சாரு நிவேதிதா's Blog, page 19

July 31, 2025

ந ஹன்யதே ஹன்யமானே சரீரே

ஆன்மா மரணமில்லாததுஆன்மா குடியிருக்கும் கூடுதான்உடல்உடல் அழிந்தாலும் ஆன்மாவுக்குஅழிவில்லைஇதை நம்பும் ஞானிகளேஎம் தேசத்தவர் எல்லாரும் உலகையே நடுங்கச் செய்தஉயிர்க்கொல்லிக் கிருமிஇங்கே நுழைந்தபோதுவிஞ்ஞானிகள் பதறினார்கள்கிருமி தாக்கிய ஒருவரைநெருங்கினாலே அடுத்தவரையும்தொற்றி அழித்து விடும்ஆனால் நாங்களோபத்துக்குப் பத்து அறையில்பத்து பேர் படுத்துறங்கினோம்கோவில் திருவிழாவில்புளிமூட்டை போல்பல்லாயிரக்கணக்காய் கூடிஒருவர் மீதொருவர் கட்டிப் புரண்டுஆடினோம்மதுக்கடைகளிலும்ஒருவர் மீது ஒருவர் விழுந்து புரண்டுபோத்தல்களை அள்ளினோம் எங்கள் தொகை நூற்று நாற்பது கோடிஇதில் நாற்பது ஐம்பது கோடிகிருமியால் காலியாகும்என்றது விஞ்ஞானிகள் குழு யாருக்கும் அச்சமில்லைமரணம் கொஞ்சமாய் நிகழ்ந்தாலும்எவரும் அசரவில்லைஅதே கூட்டம்கோவிலிலும்மதுபானக் கடைகளிலும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2025 07:42

மிக்ஸி வாங்கிய கதை

1 நானும் மனையாளும்இன்று வெளியே சென்றோம்இப்படிச் சென்றுஆண்டு மூன்றாயிற்றுமிக்ஸி வாங்க வேண்டும்பழைய மிக்ஸி போய் விட்டது ஒவ்வொரு சட்டையாய் மாற்றினேன்எதிலும் திருப்தியில்லைகடைசியில்இருப்பதிலேயே ஆக உசத்தியானஒன்றைத் தேர்ந்தேன்எதற்கும் கேட்டு விடுவோமென்றுமனையாளிடம் காண்பித்தேன்உற்சாகமாய்த் தலையை ஆட்டிஓகே என்றாள் 2பாத்திரக் கடையில்விற்பனைப் பிரிவில்பத்து இருபது பெண்கள்எலும்புக்கூடுகளாய்காலணி அணியாமல் நின்றார்கள்ஒருத்தி மட்டும்சினிமா நட்சத்திரம் போலிருந்தாள்கலகலப்பாய் சிரித்தபடி அவள்மிக்ஸி வகைகளைக் காண்பித்தாள்எனக்கு அவள் மீது ஆர்வம் மிகுந்ததுஅவள் ஏன் இந்தப் பாத்திரக் கடையில்?மேற்கத்திய நாடுகள் போலில்லை இதுஅங்கென்றால் ஒருத்திகடையில் பணி செய்தபடிசட்டம் படிக்கலாம்வணிகம் படிக்கலாம்பேராசிரியராகலாம்உலகம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2025 06:49

if…

1 மீண்டும் இதே வாழ்க்கையை வாழவாய்ப்புக் கிடைத்தால்தில்லி சென்றிருக்க மாட்டேன்அரசுப் பணியில் சேர்ந்திருக்க மாட்டேன்திருமணம் செய்திருக்க மாட்டேன்ஆங்கிலம் கற்றுக்கொண்டு ஆங்கிலத்தில்எழுதியிருப்பேனே ஒழியஒருபோதும் தமிழில் எழுதியிருக்க மாட்டேன்இரண்டாம் திருமணமும் செய்திருக்க மாட்டேன்சொல்லப் போனால்திருமண உறவிலேயே சிக்கியிருக்க மாட்டேன்என் ஒப்புதல் இல்லாமல் செக்ஸ்நிறுத்தப்பட்ட போதுஒரு அடிமைபோல்அதற்கு ஒப்புக்கொண்டிருந்திருக்க மாட்டேன்அல்லதுஉறவை ரத்து செய்திருப்பேன்திரும்பவும் ஒரு காதலில் விழுந்திருக்க மாட்டேன்திரும்பவும் என் ஒப்புதல் இல்லாமல்செக்ஸ் நிறுத்தப்பட்ட போதுஒரு அடிமைபோல்அதற்கு ஒப்புக்கொண்டிருந்திருக்க மாட்டேன்அல்லதுஉறவை ரத்து செய்திருப்பேன்எழுபது வயது வரைமுத்தமில்லா வாழ்க்கைக்குஉடன்பட்டிருக்க மாட்டேன்காதலி செய்த தவறுக்கெல்லாம்ஓராயிரம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2025 01:10

July 30, 2025

உயிர்மெய்

பெண்ணேகேட்க நினைத்துக் கேட்காததுஎன் ஒவ்வொரு கவிதையிலும்ஏதோவோரிடத்தில்நீ இருக்கிறாயென்றுனக்குத்தெரியுமா?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2025 23:28

வருவார் போவார்

யாராலோஎதனாலோஅனுப்பப்பட்டது போல்வந்தார்கள்கொடுத்தார்கள்எடுத்தார்கள்சொல்லாமல்சென்றார்கள் என் வாழ்வில்வந்து சென்றபிராணிகளைப் போல
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2025 21:50

Life’s but a walking shadow…

உன் கவிதைகளில்ஏன் அடிக்கடி வருகிறதுநிழல்? நிழல்தன் வாழ்வைஎழுதிச் செல்லும் போதுநிழலன்றி வேறேதுவர முடியும்?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2025 21:44

அவள்

உண்டால் போதைநினைத்தால் வாதை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2025 21:11

the same inside : Anna Swir

இந்தக் கவிதையை ஸ்ரீ அனுப்பியிருந்தாள். படித்ததும் உடனே மொழிபெயர்க்கத் தோன்றியது. தலைப்பை மட்டும் அப்படியே விட்டு விட்டேன். கீழே என் மொழிபெயர்ப்பு: ஒரு காதல் கொண்டாட்டத்துக்குஉன் இடம் நோக்கி நடந்தேன்.தெருமுனையில் ஒரு வயதான பிச்சைக்காரியைக் கண்டேன்.அவள் கையைப் பற்றினேன்அவளது மென்மையான கன்னத்தில் முத்தமிட்டேன்.நாங்கள் பேசினோம்; அவள் உள்ளுக்குள்என்னைப் போலவே இருந்தாள்நாய் நாயை மோப்பத்தால் அறிவது போல்நான் இதை உடனே உணர்ந்தேன். அவளுக்குப் பணம் கொடுத்தேன்,அவளைப் பிரிய மனமில்லை.எல்லாவற்றுக்கும் மேலாக,நமக்கு ஒரு நெருக்கமானவர் தேவை அல்லவா? பிறகு, நான் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2025 06:28

நிலவின் மொழி

1 1.வார்த்தைகளின் மோதல் (Allegro) ’கல்லின் மொழி பேசுகிறாய்புல் உன் கனவைப் புரிந்து கொள்கிறதுகாற்றின் கதைகளைக் கேட்கிறாய்பாறைக்குள்ளிருக்கும் தேரையின்சுவாசத்தை எழுதுகிறாய்ஆனால்என்னுடைய சாதாரண வாக்கியம்ஒரு உடைந்த பாலமாகநடுவில் நிற்கிறதுஎன்ன மனிதன் நீ?’என்கிறாள்வெறுமனே அசைகிறேன்ஒரு சொல்என் மார்பில் உருள்கிறது 2 ஏரியின் மௌனம் (Adagio) வானைத் தொடும் தேவதாருநிலவு ஒரு வெள்ளித் தட்டாகஏரியில் மிதக்கிறதுவிறகு எரியும் மணம்கையில் வைன் கோப்பைஇரண்டாவது போத்தல்ஏரி சலனமற்றிருக்கிறது நிலவு பேசுகிறதுநான் பதிலளிக்கிறேன்அது எதையும் மறுப்பதில்லைமாட்டேன் முடியாதுஎன்ற சொற்களேவந்ததில்லைஎன்ன வேண்டுமானாலும்பேசலாம்தணிக்கையில்லைதடையில்லைகட்டற்ற சொல்வெளியில்நிலவோடுஎப்படி வேண்டுமானாலும்ஆடலாம் 3 நிலவின் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2025 06:20

மலர்வனமானது மனம்

அவள்சொல்வது செய்வதுஎல்லாமேமன உளைச்சல்மன அழுத்தம்தந்துமனதை ரணகளமாக்கியது எல்லாம் புதிதுஇதுவரை கண்டதில்லைகேட்டதில்லை ஓடவும் முடியாதுமுதல்முதலாய்க் கண்ட தெய்வம் ஒருநாள் ஞாபகம் வந்ததுஅவள் சொன்னது’நீ என்னைக் குழந்தையாய்நடத்து’ நடத்தினேன்மலர்வனமாயிற்றுமனம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2025 00:23

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.