன் தொகுப்பு தொடர்பாக)
அன்புள்ள ஜெயமோகனுக்கு… இதை நான் உங்களுக்கு ஒரு அந்தரங்கக் கடிதமாகவே எழுத விரும்பினேன். ஆனால் இதோ அடுத்த மாதம் எனக்கு அறுபத்தேழு வயது ஆகப் போகிறது. இது நாள் வரை என் வயது பற்றி ஒருக்கணம் கூட நினைத்துப் பார்த்தது இல்லை. வயது பற்றிப் பேசுபவர்களிடம் கூட சீ, அந்தாண்ட போ என்றுதான் விழுந்திருக்கிறேன். எப்போதுமே இருபத்தைந்தின் மனநிலைதான். ஆனால் முதல் முறையாக வயது பற்றி நினைத்தே ஆக வேண்டிய கட்டாயம் நேர்ந்திருக்கிறது. இரண்டு இரண்டு பேராக ... Read more
Published on November 04, 2020 03:13
November 3, 2020
165. புதுமைப்பித்தனின் துரோகம்
புதுமைப்பித்தன் இப்படிச் செய்வார் என்று நான் நினைக்கவே இல்லை. அவர்தான் காசில் கொற்றத்து என்பதற்கு அர்த்தம் சொல்லி – அதாவது அது பகடி என்று – அடிக்குறிப்பு கொடுத்துத் தொலைத்திருக்கிறார் என்று சத்தியமாக எனக்குத் தெரியாமல் போய் விட்டது. இதை நான் கொஞ்சமும் யூகிக்கவில்லை. யூகிப்பதும் சாத்தியம் இல்லை. ஒரு படைப்பாளியே கதைக்கும் கதையில் அவன் ஆடியிருக்கும் பகடி சிலம்பத்துக்கும் அவனே விளக்கம் சொல்லுவான் என்று யார்தான் யூகிக்க முடியும்? எனவே புதுமைப்பித்தனை நம்பி வெங்கடாசலபதியைக் குறை ... Read more
Published on November 03, 2020 22:11
November 2, 2020
164. கண்காணாத தீவிலிருந்து ஒரு தேவதையின் குரல்…
சில தினங்களுக்கு முன்பு வளனரசுவோடு பேசிக் கொண்டிருந்த போது அவனுடைய ஊரில் கேப் வெர்தே என்ற ஆஃப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களைச் சேர்ந்த ஒருவர், தங்கள் நாட்டின் செஸாரியா எவோரா என்ற பாடகரைப் பற்றிக் குறிப்பிட்டதாகவும் சொன்னான். செஸாரியா எவோரா பற்றி இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறாயோ என்று கேட்டேன். இல்லை, இதுதான் முதல் முறை என்றான். உடனடியாக எனக்கு ஒரு மின் அதிர்வு ஏற்பட்டது. பின்வரும் சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். எங்கோ ஒரு ... Read more
Published on November 02, 2020 23:18
163. சாரு கனிந்து விட்டார்? – வளன் அரசு
இப்போதுதான் கிண்டிலில் வாசிக்கப் பழகினேன். உண்மையில் அட்டகாசமாக இருக்கிறது. சாருவின் நாடோடியின் நாட்குறிப்புகள் மற்றும் நிலவு தேயாத தேசம் ஆகிய இரு நூல்களையும் வாசித்து முடித்தேன் (நாட்குறிப்புகள் அரை நாள், அடுத்த ஒரு நாள் நிலவு தேயாத தேசம்). இவ்விரண்டு நூல்களையும் படித்த பிறகு சாருவின் எழுத்துக்கள் குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் மனதில் திரண்டு கொண்டேயிருந்தது. இதற்கிடையில் லக்ஷ்மி சரவணகுமாரின் ‘ரூஹ்’ என்ற அடுத்த அற்புதத்தில் சிக்கிக்கொண்டேன். நிலவு தேயாத தேசத்தை ஒரே நாளில் ... Read more
Published on November 02, 2020 21:59
October 30, 2020
நாளை சந்திப்பு பாஸ்வேர்ட் மற்றும் ஐடி
பல நண்பர்கள் பாஸ்வேர்ட் மற்றும் ஐடி கேட்டு எழுதியிருக்கிறார்கள். சில பேர் என்ன, விளையாடுகிறீர்களா என்று கூட கேட்கிறார்கள். அதுதான் அந்த விளம்பரத்திலேயே பாஸ்வேர்டும் ஐடியும் இருக்கிறதே என்று சொன்னால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே என்கிறார்கள். என்னதான் ஆச்சு? பச்சையாகத் தெரிகிறது அல்லவா எழுத்து? அதை அழுத்தினால் உள்ளே போகும். அங்கே இருக்கிறது பாஸ்வேர்டும் ஐடியும். அழுத்த வேண்டும் என்று கூடவா தெரியாது? அடக் கடவுளே! சரி, பாஸ்வேர்ட் மற்றும் ஐடி விவரம்: Zoom ID – ... Read more
Published on October 30, 2020 23:39
புதுமைப்பித்தன் : ஞாயிறு காலை ஆறு மணி
Zoom ID – 813 3448 9134 Passcode: Precious
Published on October 30, 2020 08:35
October 28, 2020
பூச்சி 166: காசில் கொற்றத்து…
பதிப்பகங்களைப் பற்றி எதுவும் எழுதக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன். ஏனென்றால், ஏதாவது எழுதினால் ராம்ஜியிடம் போய் புகார் சொல்கிறார்கள். யோவ், நான் என்ன ஸீரோ டிகிரி பதிப்பகத்திலா வேலை செய்கிறேன், அல்லது, அவர்களது பார்ட்னரா நான்? எனக்கும் என்னுடைய நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பகத்துக்கும் என்ன சம்பந்தம்? ராம்ஜியும் காயத்ரியும் என் நண்பர்கள். அவ்வளவுதான். மற்றபடி அங்கே என்ன நடக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது. சமீபத்தில் ஒரு புத்தகம் வாங்கினேன். ஒரு பிரபல பதிப்பகம். ஒரு பக்கத்துக்கு ... Read more
Published on October 28, 2020 23:58
மனு ஸ்மிருதி: ஒரு சிறிய விளக்கம்
இப்போதைய என்னுடைய நேர நெருக்கடியில் மனு ஸ்மிருதியில் நான் கை வைத்திருக்கக் கூடாது. வைத்தாயிற்று. இனி மீள முடியாது. என் நேற்றைய பதிவுக்கு செல்வகுமாரின் எதிர்வினை கீழே: மனுதர்மம் புழக்கத்தில் மறைந்துவிட்ட பழைய சமாச்சாரம் என்றுதான் நம்பிவந்தேன். ஆனால், அதன் நெருப்பை பத்திரமாகக் காப்பாற்றி வருபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பொது சமூகத்தில் மிக நல்லவர்கள் என்று அறியப்படுபவர்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் எகிப்திய பிரமிடுகளில் இருக்கும் மம்மியை எழுப்புவது போல மனுவை எழுப்பிவிடுவார்கள். மனுதர்மம் எல்லா மனிதர்களையும் ... Read more
Published on October 28, 2020 20:28
புதுமைப்பித்தன்: காலனும் கிழவியும்
வெள்ளைக்கோயில் என்றால் அந்தப் பகுதியில் சுடுகாடு என்ற அர்த்தம். ஆனால் அது ஒரு கிராமமும் கூட. கிராம முனிஸீபு முதலிய சம்பிரமங்கள் எல்லாம் உண்டு. ஊர் என்னமோ அப்படி அப்படித்தான். ‘வெள்ளைக்கோயிலுக்குப் போகிறேன்’ என்றால் உலகத்திடம் செலவு பெற்றுக்கொள்வது என்பது அந்தப் பகுதி வாசிகளின் வியாக்கியானம். ஆனால், வெள்ளைக்கோயிலுக்குப் போய்த் திரும்பி வருகிறவர்களும் பலர் உண்டு. ஏன், சுப்பு நாடான் தினசரி காலையும் சாயங்காலமும் அங்கு போய்த்தான் ஏழை மக்களுக்குக் கஷ்டத்தை மறக்க வைக்கும் அமுதத்தை இறக்கி ... Read more
Published on October 28, 2020 03:48
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

