சாரு நிவேதிதா's Blog, page 27
July 3, 2025
வலி உணரா மனிதர்கள்
ஒரு கல்லைப் போலஒரு பனிக்கட்டியைப் போலஎப்படி அவளால் முடிகிறது,எது நடந்தாலும் எதுவுமேநடக்காதது போல் இருக்க? பழைய கதவுகூடதிறந்து மூடப்பட்டால்கொஞ்சம் புலம்புமே? நான் அவளைப் பார்க்கிறேன்கையில் ஒரு தேநீர்க் கோப்பைஎப்போதும் நிறைந்து தளும்பும்புன்னகைஆனால் கண்கள் மட்டும்வெறுமையாகவீட்டு ஜன்னலில் மறந்து வைத்துவிட்டபழைய கண்ணாடி போல. ஒரு காலத்தில்,நானும் தெருவில்திருட்டுத் தொழில் புரிந்தவன்அடி வாங்கினால் வலி தெரியாதிருக்கமாட்டு வால் சூப் குடித்தவன். ஆனால் அவள்எந்தப் பள்ளியில் பயின்றாள்,வலி மரத்துப் போக? ஒருவேளை,ஒரு பழைய பெட்டியின்துருப்பிடித்த பூட்டுஎதையும் உணர மறந்து போகுமே,அப்படியா? அல்லது,அவள் ... Read more
Published on July 03, 2025 23:06
ஆதியிலே வார்த்தை இருந்தது
நான்வார்த்தைகளின் கடலில் வாழ்கிறேன்நட்சத்திரங்களின் தூசியைப் போல்அவை என்னைச் சூழ்கின்றனஎன் முன்னோரின் எலும்புகளிலிருந்துகாவியங்கள் செய்கிறேன் சில வார்த்தைகள் செத்து மண்ணோடுமறையசில தேய்ந்து கற்களாய் உருள்கின்றனசிலவோ உயிர்த்துப் பொங்கும் வார்த்தைகளாய்என் உயிர் எரிக்கின்றன வார்த்தைகளால் மனிதர்கள் மகிழ்கிறார்கள்வார்த்தைகளால் மனிதர்கள் காதலிக்கிறார்கள்வார்த்தைகளால் மனிதர்கள் புணர்கிறார்கள்தீர்க்கதரிசிகள் வார்த்தைகளை விதைத்துநம்பிக்கை விருட்சங்களை வளர்க்கின்றனர்ஆனால் அவை மோதிஆயிரமாயிரம் ஆண்டுகள்பூமியிலே குருதிப்புனல் ஓடுகிறது என் காதலிஒரு ரயில் நிலையத்தின் மஞ்சள் வெளிச்சத்தில்பதினெட்டு மாதங்கள் பிரிவின் கல் மேல் காத்திருஎன்றாள்அந்த ஆறு வார்த்தைகள்என்னை மரணத்தின் கரையில் தள்ளியதுஅவளுடைய அடுத்த ... Read more
Published on July 03, 2025 11:19
துக்கம் பரவசம்
Adagio for Strings கேட்டுஉங்கள் கதைநாயகிமீளாத் துயரில் தோய்ந்தாளெனஎழுதியிருக்கிறீர்கள்.எனக்கோ அதைக் கேட்டால்ஆன்மாவில் பரவசம்அருவியெனப் பொங்கி வழிகிறதுஎன்றாள் என் தோழி.நான் சொன்னேன்:ஆனந்தமும், துக்கமும், பரவசமும்—ஒன்றே, வேறு இல்லை.பனிமலைகளின் பாதாள மௌனத்தில்,ஒரு நொடியின் நிழல்வாழ்க்கையின் நித்தியப் பொறியைத் தீண்டுகிறது.
Published on July 03, 2025 09:19
மேலும்…
என் நண்பனின் தோழிதென்னாட்டுத் திரையுலகின் காமதேவதைஇளம்வயதில் இறந்து போனாள்தற்கொலையென்றார்கள்கொலையென்றார்கள்தற்கொலையென்றே உறுதியாய்நம்பினேன்ஒரு நட்சத்திரத்தின் தற்கொலையைப் போலஒரு நாய் அல்லது ஓநாயின் தற்கொலையைப் போலஒரு விருட்சத்தின் தற்கொலையைப் போலஒரு நதியின் தற்கொலையைப் போலஒரு நாகரீகத்தின் தற்கொலையைப் போலஒரு வனத்தின் தற்கொலையைப் போலஒரு இனத்தின் தற்கொலையைப் போலஒரு மொழியின் தற்கொலையைப் போலஒரு துறவியின் தற்கொலையைப் போலநிகழ்ந்தது அந்த தேவதையின் தற்கொலை அது தற்கொலையென்று நான்அறிந்தது எப்படியென்றால்நானும் தற்கொலை செய்து கொண்டபோதுஒரு நாளில் இரண்டு மூன்று கவிதைகள் எழுதுகிறேன்ஒரு நாளில் இரண்டு மூன்று ... Read more
Published on July 03, 2025 03:20
July 2, 2025
ஒன்றும் தெரியாத கண்ணாடி
வாட்ஸப்பைப் பார்த்தேன்ஒன்றுமில்லைமோட்டுவளையைப் பார்த்தேன்பிறகு மின்னஞ்சலைப் பார்த்தேன்ஒன்றுமில்லைமோட்டுவளையைப் பார்த்தேன்பிறகு வாட்ஸப்பைப் பார்த்தேன்ஒன்றுமில்லைபிறகு மின்னஞ்சலைப் பார்த்தேன்ஒன்றுமில்லைமோட்டுவளையைப் பார்த்தேன்வாட்ஸப்பைப் பார்த்தேன்ஒன்றுமில்லைபிறகு மின்னஞலைப் பார்த்தேன்ஒன்றுமில்லைமோட்டுவளையைப் பார்த்தேன்வாட்ஸப்பைப் பார்த்தேன்ஒன்றுமில்லைபிறகு மின்னஞ்சலைப் பார்த்தேன்ஒன்றுமில்லைவாட்ஸப் மின்னஞ்சல் வாட்ஸப் மின்னஞ்சல் வாட்ஸப் மோட்டுவளை வாட்ஸப் மோட்டுவளை வாட்ஸப் மின்னஞ்சல் வாட்ஸப் மின்னஞ்சல் மோட்டுவாட்ஸப் மோட்டுவளைஒன்றுமில்லை ஒன்றுமின்னஞ்சல்வாட்மின்மில்லை மின்வாட்ஸப் மோட்டுவளை மோட்டுவளை ஒன்றுமில்லைஒன்றுமில்மோட்டுவளைவாட்ஸப்ஸப்ஸப்ஸப்மோட்டுவஒன்றுமில் ஏய் நிறுத்து என்றொரு கீச்சுக்குரல்“ரெண்டு மணி நேரமாக உன்சாளரக்கம்பியில் அமர்ந்திருக்கிறேன்நீ என்னை கவனிக்கவில்லை, செல்கிறேன்”என்று சொல்லிப் பறந்ததுஅந்தத் தேன்சிட்டு
Published on July 02, 2025 09:09
விமர்சகர்களுக்கு ஒரு பதில்…
கீழே வரும் நீண்ட குறிப்பை எழுதியவரின் பெயர் தெரியவில்லை. அதை எனக்கு அனுப்பிய நண்பர் நான் இதற்கு ஒரு பதில் எழுத வேண்டும் என்று கேட்டிருந்தார். பொதுவாக இது போன்ற மட்டித்தனமான குறிப்புகளை நான் படிப்பதுகூட இல்லை. தமிழ் சமூகம் எத்தனை ஃபிலிஸ்டைனாக இருக்கிறது என்பதற்கு இந்தக் குறிப்பு ஒரு உதாரணம். மிஸ்டர் சாரு நிவேதிதா! உங்கள் பதிவைப் படித்தபின், எழுத்தாளன் என்ற பெயரில் ஒரு அகம்பாவப் பிச்சைக்காரனின் கூப்பாடுதான் கேட்கிறது. தமிழ் மக்களை “புத்தகம் படிக்காதவர்கள்” ... Read more
Published on July 02, 2025 06:19
சீரகம் முதல் செக்ஸ் வரை
ஒரு பெண்ணைக் காதலித்தேன்அவள் குலத்தில் சீரகத்துக்குத் தடைஅடிமைக்கு வேறென்ன கதி?சீரகத்தைத் துறந்த நான் பட்டஅபானவாயுவின் அவஸ்தையைஅகிலமே அறியும் அந்த ப்ரேக்கப்புக்குப் பிறகுவந்த பெண் முருங்கைக்காய்க்குத் தடையென்றாள்முன் தோன்றி மூத்த தமிழ்க் குடிக்கோமுருங்கைக்காய் கலாச்சார அடையாளம்ஆனாலும் அடிமைக்கு வேறு புரிதல் உண்டா?முருங்கைக்காயை விட்டேன் அந்த ப்ரேக்கப்புக்குப் பிறகுவந்த பெண் பாலுக்குத் தடையென்றாள்கருப்புக் காப்பிக்குத் தாவினேன்பால் கோவா, பால் பாயாசம், பால் சர்பத்சகலமும் துறந்தேன்ஆனாலும் பாலியல் எழுத்தாளன் என்றஅடையாளம் ஒட்டிக்கொண்டே வந்தது அந்த ப்ரேக்கப்புக்குப் பிறகுவந்த பெண் முத்தத்துக்கு மறுப்பு ... Read more
Published on July 02, 2025 04:16
June 27, 2025
நான் ஒரு மூடன்…
2016 நவம்பர் 9ஆம் தேதி மாலை தில்லி குட்காவ்(ங்) பகுதிக்கு கனாட் ப்ளேஸிலிருந்து மெத்ரோ ரயில் பிடித்துப் போனேன். அங்கேதான் தருண் தேஜ்பாலின் வீடு இருந்தது. அதற்கு முந்தின நாள்தான் மோதி சில ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருந்தார். அப்போது நான் குடிப்பதை விட்டிருந்தேன். தருண் வீட்டில் ஒரு அற்புதமான பார் இருந்தது. வேடிக்கை மட்டும்தான் முடிந்தது. அதற்கு முன்பு தருணை கோவா சிறையில் பார்த்தேன். சிறையில் குடிக்க முடியாது. பிறகு எக்ஸைல் வெளியீட்டு விழாவில் ... Read more
Published on June 27, 2025 05:12
June 25, 2025
உதவி வேண்டும்…
என்னுடைய பெட்டியோ நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது. அடுத்த மாதம் பதிப்பகத்திடம் கொடுத்து விடுவேன். மொழிபெயர்ப்பாளருக்கு நான் இரண்டரை லட்சம் கொடுக்க வேண்டும். அதில் ஐம்பதாயிரம் கொடுத்து விட்டேன். மீதி கொடுக்க வேண்டும். வாசக நண்பர்களிடம் கேட்டேன். இருபதாயிரம் வந்தது. கொடுக்க வேண்டிய தொகை இரண்டு லட்சம். கிடைத்தது இருபதாயிரம். ஒரு இருபது நண்பர்களுக்கு இது பற்றி நான் எழுதியிருந்த வேண்டுகோளை வாட்ஸப்பில் அனுப்பினேன். யாரிடமிருந்தும் பதில் இல்லை. பணமும் வரவில்லை. ஒரே ஒரு நண்பர் பதில் எழுதினார். ... Read more
Published on June 25, 2025 00:33
June 23, 2025
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

