சாரு நிவேதிதா's Blog, page 242

October 5, 2020

152. ஒரு ட்ரான்ஸ்க்ரஸிவ் எழுத்தாளனாக வாழ்தல்…

பின்வரும் சம்பவத்தை ஏதோ ஒரு நாவலில் எழுதியிருக்கிறேன்.  இருந்தாலும் அதை இங்கே மீண்டும் இங்கே சொல்லத் தேவை ஏற்பட்டிருக்கிறது. ஒரு நெருங்கிய நண்பனின் அலுவலத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.  நண்பன் தான் அங்கே சீஃப்கீழே பணிபுரியும் ஊழியர்கள் கிளம்பி விட்டார்கள்.  மாலை ஆறு இருக்கும்.  நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் வந்தார்.  அம்பதாகக் கூட இருக்கலாம்.  என் வயது அப்போது நாற்பது.  அந்தப் பெரியவரை சமீபத்தில் பார்த்தபோது கூட ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2020 22:26

151. சில ஆன்மீகப் பயிற்சிகள்

நாஸ்திகனாக இருந்த என்னை நம்பிக்கையாளனாக மாற்றிய இரண்டு புத்தகங்களில் ஒன்று, Autobiography of a Yogi.  அதில் பரமஹம்ச யோகானந்தா அவருடைய குரு அவருக்கு அளித்த சில ஆன்மீகப் பயிற்சிகளைப் பற்றிச் சொல்கிறார்.  அதில் இரண்டை உங்களுக்குச் சொல்லப் பிரியப்படுகிறேன்.  சம்பவம் நடப்பதெல்லாம் இமயம்.  ஆசிரமத்தின் ஒரு இடத்தில் யோகானந்தரை தான் சொல்லும் வரை அந்த இடத்திலேயே அசையாமல் நிற்கும்படி சொல்லி விட்டுப் போய் விடுகிறார் குரு. இவ்வளவு விவரமாக, தெளிவாகச் சொன்னாரா என்று எனக்கு ஞாபகம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2020 21:11

நண்பர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்…

அந்த மனநோயாளி என்னைப் பற்றி எழுதும் எந்த அவதூறுக்கும் பதினைந்து ஆண்டுகளாக நான் எந்த பதிலும் எழுதியது இல்லை. அதுதான் அவனுக்கு நான் தரும் அதிக பட்ச தண்டனை. ஆனால் முந்தாநாள் ஸ்ரீராம் ஏதோ நான் எழுதியதில் ஒரு பிழை என்று சொல்லி அவன் எழுதியதை என்னிடம் காண்பிக்க அங்கிருந்து ஆரம்பித்தது வம்பு. பதினைந்து வருடம் கட்டிக் காத்த அமைதி கெட்டு விட்டது. அவனுக்குத் தேவை என்னோடு சண்டை. அதுதான் அவனுடைய பொழுதுபோக்கு, அவனுடைய வாழ்க்கை. மனநோயாளிக்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2020 09:12

150. தீண்டாமை

”ம்யூசிக்லாம் எங்க ஏரியால்ல, அங்கெ எப்டி நீ வர்லாம்?  ஏற்கனவே உனக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தமே இல்லேங்கறேன், இதுல ம்யூசிக் வேறயா?  அதும் கருணாமிருத சாகரம்?  டேய், இவன வுட்டா எங்கிங்கியோ போய்டுவான் போலருக்கே?” என்று ஒரு குரல் கேட்கிறது.  முகநூலில் எழுதியது போதாது என்று எல்லோருக்கும் வாட்ஸப்பிலும் அனுப்பியிருக்கிறது.  விஷயம் என்ன தெரியுமா? கருணாமிருத சாகரம் வெளியானது 1917.  அதில் உள்ள கண்டுபிடிப்புகளோடு மகா வைத்தியநாத சிவன் முரண்பட்டார் என்று சொல்லி விட்டேன் அல்லவா?  சிவன் இறந்தது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2020 03:57

October 4, 2020

149. எஸ்.ரா., ஜெயமோகன், சாரு நிவேதிதா

நான் தில்லியில் இருந்த 1978-1990 கால கட்டத்தில் பல அரிதான நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  அவற்றைப் பற்றி அவ்வப்போது விரிவாக எழுதியும் இருக்கிறேன்.  கலைகளிலேயே ஆக இளமையானதும், எல்லா கலைகளின் சாத்தியப்பாடுகளையும் தன்னில் உள்வாங்கிக் கொண்டதுமான சினிமாதான் மக்கள் மனதை மிகவும் ஈர்க்கக்கூடியது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.  ஆனால் எனக்கு அதில் சந்தேகம் உண்டு.  கலைகளிலேயே மக்கள் மனதை மிகவும் அதிகமாக பாதிக்கக் கூடியது நாடகம்தான் என்பது என் கருத்து.  நாடகம் என்பது ஒரு சிறிய ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2020 23:46

148. கமலுக்கு ஒரு வேண்டுகோள்…

என்னை உங்களுக்குப் பிடிக்காது என்று தெரியும்.  அது பற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை.  எல்லோரையும் எல்லோருக்கும் பிடிக்குமா என்ன?  ஆனாலும் உங்களைப் பின்பற்றும் தமிழர் ஏராளமானோர் என்பதால் அவ்வப்போது உங்கள் பிழைகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறேன்.  நீங்களும் என்னை உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் என் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதை உடனுக்குடன் கவனிக்கிறேன்.  உன்னைப் போல் ஒருவன் படத்துக்கு அந்தத் தலைப்புக்கு முன்னால் தலைவன் இருக்கிறான் என்ற தலைப்பு வைத்திருந்தீர்கள்.  அது அந்தக் கதைக்கு ஒத்தே வராது என்று ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2020 22:18

147. தமிழகமும் கேரளமும்…

எழுத்தாளனும் விரலை வெட்டி நடிகனுக்கு அனுப்பும் ரசிகனும் ஒன்று அல்ல; எழுத்தாளன் உணர்ச்சிவசப்படுகின்றவன்தான் என்றாலும் அவன் ஒரு புத்திஜீவியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் என் கனத்த இதயத்துடன்… கட்டுரைகளின் சாரம்.  அதை எழுத்தாளர்களே புரிந்து கொள்ளாமல் போனதில் வியப்பு ஒன்றுமில்லை.  அவர்களுக்குப் புரியவில்லையே என்பதற்காக நான் அதையெல்லாம் எழுதாமலும் இருக்க முடியாது.  இந்த துக்கமெல்லாம் அடங்கினதும் எழுதலாமே என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.  ஏனென்றால், யேசு அப்படிச் செய்யவில்லை.  வேதாகமத்தின் மத்தேயுவில் 16: 21-28 வசனங்களைப் பாருங்கள். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2020 06:08

October 1, 2020

146. ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் மாபெரும் விலைகுறைப்பும் புத்தனாக வாழ்தலும்…

ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் மாபெரும் விலைகுறைப்பு நேற்றோடு முடிவுக்கு வருவதாக இருந்தது.  அதனால் ராம்ஜியோடு பேசினேன்.  அக்டோபர் ஐந்து வரை இந்தப் பெரும் விலைகுறைப்பை நீட்டிக்க முடியுமா என்று கேட்டேன்.  அவரும் உடனடியாகச் சம்மதித்தார்.  உடனே என் தளத்தில் அறிவிக்கிறேன் என்றேன்.  ஆனால் அறிவிக்க மறந்து விட்டேன்.  காரணம், நான் என்ன எழுதுகிறேனோ அதைக் கொஞ்சம் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்.  இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.  கோட்ஸேயாக வாழ முடியாது.  ஆனால் காந்தியாக வாழ்ந்தால் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2020 20:36

September 30, 2020

லேப்டாப் நரசிம்மனுக்கு ஒரு கேள்வி

நீ என்னை நேரில் பேசுவது போலவே வா போ என்று உரிமையில் பேசியிருப்பதால் நானும் உன்னை ஒருமையில் பேச அனுமதிப்பாய் என்று நினைக்கிறேன். இப்போது கடும் நெஞ்சு வலியுடன் இதை எழுதுகிறேன். நெஞ்சுவலி முற்றி ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்ட்ரோக் வந்தால் என் நண்பர் எக்ஸ்தான் காரணம். ஏனென்றால், அவர்தான் நீ முகநூலில் வாந்தி எடுத்ததைப் பற்றி எனக்குச் சொன்னவர். மற்றபடி ஒரு நீண்டநாள் மனநோயாளியாகிய நீ எழுதிய எதையும் நான் படிப்பதில்லை என்பது உனக்கே தெரியும். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2020 04:26

September 29, 2020

145. ஹெம்லாக் விஷத்தைக் கொடுக்காததற்காக நன்றி!

தமிழ்க் கலாச்சார சூழலில் ஒரு எழுத்தாளன் தன்னை எங்கே பொருத்திக் கொள்கிறான் என்பதுதான் என்னுடைய இத்தனை நாள் புலம்பல் கட்டுரைகளின் சாரம்.  பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் ஒரு தினசரி ஆசிரியரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.  நெருங்கிய நண்பர்.  போனேன்.  ஒரு பாட்டிலில் ஒரு திரவத்தில் ஒரு மனிதக் கட்டை விரல் மிதந்தது.  கூடவே கடிதம்.  சுருக்கமான கடிதம்.  இன்ன நடிகரிடம் இதை சேர்ப்பித்து விடவும்.  மற்றும் சில விவரங்கள்.  அன்னாருடைய படம் நன்றாக ஓட ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2020 08:04

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.