சாரு நிவேதிதா's Blog, page 23
July 22, 2025
அன்பின் சிறு கதவை மூடாதீர்கள்
1 தினந்தோறும்எந்தப் பிணக்கும் இல்லாமல்ஞாயிறு எழுகிறதுநிலவு குளிர்மை பொழிகிறதுதென்றல் வருடிச் செல்கிறதுமலர்கள் மணம் வீசுகின்றனயாரையும் கேளாமல்நதிகள் பாடுகின்றனமலைகள் கேட்கின்றனபறவைகள் பறக்கின்றனவனங்களைப்பெருக்குகின்றனவிலங்குகள் பூமியின்லயத்தைப் பராமரிக்கின்றனவானம் இடமளிக்கிறதுமழை பூமியைக் குளிர்விக்கிறதுவானவில் மழைத்துளியில் மலர்கிறதுநதிகள் மலைகளின் கதைகளைப் பாடுகின்றனமரங்கள் மௌனமாக உலகின் சுவாசத்தைத்தாங்குகின்றனமூங்கில் காடுகளிலிருந்து இசைபிறக்கிறதுபூமி தன் மடியில்ஆயிரம் கனிகளையும்தானியங்களையும் தருகிறதுகடல் தன் அலைகளால்ஜீவராசிகளைத் தாலாட்டுகிறதுவனங்கள் விலங்குகளும்ஞானிகளும் வசிக்கஇடமளிக்கிறதுஞானிகளின் தவம் உலகைக் காக்கிறதுதேனீக்களும் பட்டாம்பூச்சிகளும்மண்புழுவும் மாடும் ஆடும்தேன்சிட்டுகளும் பஞ்சவர்ணக்கிளிகளும்குதிரைகளும் ஒட்டகங்களும்ஆனைகளும் பூனைகளும்நாயும் முயலும்எல்லாமேஎல்லாமேதன் இயல்பில் அன்பைப் பகிர்கின்றனஒரு மரம் கூடதன் நிழலை ... Read more
Published on July 22, 2025 09:06
சாராயக் கவிதை
ங்கொய்யாலகடைசீலஏஐய்யை கேட்டுஅது சொன்னபடிசெஞ்சுநாமளும் ப்ளூ டிக்கைமறச்சிட்டம்லஎன்ன நக்கல் புண்டயாவாடீ வாஇப்ப வச்சுக்குவோம்வெளயாட்ட என்னாகுடிச்சிட்டு ஒளர்றனாஆமான்டி குடிச்சேன்அதுக்கு என்னாஆனா ஒளற்லகுடிச்சா நா(ங்) ஒளற மாட்டெ(ங்)எ(ங்) ஃப்ரன்ஸ்ங்க கிட்டகேட்டுப் பாரு என்னது சாராய நாத்தமாஆமாகேரளத்து சாராயம்ஒரு ஃப்ரெண்ட் குடுத்தான்என்னாங்ற இப்போவா நீயு(ங்) குடி நடு ராத்திரிகுப்பெ மேட்டு மேலசாராய குப்பிய ஒடச்சுநெலா வெளிச்சத்லநாம சிரிச்சாஇந்த உலகத்தையேஎரிச்சிர்லாம்லடீ? இன்னோண்ணுநீ குடிச்சுப் பாத்துருக்கெ(ங்)போதையாயிப் பாத்ததில்லசாராயொ(ங்) போதெ வரு(ங்)செம போதெநீ போதையாயிப் பாக்கணுன்டிஏன்னாநீ எனக்கு அனுப்பி வச்சஅத்தன கவிதையும்நீபோதெல எழுதுனதுதான்னுநீதானெ சொன்னெ?வாகுடிப்போ(ங்)குடிச்சிக்கிட்டே கவிதையெழுதிகொண்டாடுவோ(ங்) ஆனாஒரு ... Read more
Published on July 22, 2025 04:53
பிரதீத்ய சமுத்பாதம்
கடவுள் வந்தார்கேட்டார்ஏன் அழைத்தாய் சொல்தீர்க்க முடிந்தால் தீர்ப்பேன் நன்றி சொன்னேன்“ஆனால், அது என்ன ‘முடிந்தால்’?பிரபஞ்சத்தைப் படைத்தவர் நீர்,உம்மால் முடியாதது உண்டோ?” மானுடரின் புலம்பல்கள் புரிவதில்லைபுரிந்தாலும்சிலவற்றைத் தீர்ப்பதுஎன் சக்திக்கு மீறியதுநேற்று ஒரு பெண் அழைத்தாள்அவளுக்கு உடலின்பம் வேண்டும்இணையனுக்கோ இஷ்டமில்லைஇஷ்டமில்லையா இயலவில்லையாதெரியவில்லைஎன்னால் என்ன செய்ய முடியும்?கை விரித்துமன்னிப்புக் கேட்டேன்இப்போது ஒரு பயம்என் மன்னிப்பை வைத்துஅவள் என்னைமீட்டூவில் போட்டு விடுவாளோ? சரி நீ சொல்என்றார் ’மோகினிக்குட்டி ப்ளூ டிக்கைமறைத்து விட்டாள்நித்திரை தொலைந்துமனம் தற்கொலையுணர்வில் தவிக்கிறதுஅடுத்தவர் சுதந்திரத்தில்தலையிட்டதில்லைஅதையும் மீறி ஒருமுறை கேட்டுமொக்கை வாங்கினேன்அதோடு ... Read more
Published on July 22, 2025 03:55
July 21, 2025
அழுகையின் வரலாறு
மது அருந்திநான் அழுததே இல்லைஆனால்பலரும் அழுகிறார்கள்நீயும் கூடஎன்றாள். ஐம்பதாண்டுகளாய்மதுவுடன் வாழ்கிறேன்பெண்களுடன் பெரும்பாலும்குடித்ததில்லைநீ மட்டும் விதிவிலக்குஒருபோதும் அழுததில்லைஆனால்உன்னோடு மட்டுமே அழுகிறேன்என்றேன்.
Published on July 21, 2025 22:49
கவிதை
”கடந்த வாரக்கவிதைகளை அனுப்பு” “ஆ, உனக்கு எப்படித் தெரியும்?என் இதயத்தில் ரகசியக் கேமராவைத்து விட்டாயா?” “கனவுதான் என் ரகசியக் கேமராநனவில் நானொரு மூடன்கனவில் தரிசிசரி, என் கேள்விக்குப் பதில் சொல்” ”முடியாது” சொன்னவள்எனக்குத் தன்உடல் பொருள் ஆன்மாதந்தவள்ஆக,ஆக ரகசியமானது
Published on July 21, 2025 07:36
முடியாது
இதுவரைமுடியாது என்ற வார்த்தை கேட்டதில்லைஇப்போது அடிக்கடி கேட்கிறேன் ஏன் இப்படி ப்ளூ டிக்கை மறைத்து விட்டாய்காரணமாவது சொல்
Published on July 21, 2025 07:26
என்றும் இல்லை இறுதிக் கோப்பை
மனையாள் சொன்னாள்:”தவறாக நினைக்காதேஆயுள் முழுதும் அசைவம் தின்றாய்இப்போது உன் உடல் அதை ஏற்கவில்லை” சாகும் வரை சாப்பிடுவேன் என்றேன். மோகினிக்குட்டி சொன்னாள்:”தவறாக நினைக்காதே,காமத்தில் வாழ்ந்தாய்மூழ்கினாய்இப்போது உன் உடல் அதைத் தாங்கவில்லை,கண்கூடாய்க் கண்டேன்போதும்.” “இந்தக் கதை கேள்:முப்பத்தைந்தில் புகாவ்ஸ்கிரத்த வாந்தி எடுத்தான்,ஆசனத்தில் குருதி கொட்டியது.மருத்துவர் எச்சரித்தார்:‘இன்னொரு கோப்பை மது அருந்தினால்,அது உன் இறுதிக் கோப்பை.’ஆனால், அவன்தினம் மூன்று முதல் ஏழு போத்தல்வைன் குடித்தபடி,முப்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்தான்.அதனால்நான் சாகும் வரை காமம் தின்பேன்.”
Published on July 21, 2025 07:12
Shattered Edge : Shree
I almost hurt Heshee this evening.She had tortured a little mouse,barely the size of a car key,and it was trembling, curling in on itself,frightened beyond comprehension. Something in me shattered.I shouted: loud, uncontrolled.Everyone around me was shocked,half of me in that moment.I was on the edge of my racing hand.I became what I despised. I ... Read more
Published on July 21, 2025 00:08
July 20, 2025
சிறை
இதயப் பரிசோதனைக்காகமருத்துவரைப் பார்த்தேன்’குளிக்கும்போது நெஞ்சுவலிக்கிறதா?’ என்றார்ஆச்சரியத்துடன் ’ஆமாம்’ என்றேன். பிறகு சித்த மருத்துவம்வலியை நிறுத்தியது என்னை மற்றவர்பைத்தியமெனச் சொல்வதுண்டுஎங்கள் வீட்டில்கண்ணுக்குத் தெரியாதஒரு கடிகாரம் இருக்கிறது நான் குளிக்கப் போகிறேன்நேரம் 7.32வெளியே வருகிறேன்நேரம் 8.02சரியாக அரை மணி நேரம்பல் துலக்குதல் இரண்டு நிமிடங்கள்சவரம் மூன்று நிமிடங்கள்குளியல் இருபத்தைந்து நிமிடங்கள்இதுதான் கணக்குநீங்கள் எப்படிக் குளிக்கிறீர்கள்?ஐந்து நிமிடத்தில்?வாழ்த்துக்கள், நீங்கள் ஒரு ரோபோ குளியலறைக் குழாய் சரி செய்யப்ளம்பர் வருவதாக இருந்தது’அதற்குள் குளித்து விடவா?’என்றேன்’நீ முக்கால் மணி நேரம் குளிப்பாயே?’என்றாள் மனையாள் ‘ஆ, ... Read more
Published on July 20, 2025 07:06
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

