அவந்திகாவுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வது பிடிக்காது. அது நான் செய்த அதிர்ஷ்டம். பல பெண்களுக்கு வெளியே செல்வதுதான் பிடிக்கும். ’நான் என்ன அடிமையா. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க? வெளியே தெரு போக வேண்டாமா?’ என்பது அவர்கள் வாதம். வாரம் ஒருமுறையாவது ஓட்டலில் சாப்பிட வேண்டும். வாரம் ஒருமுறையாவது சினிமாவுக்குப் போக வேண்டும். கடற்கரைக்குப் போக வேண்டும். கோவிலுக்குப் போக வேண்டும். உறவினர் வீட்டுக்குப் போக வேண்டும். புடவை எடுக்கப் போக வேண்டும். இப்படி பலது உண்டு. ...
Read more
Published on November 10, 2020 20:45