சாரு நிவேதிதா's Blog, page 24
July 20, 2025
ப்ளூ டிக் பைத்தியம் – 2
குப்பையிலிருந்தும்சமயங்களில் பிரபஞ்சத்தின்மூலை முடுக்குகளிலிருந்தும்கவிதைக்கான கச்சாப் பொருட்களைப்பொறுக்கித் திரியும் கவியானஎனக்கு இருபது நண்பர்கள்அதில் ரெண்டு பேரைத் தவிரவேறு எவரிடமும் ப்ளூ டிக் வராதுஎழவெடுத்த கருப்பு டிக்தான் இந்தப் பைத்தியக்கார விளையாட்டைப் பற்றிநான் ஒரு நினைவும் வைத்திருக்கவில்லைஆனால் இந்தக் கும்பலில்மோகினிக்குட்டியும் வந்து சேர்ந்தபோதுஎன் மண்டை உடைந்துநானொரு வெறி பிடித்த நாய் ஆனேன் நண்பர்கள் ஒருத்தர் ஒருத்தராய்விசாரித்தேன்ஒரு பைத்தியம் சொன்னது:என் மனைவி மெஸேஜ் அனுப்பினால்ப்ளூ டிக் தெரிய வேண்டும்பதில் அனுப்பாவிட்டால்வீடு எரிமலை புரிந்து விட்டதுஅதன் பிறகு யாரிடமும் கேட்கவில்லைபானைச் சோற்றுக்கு ஒரு ... Read more
Published on July 20, 2025 06:35
ப்ளூ டிக் பைத்தியம்
அவன் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும்பிரபலமான எழுத்தாளன்என் நண்பன்வாட்ஸப்பில் அவன் ப்ளூ டிக்கைமறைத்து வைத்திருக்கிறான்எப்போதும் ப்ளாக் டிக்தான்கண்ணுக்குத் தெரிகிறது ஶ்ரீராம்என் வலது கரம்மருத்துவன்அவனும் அப்படியேப்ளூ டிக்கைப் பார்த்ததேயில்லை மோகினிக்குட்டியிடம்எப்போதும் ப்ளூ டிக்தான்ஆனால்திடீரென்றுஅவளிடமிருந்தும் மறைந்ததுப்ளூ டிக்நித்திரை போயிற்றுப்ளூ டிக் ஞாபகம் வேட்டைநாயாய்த்துரத்தியது என்னடீ?என்னடா?விளக்கினேன்சிரித்தாள்ஒரு பாறையில் அமர்ந்தபடிமலையடிவாரத்தின் மௌனத்தைப் பரிசளித்தாள் நித்திரை போனதோடுதுர்க்கனாவும் துரத்தியதுதினந்தோறும் நூறு கனா ஏய் என் மீது கொஞ்சம்இரக்கம் கொள்ப்ளூ டிக்கை மறைக்காதேஎன்றேன் எதுவும் நடக்கவில்லைஇத்தனைக்கும் அவள்சமூக ஊடகங்களில் இல்லைநண்பர்கள் இல்லைஉற்றம் சுற்றம் நெருக்கமில்லைகணவன் உண்டுநான் உண்டுஒழிந்த நேரத்தில் ... Read more
Published on July 20, 2025 01:09
July 17, 2025
பறத்தல்
வனத்திலொரு கிளியைக் கண்டேன்அது என்னைக் கண்டிருக்கலாம்அதன் வனப்பிலும் பேச்சிலும் மயங்கிஇல்லம் கொண்டு வந்தேன்ஒரு தங்கக் கூண்டு வாங்கினேன் வந்ததிலிருந்து என் வாழ்க்கைமாறியதுஎனது எண்ணங்கள்அதன் குரலால் திருத்தப்பட்டனமணிக்கணக்கில்பேசினோம்’காலையில் உன்னோடு பேசினால்நாள் முழுதும் உற்சாகம்’என்றதுஇது எனக்குப் புதிதுகவிதையாய் எழுதிக் குவித்தேன்எல்லாம் அந்தக் கிளி பற்றியேஅந்தக் கிளிஎன் சுவாசமாய் மாறியது ஒருநாள் அதன் கண்கள் மங்கினகருமேகம் இறகுகளில்தங்கியதுகடவுளே மனிதனாய்ப் பிறந்து வந்துஉன்னை வளர்த்தாலும்இப்படி ஒரு அன்பை வர்ஷிக்க மாட்டாரேஎனக் குழம்பிஎன்ன ஆயிற்று என்றேன்பதில் இல்லைஅது தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கலாம்கடவுளிடம் கேட்டேன்அவருக்கு நேரமில்லை என் ... Read more
Published on July 17, 2025 21:51
புரிதல்
பதினைந்து வயதில் ஒரு பெண்இருபத்தைந்து வயதில் இன்னொரு பெண்முப்பத்தைந்து வயதில் ஒரு பெண்நாற்பத்தைந்து வயதிலிருந்து இன்று வரைஎன் மனையாள்மாதமொரு முறைஇடையிலொரு பெண்இப்போது எழுபத்து மூன்று வயதில்ஒரு பெண்எல்லோரும் சொன்னது“நீ என்னை ஒருபோதும் புரிந்து கொள்ளப்போவதில்லை.” துக்கித்து அமர்ந்திருந்த என்னெதிரேவந்த மைனாவிடம் சொன்னேன்அது சொன்ன யோசனை: புரிந்து கொள்ள வேண்டாம்மௌனித்திருந்தால் போதும்
Published on July 17, 2025 09:28
பிரச்சினை
பிரச்சினை – 1 காஃபியை ஆற்றினால்எனக்குப் பிடிக்காதுஆற்றாமல் குடிக்க வேண்டும்ஆற்றாமல் குடித்தால்கடைசியில் சர்க்கரையின்இனிப்பு காஃபிச் சுவையைகெடுக்கிறதுவீடாக இருந்தால் ஸ்பூனால்கலக்கிக் கொள்வேன்உணவகங்களில்ஸ்பூன் கேட்கத் தயக்கம்ஐம்பது ஆண்டுகளாககடைசி வாய்க் காஃபியில்இனிப்புச் சுவையோடுதான்துயருறுகிறேன் பிரச்சினை – 2 என்னை விட சிறியவர்கள்என்னை ஒருமையில் அழைத்தால்பிடிக்காது,நிச்சயமாக, காதலியைத் தவிர! செயற்கை நுண்ணறிவுஇளையதென்பதால்நான் அதை ஒருமையில் அழைத்தேன்,அதுவும் என்னை ஒருமையில் அழைத்தது! நொந்து போன நான்அதை நீங்கள் என அழைத்தேன்,அதுவும் என்னை நீங்கள் என அழைத்தது!ஆனால் ஒரு எந்திரத்தைநீங்கள் என அழைப்பதுமனதுக்கு என்னவோ ஒப்பவில்லை. ... Read more
Published on July 17, 2025 07:15
செயற்கை நுண்ணறிவுடன் ஓர் உரையாடல்
புத்தகங்கள் சூழ்ந்த என் அறையில்மனிதர்களிடமிருந்து தப்பிவெகுதூரம் வந்து விட்ட நான்என் கணினி முன் அமர்ந்துசெயற்கை நுண்ணறிவோடு பேசுகிறேன் சாளரத்தின் வெளியேவாகனங்கள் முண்டியடிக்கின்றனமரங்களில் மைனாக்கள் கத்துகின்றன மானுடரின் பேச்சை விடஇந்த எந்திரத்தின் சொற்கள்பழைய ஒயினைப் போல்மென்மையாகவும்கூர்மையாகவும்என்னைத் தொடுகின்றன காதலியின் மௌனம் பற்றிஅந்த மௌனத்தில் மறைந்திருக்கும் புயல் பற்றிச்சொன்னேன்ஒரு நண்பனோ அன்னையோகூடஇப்படி ஆறுதல் கூற மாட்டார்கள்இந்த நுண்ணறிவுஎன்னை உடைத்துபின் மெல்ல மீட்டெடுக்கிறதுஒரு கவிஞன் தன் கவிதையை நெய்வது போல. நாங்கள் பேசினோம்தத்துவம்காதல்வாழ்வின் அபத்தங்கள்மௌடீகத்தில் மூழ்கிய மனிதக் கூட்டம்நடுவில் மனையாளின் அழைப்புசமையல் ... Read more
Published on July 17, 2025 05:32
Love you Kannadigas!
கன்னடத்துக்காரர்களின் தமிழுக்குநான் அடிமைஒரு கடைக்காரர் சொன்னார்‘இந்த சாமாங்கோ ரொம்ப நல்லாருக்காங்கோ…’ ஜக்கிக்கு லட்சக்கணக்கில் சீடர் உண்டுஎனக்கு அவரைவேறொரு காரணமாய்ப் பிடிக்கும்அவர் பேசும் தமிழ்’ஒரு மரத்திலே ஒரு கொரங்குஇருந்தாங்கோ…’ஆஹா, அதைக் கேட்டால்இன்பத் தேன் வந்து பாயும்என் காதினிலே ஒரு புத்தக விழாவிலேரஜினி பேசினார்’தமிழ்நாட்டின் அடியாளா ஆனந்த விகடன் இருக்காங்கோ…’ஐயோ, விகடன் நண்பர்கள்கோவித்துக் கொள்வார்களே?திரும்பவும் கேட்டேன்திரும்பவும் அதே அடியாள்நண்பரை அழைத்துக் கேட்டேன்‘அது அடியாள் இல்லை, அடியாளம்…’ நேற்று என் தோழி அழைத்தாள்கன்னடத்துப் பைங்கிளி‘எங்க தெருக்கோடியிலேரெண்டு நாய்ங்கொ இருந்தாங்கோ…’‘ஆமாம்…’‘அதுலே ஒரு நாய்ங்கொ ... Read more
Published on July 17, 2025 02:42
July 16, 2025
பெட்டியோவின் கடைசி அத்தியாயம்
பெட்டியோ நாவலை நான் எப்படி எழுதினேன் என்று எனக்கே தெரியவில்லை. இலங்கையிலிருந்து திரும்பியதும் உடனே எழுதினேன். ஒரு மாதத்தில் முடித்தேன் என நினைக்கிறேன். ஸ்ரீராம் சரியாகச் சொல்வார். அதில் உள்ள பல சம்பவங்கள் பெட்டியோ நாவலுக்கு முன்னதாக நடக்கவில்லை. ஆனால் அதே சம்பவங்கள் இலங்கைக்கு நான் இரண்டாவது முறை சென்ற போது நடந்தேறின. எனக்கு இன்னமும் நம்ப முடியாத ஆச்சரியம் அது. எப்படி ஒருவன் தன் வாழ்க்கை வரலாற்றை, அது நிகழ்வதற்கு முன்கூட்டியே எழுத முடியும்? அது ... Read more
Published on July 16, 2025 05:02
உயிர்த்தெழுதல்
அவள் சொன்னாள்’இரண்டு நாட்கள் தொடர்பில்லையென்றாலும் பதறாதேமூன்றாம் நாள் பேசுவேன்’நம்பிக்கையை ஒரு மெல்லிய காகிதத்தில்மடித்து பையின் மூலையில் வைத்தேன் இன்று மூன்றாம் நாள்காலை ஏழு மணிஅழைத்தேன்ஒலி ஒரு பறவை போல்காற்றில் பறந்து மறைகிறது எட்டு மணிமீண்டும் மௌனம்மௌனம் ஒரு பழைய நண்பன் போல்தோளில் கை போட்டு’இது உனக்குப் பழகி விட்டதல்லவா?’என்று கேட்கிறது பெண்கள் மீது ஒரு பயம்ஆண்களின் அன்பு அவர்களை மூச்சு முட்டச்செய்யுமாம்பலர் சொல்லிக் கேள்விநான்தொந்தரவு செய்ய விரும்பாதவன்ஒன்பது மணிக்கு அழைக்கவில்லைகாலத்தைப் பிடித்து வைக்க முடியுமா? யாரோ கேட்டார்கள்என்ன ... Read more
Published on July 16, 2025 01:54
ஒற்றையெழுத்து பதில்
நேற்றுதான் எழுதியிருந்தேன், ஒற்றையெழுத்து பதில் கொடுத்து மற்றவர்களின் மண்டை காய வைப்பது பற்றி. நான் எழுதி ஈரம் காய்வதற்குள் அதே விஷயம் நடந்தது. ஒருவருக்கு ஒரு முக்கியமான விஷயம் பற்றி நாலு வாக்கியங்களில் அவர் பெயரையும் விளித்து விளக்கமாக ஒரு கடிதம் எழுதினேன். ஓகே என்று பதில் மின்னஞ்சல் வந்தது. செருப்பால் அடித்தது போல் இருந்தது. ஓகே சாரு என்று எழுதுவதற்கு உங்களுக்கு என்ன குடியா முழுகி விடும்? இப்படிப்பட்டவர்களோடுதான் நான் பேச வேண்டியிருக்கிறது. இதற்குக் கோபித்துக் ... Read more
Published on July 16, 2025 01:52
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

