சாரு நிவேதிதா's Blog, page 29
June 22, 2025
பிறந்தநாள் பரிசு
இன்று அராத்துவின் பிறந்த நாள். அதை முன்னிட்டு அவர் நமக்குத் தந்திருப்பது Minxie-யும் அதன் தமிழ் வடிவமான குட்டிமா-வும். பிறந்த நாள் பரிசாக நாம் அவருக்குத் தருவது இந்த நாவல்களை வாங்குவதே. இணைப்பு கீழே: India https://amzn.in/d/91mKkW9 USA https://a.co/d/2On7FJL UK https://amzn.eu/d/8GrhXj5
Published on June 22, 2025 03:05
June 19, 2025
கொஞ்சம் பொறுங்கள், வருகிறேன்
தன்னுடைய Minxie நாவலின் ஆங்கிலம் தமிழ் மாதிரி, அல்வா மாதிரி மனதில் போகும் என்று நூற்றுக்கு முந்நூறு முறை சொல்கிறார் அல்லவா அராத்து? அதைப் பார்த்ததும் எனக்கு நானும் ஸ்ரீயும் சேர்ந்து எழுதும் Anatomy of Dissonance நாவலின் மொழி ஞாபகம் வந்தது. அந்த நாவல் எலீட் வாசகர்களுக்காக மட்டுமே எழுதப்படுகிறது. மிகக் கடினமான ஆங்கிலமாக இருக்கும். வேண்டுமென்றே கடினமான ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று எழுதவில்லை. ஜேம்ஸ் ஜாய்ஸ் அப்படி நினைத்து எழுதவில்லை அல்லவா? பெட்டியோவின் ... Read more
Published on June 19, 2025 09:34
மோடுமுட்டிகளே, கொஞ்சம் விலகியிருங்கள்…
கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எனக்கு ஒரு வாட்ஸப் மெஸேஜ் வந்தது. என் பெயர் இன்னது. ஊர் இன்னது. (சென்னைக்கு அருகில் உள்ள ஒரு ஊர்) நீங்கள் கோவா செல்லும் தேதி என்ன? சாலையில் செல்லும் ஒருவரை அழைத்து அவர் கன்னத்தில் அறைந்தால் அந்த ஆள் என்ன ஆவான்? அதேபோல் இருந்தது எனக்கு. எனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் நான் அந்த ஆபத்தை சீனி பக்கம் தள்ளி விட்டு விடுவேன். ஊசித் துளையில் ஒட்டகத்தை அல்ல, காண்டாமிருகத்தையே நுழைத்துப் ... Read more
Published on June 19, 2025 09:22
சாம்பார் காவியம்
இருபத்தைந்து வயது வரைஅம்மாவின் சமையல்அம்மியும் விறகு அடுப்பும்பிறகு?பிறர் சமைத்துச் சாப்பிட்டதுவிடுதிகளிலும் தோழிகளின் இல்லங்களிலும் என் வீட்டுச் சமையலில் என் பங்கு எண்பது சதவிகிதம்மனையாள் சிரிக்கிறாள்’எண்பது என்னுடையது!’மீதி இருபதுதான் என் மனையாள்நேரக் கணக்கு வைப்போம்ஒன்றரை மணி நேரம் நான்இருபது நிமிடம் அவள்கணிதத்தில் நான் ‘வீக்’அதனால் சதவிகிதங்கள் சற்றேதடுமாறலாம் வாரத்தில் இரண்டு நாள்சாம்பார் ஒரு பெருஞ்சட்டியில்மதியம் சாம்பார்இரவு சாம்பார்மறுநாள் இட்லிக்கு சாம்பார்மறுபடி மதியம் சாம்பார்மறுபடி இரவு சாம்பார்மறு மறுநாள் இட்லிக்கு சாம்பார்மறு மறுநாள் மதியம் முழித்துக்கொள்வேன்ஸ்விக்கியில் ஆட்டுக்கறிஅவள் சைவம்சாம்பாரே தொடரும் ... Read more
Published on June 19, 2025 05:29
MINXIE cover release
MINXIE என்று ஆங்கிலத்திலும் குட்டிமா என்ற பெயரில் தமிழிலும் வெளியாகும் அராத்து எழுதிய நாவலின் அட்டை இங்கே வெளியிடப்படுகிறது. ஆங்கிலப் பதிப்பை நீங்கள் இன்றே வாங்கலாம். இந்தியாவின் அதன் விலை 99 ரூபாய்தான். ஆங்கிலம் மிக மிக எளிமையாக இருக்கும். எந்தத் தயக்கமும் வேண்டாம். இது அமேஸானின் சர்வதேசப் போட்டிக்குப் போவதால் நீங்கள் வாங்குவதைப் பொறுத்துத்தான் போட்டியில் வெல்வது உறுதியாகும். ஏற்கனவே அமேஸான் நாவல் போட்டியில் அராத்துவின் ஓப்பன் பண்ணா நாவல் முதல் பரிசு பெற்றிருக்கிறது. ஐந்து ... Read more
Published on June 19, 2025 05:13
சமையல்காரப் பெண்
என் தோழி வீட்டுக்குச் சென்ற போதுபார்த்தேன்இருபத்தாறு வயதாம்எலும்பின் மேல் போர்த்திய தோலாய்பதின்மூன்று வயது தோற்றம்பத்து வீடுகளில் சமைக்கிறாள்காலை ஆறரை, ஏழரை, எட்டரைஒன்பது, பத்து மணி.பிறகு மாலையில் ஐந்து வீடுநாலாயிரம் ஒரு வீட்டுக்குஅம்மாவுக்கு, தம்பிக்கு, தம்பி மனைவிக்கு,அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கு…எல்லாம் இவள் கைகளில் திருமணம்?ஹா, கனவு கூட காண முடியாதஒரு உடைந்த கண்ணாடி சிறு வீடு, இரண்டு அறைகள்ஒரு அறையில் தம்பி குடும்பம்மற்றொரு அறையில் அவ்வப்போதுவந்து போகும் தங்கை குடும்பம்இவள்?வராந்தாவில், கழிப்பறை அருகேஒரு துணியில் படுக்கிறாள்இரவு முழுதும் கதவுகள் ... Read more
Published on June 19, 2025 00:59
ஏழு லட்சமும் இருநூறும்
ஜாக் ப்ரேவர்எனக்குப் பிடித்த கவிஅவனுடைய பரோல்ஏழு லட்சம் விற்பனைஎன் தொகுதி இருநூறு பிரதிகள் காரணம் தெரியும்,சொன்னால்பைத்தியம் என்கிறார்கள் ஆனால்,மௌனமே என்கவிதையின் மொழி
Published on June 19, 2025 00:57
தூக்குக் கயிறு
நான் என்ன செய்து விட்டேனென்றுஎன்னைக் கயிற்றில் தொங்கவிடத் துடிக்கிறீர்?யாரும் செய்யாததையா செய்து விட்டேன்?அடித்தால் செத்து விடுவாளெனக் கண்டேனா? வேலை செய்து செய்து என் கரங்கள் இரும்பாகிவிட்டன, அது என் பிழையா?அவளென்ன, என்னைக் கொஞ்சமா சித்ரவதை செய்தாள்?எந்த வேலை சொன்னாலும் உருப்படியாய்ச் செய்ததில்லை. எப்போதும் ஒரு யோசனைஎந்தக் கோட்டையைப் பிடிக்க யோசிக்கிறாய்சொல், ரெண்டு பேரும் சேர்ந்து யோசிப்போம்என்றால் ஒரு பதிலும் வராது சமைக்கச் சொன்னால்,தெருநாயும் சீந்தாத ஒரு சாப்பாடுநான் சமைத்தால் பன்றி போல் தின்கிறாள் மனித வாழ்வில் உணவுக்குப் ... Read more
Published on June 19, 2025 00:43
June 18, 2025
தொலைபேசி எண்
அடையாள அட்டை நாற்பது வயது என்கிறதுபார்க்க அறுபதைத் தாண்டியவனாகத் தெரிந்தான்சிரியன்அருகே மகள், பதினான்கு வயதுமனைவியும் மற்றுமிரு மகள்களும் உண்டென்றான்நாட்கள் பலவாய் உணவில்லைபொய்யில்லை, பார்த்தாலே தெரிகிறதுஅகதி உதவி வேண்டி நிற்கிறான் ஒரு நாளில் முப்பது பேர்அதற்கு மேல் இல்லை என்கிறது எங்கள் விதிஉதவி வேண்டி வருவோரோ தினசரி முந்நூறு இவனை எப்படி வெளியேற்றுவது?முன்னுரிமையில் இவனே கடைசி.போரில் கணவனை இழந்துஇரண்டு மூன்று சிசுக்களோடுவரும் பெண்களெல்லாம் உண்டு எடுத்துச் சொன்னேன்ஒரு துண்டுக் காகிதத்தை நீட்டினான்அதிலிருந்தது ஒரு தொலைபேசி எண் நகரத்தின் விபச்சாரத் ... Read more
Published on June 18, 2025 23:07
ஹம்ரா தெரு
பெய்ரூட்டின் பிரதான ஹம்ரா தெருநானும் அமல்ராஜும் நடந்து கொண்டிருக்கிறோம்ஒரு உணவு விடுதியின் வாசலில் அமர்ந்துஒரு ஜோடி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறதுஅவர்களுக்கு எதிரே ஒரு பெண்தன் வலதுகரத்தை நீட்டிக்கொண்டிருக்கிறாள்பதின்மூன்று வயது இருக்கலாம்ஹிந்திப்பட ஹீரோயின் தோற்றம்ஜோடி அவளை கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறதுஅதிர்ச்சியுடன் அமல்ராஜைப் பார்க்கிறேன்சிரியா என்கிறார்.
Published on June 18, 2025 18:16
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

