Adagio for Strings கேட்டுஉங்கள் கதைநாயகிமீளாத் துயரில் தோய்ந்தாளெனஎழுதியிருக்கிறீர்கள்.எனக்கோ அதைக் கேட்டால்ஆன்மாவில் பரவசம்அருவியெனப் பொங்கி வழிகிறதுஎன்றாள் என் தோழி.நான் சொன்னேன்:ஆனந்தமும், துக்கமும், பரவசமும்—ஒன்றே, வேறு இல்லை.பனிமலைகளின் பாதாள மௌனத்தில்,ஒரு நொடியின் நிழல்வாழ்க்கையின் நித்தியப் பொறியைத் தீண்டுகிறது.
Published on July 03, 2025 09:19