பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றான் அரசன் வற்றிக் கிடந்தது வனம் மழை இல்லை பசுமை இல்லை பாறைகளில் சுனைகளின் சுவடுகள் மட்டுமே பழைய தடம் கொண்டிருந்தன ஒரு முயல்கூடத் தென்படவில்லை யார் கொடுத்த சாபமோ வனமும் இந்த கதியாயிற்றேவென துக்கித்து நின்றபோது அவனெதிரே வந்த கண்கள் பஞ்சடைந்த புலியொன்று பட்டினியில் செத்துக் கொண்டிருக்கும் என்னைக் கொன்று விடு என்று வாய்விட்டுச் சொன்னது தன் ஆடைகளைக் கழற்றியெறிந்த மன்னன் அந்தப் பசித்த புலியிடன் தன்னைப் புசிக்கக் கொடுத்தான் திரண்டு ...
Read more
Published on November 10, 2020 17:10