சாரு நிவேதிதா's Blog, page 237
November 13, 2020
சூரரைப் போற்று
சும்மா ஒரு ஜாலிக்காக சூரரைப் போற்று பார்க்க ஆரம்பித்தேன். மூணு நிமிடம் ஆகியிருக்கும். அந்த மூணு நிமிடத்திலேயே மரண கப்ஸா. அப்படியெல்லாம் விமானம் இறங்குவதற்கு மறுக்க மாட்டார்கள், உலகின் எந்த மூலையிலும். அடுத்து ரயில் காட்சி. எல்லோரும் அந்தக் காலத்து சபா நாடகம் மாதிரி ரெக்கார்டிங் தியேட்டரில் தொண்டை வரள கத்தியிருப்பார்கள் போல. காட்டுக் கத்தல் கத்துகிறார்கள். அடுத்து நடிகவேள் கருணாஸ் ஒரு பிராமணரைக் கேலி பண்ணுவது போல் பிராமண பாஷை பேச ஆரம்பித்ததும் குமட்டிக் கொண்டு ... Read more
Published on November 13, 2020 22:47
ஸ்மாஷன் தாரா – 3
ஆதி அந்தமில்லாத காலப்பெருவெளியின் இந்தவொரு புள்ளியில் நாம் சந்தித்தது சந்தர்ப்பவசமோ விதிவசமோ தெரியாது மனிதக் கணக்கில் இருபது ஆண்டுகள் ஒன்றாயிருந்தோம் சட்டென்று கரைந்து விட்டாய் காலத்தில் அநந்தகோடி ஒளிப்புள்ளிகளில் ஒன்றாகிவிட்ட உன்னையினி சந்திக்க இயலுமோ சந்தித்தாலும் ஞாபகமிருக்குமோ இந்த இருபது ஆண்டுகளில் நாம் பேசிய வார்த்தைகளும் பேசாத மௌனங்களும் கூடலும் ஆடலும் வெறுப்பின் வெம்மை படிந்த பகல்களும் மோகத்தீயில் பற்றியெரிந்த இரவுகளும் எனக்காக உன்னை உருக்கிக் கொண்டதும் தங்கக் கூண்டில் எனைச் சிறைப்படுத்திய உன் பிரியத்தின் கூர்முனைகளும் ... Read more
Published on November 13, 2020 21:44
ஸ்மாஷன் தாரா – 2
ஆசைப்பட்டது கிடைக்கவில்லை துக்கமான துக்கம் ஆசையை விடு துக்கம் போகுமென்றானொரு ஆசான் விட்டேன் துக்கம் அகன்றது அப்போது வந்தாள் ஸ்மாஷன் தாரா என்ன வரம் வேண்டும் கேள் மகனே என்றாள் ஒரு ஐந்து நிமிடம் முந்தி வந்திருக்கக் கூடாதா உலகத்தையே கேட்டிருப்பேன் என்றேன் இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை கேளென்றாள் எதுவும் வேண்டாம் முடிந்தால் என்னோடு இரு என்றேன் அதற்கென்ன இருந்தால் போயிற்று என்றாள் கவிதை பிறக்கலாயிற்று
Published on November 13, 2020 02:08
November 12, 2020
ஸ்மாஷன் தாரா
பிறந்து ஐந்து வயது வரை ஊமைப் பிள்ளை கலியப் பெருமாள் கோவிலுக்கு வேண்டிக் கொண்டுதான் பேச்சே வந்தது பேசிய பேச்சும் அசட்டுப் பேச்சு புத்தியும் இல்லாமல் போச்சு மந்தையைப் பிரிந்து அபீன் பழக்கமாச்சு ஸ்த்ரீகளின் சிநேகமும் கூடவே வந்தது ஊரிலும் கெட்ட பேர் உறவும் தள்ளி வைக்க என்னென்னவோ ஆச்சு ஆனாலும் உன் கருணை மழை மட்டும் குறைவற்றுப் பெய்ய என்ன தவம் செய்தேனெனக் கேட்டதுக்குச் சொன்னாள் தயை கருணை க்ஷமா மூன்றுமென் முலைகளில் சுரக்க நீதான் ... Read more
Published on November 12, 2020 20:21
November 10, 2020
168. தீபாவளி
அவந்திகாவுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வது பிடிக்காது. அது நான் செய்த அதிர்ஷ்டம். பல பெண்களுக்கு வெளியே செல்வதுதான் பிடிக்கும். ’நான் என்ன அடிமையா. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க? வெளியே தெரு போக வேண்டாமா?’ என்பது அவர்கள் வாதம். வாரம் ஒருமுறையாவது ஓட்டலில் சாப்பிட வேண்டும். வாரம் ஒருமுறையாவது சினிமாவுக்குப் போக வேண்டும். கடற்கரைக்குப் போக வேண்டும். கோவிலுக்குப் போக வேண்டும். உறவினர் வீட்டுக்குப் போக வேண்டும். புடவை எடுக்கப் போக வேண்டும். இப்படி பலது உண்டு. ... Read more
Published on November 10, 2020 20:45
Pithy thoughts – 7
பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றான் அரசன் வற்றிக் கிடந்தது வனம் மழை இல்லை பசுமை இல்லை பாறைகளில் சுனைகளின் சுவடுகள் மட்டுமே பழைய தடம் கொண்டிருந்தன ஒரு முயல்கூடத் தென்படவில்லை யார் கொடுத்த சாபமோ வனமும் இந்த கதியாயிற்றேவென துக்கித்து நின்றபோது அவனெதிரே வந்த கண்கள் பஞ்சடைந்த புலியொன்று பட்டினியில் செத்துக் கொண்டிருக்கும் என்னைக் கொன்று விடு என்று வாய்விட்டுச் சொன்னது தன் ஆடைகளைக் கழற்றியெறிந்த மன்னன் அந்தப் பசித்த புலியிடன் தன்னைப் புசிக்கக் கொடுத்தான் திரண்டு ... Read more
Published on November 10, 2020 17:10
Pithy thoughts – 6
கனவுகளாலும் காலடிகளாலும் எண்ணிக்கையற்ற கதைகளாலும் நிரம்பியிருந்த அந்த மணல்வெளியில் அமர்ந்திருந்த அவனிடம் ஒரு மணல் சொன்னது உன் கதையும் என் கதையும் ஒன்றுதானென அநந்தகோடி ஆண்டுகளுக்கு முன்னே ஒரு ஆதித்தாயின் கருவை உடைத்தபடி வந்த அநந்தகோடி அணுத்தூசுகளின் காலப்பெருவெளியில் மிதந்து வந்து இப்போது உன் கையில் அமர்ந்திருக்கிறேன். இப்போது அண்ட சராசரங்களும் என் வயிற்றில் எனச் சொல்லியபடி அந்த மணல் துகளை விழுங்கி வைத்த அவன் அந்த க்ஷணமே வயிறு வீங்கிச் செத்தான் யாருமற்ற கடற்கரையில் கேட்பாரற்றுக் ... Read more
Published on November 10, 2020 09:04
November 9, 2020
3. இசை பற்றிய சில குறிப்புகள்
நாவல் வேலை சுணங்குகிறது என்ற காரணத்தால்தான் இசையைக் கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கிறேன். கர்னாடக சங்கீதத்தில் எனக்குப் பிடித்த மேதைகள் அநேகம். அவர்களில் தலையாயவர் வீணை எஸ். ராமநாதன். என்ன வீணை எஸ். ராமநாதனா, அவர் பாடகர் அல்லவா என்று கேட்பார்கள். இங்கே எம்.டி. ராமநாதன் பிரபலம் என்பதால் பலருக்கும் எஸ். ராமநாதன் தெரியாமலே போய் விட்டார். இன்னொரு காரணம், இந்தத் தமிழ்நாட்டுச் சூழல் பிடிக்காததால் எஸ்.ராமநாதன் அமெரிக்கா சென்று விட்டார். அவர் அற்புதமான பாடகர், வீணைக் கலைஞர். ... Read more
Published on November 09, 2020 23:07
167. கலைஞனின் உன்மத்தம்
அருட்செல்வப் பேரரசன் மொழிபெயர்த்த மஹாபாரதத்துக்கு ஒரு வெளியீட்டு விழா வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சில நண்பர்கள் கூட இருந்தனர். நான் எது சொன்னாலும் அதை மறுத்துப் பேசுவதுதான் என் நண்பர்களின் வழக்கம். அந்த நண்பர் குழாமில் அப்போது இன்னொரு நண்பரும் இருந்தார். அவர் தீவிர இந்துத்துவச் சார்பு உள்ளவர். என்றாலும் மற்ற விஷயங்களில் நல்ல ஞானம் உள்ளவர் என்பதால் அரசியல் தவிர்த்து மற்றவற்றைப் பேசிக் கொண்டிருப்பேன். சுவாரசியமாகப் பேசுபவர். விஷயதாரி. சமய இலக்கியம், பழைய கால ... Read more
Published on November 09, 2020 19:52
ஆதவன் தீட்சண்யாவின் வழக்கறிஞர் அறிவிக்கை: ஜெயமோகன்
இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி கட்டுரையின் லிங்கை மட்டும் கொடுக்காமல் கட்டுரையையே எடுத்துத் தந்திருக்கிறேன் – சாரு கீழே வருவது ஜெயமோகன் அவரது தளத்தில் எழுதியுள்ள கட்டுரை: இன்று ஆதவன் தீட்சண்யா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் அனுப்பிய வழக்கறிஞர் அறிவிக்கை எனக்கு வந்தது. அதில் சுந்தர ராமசாமியைப் பற்றி பிள்ளைகெடுத்தாள் விளை கதை சார்பாக அவர் கூறியவற்றை நான் மேற்கோள்காட்டியிருப்பது அவதூறு என்றும் அதற்காக மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் ... Read more
Published on November 09, 2020 04:09
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

