சாரு நிவேதிதா's Blog, page 30

June 12, 2025

ஆல்பெர் கம்யூவும் பயத்தம் பருப்பும்

1 என் அகவை எழுபத்து மூன்றுநூற்றி அறுபது நூல்கள் எழுதியிருக்கிறேன். இன்று காலை என் மனையாள் சொன்னாள்:‘பயத்தம் பருப்புக்கு நிறைய தண்ணீர் வைக்கக் கூடாது, துவரம் பருப்புக்கு வைக்கலாம்.’ ஆல்பெர் கம்யூ தன் ஆயுள் முழுதும்இதையே சொன்னான்அவன் மரணமும் அப்படியே ஆனது லூர்மரினில் இருந்து பாரிஸுக்குஅறுநூற்று அறுபது கிலோமீட்டர்.ரயில் டிக்கெட் வாங்கியிருந்தான். ஆனால் அவன் நண்பன், பதிப்பாளன் மிஷல் காலிமார்,‘வா, என் லக்ஸுரி Facel Vega காரில் போகலாம்’என்றான். ஜனவரி 4, 1960. கடும் பனிப்பொழிவு சாலை கண்ணாடிபோல் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 12, 2025 06:22

நிழலுடன் நடனமாடுதல்

பிடித்த கவிஞர்என்பதால் படித்தேன்வாழ்க்கை வரலாறுஎல்லா தேர்விலும் முதல் மதிப்பெண்பொறியியல், பௌதிகம், வானவியல்—சர்வதேச உச்ச நிறுவனங்களிலிருந்துஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பட்டம்கணிதப் பேராசிரியர், பௌதிகப் பேராசிரியர்.நூற்றி ஐந்து வயது வரை வாழ்ந்தார்விளம்பரத்தில் வருவதற்குஹாலிவுட் நடிகைகளின் கட்டணம்.எமது மொழியின் உச்ச கவிஞரெனஇன்னொரு உச்ச கவிஞரால் உறுதி. நான்?பள்ளித் தேர்விலேயே தோல்வி.இருபது ஆண்டுகள் ஸ்டெனோ அடிமைமணமான நாள் முதலாய் குடும்ப அடிமை.குடிக்கவும் உரிமை இல்லை.கவிதை எழுதினால் நிச்சயமாய்உண்டு நூறு வாசகர்அதில் அம்பது பேர் சொல்கிறார்கள்:‘இது கவிதையே இல்லை!”ஒரு சக கவிஞர் ஆறுதல்:‘நம் கவிதை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 12, 2025 01:21

June 11, 2025

யாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்

1 நான் யாசகர் இனத்தின் நிழல்,ஈராயிரம் ஆண்டுகளின் எலும்புகளில்என் மூதாதையர் கையேந்தினர். வயல்களில் பறவைகளுடன்தானியத்தின் தூசைப் பகிர்ந்தோம்உப்பு புளி மிளகாய்—தெருக்களில் பாடி யாசித்தோம். அன்னையிடம் உழைப்பையும்கன்னியரிடம் காதலையும் காமத்தையும்நண்பரிடமும் பெயரறியா அன்பரிடமும்எண்ணிலாப் பொருளை யாசித்தேன். புரியா தவறுகளுக்கும் மன்னிப்பையாசித்தேன் ஒரு கை அன்னமளித்ததுமற்றொரு கை ஆடையளித்ததுஇன்னொரு கை இடமளித்தது ஆயிற்று அகவை எழுபத்து மூன்றுயாசகம் சலித்தாலும் மீறவொரு வழியில்லைஆசானின் இல்லத்தில்அடுத்த வேளை அன்னம்யாசித்தே பெற வேண்டும்.இது மண்ணின் விதி. 2 ஆறுதல்:அரசனே ஆனாலும்ஆசானின் தாள் பணிவான். 3 ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2025 05:46

நோபல் பரிசு – நிகானோர் பார்ரா

வாசிப்புக்கான நோபல் பரிசுஎனக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும்நான் ஒரு சிறந்த வாசகன்என் கையில் அகப்பட்டதையெல்லாம் வாசித்து விடுகிறேன் தெருப்பெயர்களை வாசிக்கிறேன்நியான் விளம்பரங்கள்கழிப்பறை வாசகங்கள்புதிய விலைப்பட்டியல்கள் போலீஸ் செய்திகுதிரைப் பந்தய முன்கணிப்புகள் மற்றும் லைசன்ஸ் அட்டைகள் என்னைப் போன்ற ஒருவனுக்குவார்த்தை என்பது புனிதமானது நீதிமான்களே, ஒரு வாசகனாகபொய் சொல்லி என்ன லாபம் அடைந்துவிடப் போகிறேன்நான் தொடர்ந்து வாசிப்பவன் எல்லாவற்றையும் வாசிக்கிறேன்வரி விளம்பரங்களைக்கூட விடுவதில்லை ஆம், இப்போதெல்லாம் அவ்வளவாக வாசிப்பதில்லைநேரமில்லை, அவ்வளவுதான்ஆனால், என்னென்னவெல்லாம் வாசித்திருக்கிறேன்! அதனால்தான் எனக்கு வாசிப்புக்கானநோபல் பரிசை வழங்கும்படிஉங்களைக் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2025 04:42

Stiletto

அவள் வயது முப்பத்திரண்டுகணவன், இரு குழந்தைகள்.இருபத்தைந்து வயதில் காதலன்அழுக்கு ஓட்டலின் மங்கிய விளக்குகறை படிந்த சுவர்களில் நிழல்களின் ஆட்டம்உடைந்த படுக்கைநாற்றமெடுக்கும் தலையணைசந்திக்கும் போதெல்லாம்பீர் பாட்டில் தரையில் உருளும்கணவன் கத்தினான், ’இதை முடி,இல்லாவிடில் உன்னை முடிப்பேன்.’அவள் காதலனிடம் சொன்னாள்,‘போதும், நிறுத்திக்கொள்ளலாம்.’அவன் கெஞ்சினான், ’கடைசி முறை, ப்ளீஸ்.’இச்சைகளின் நெடி வீசிய அந்த அறையில்,பதினேழு முறை கத்தியின் கூர்மைஅவள் மார்பில் இறங்கியது. இருபத்து இரண்டு வயதில் இன்னொருத்திதிருமணமாகி ஒரு வாரம்.இமயத்தின் அடிவாரம்ஒரு பாழடைந்த விடுதிகுளிரோடு மழையும் சேர்ந்ததுஇற்றுத் தொங்கும் மரச்சட்டங்களில்மழைத்துளிகள் தெறித்து ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2025 03:59

June 9, 2025

(பின்நவீனத்துவ) பரமார்த்த குருவும் சீடர்களும்…

தோற்றம் கான்ஸ்டான்ஸியோ பெஸ்ச்சியின்பரமார்த்த குருமட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன்.சீடர்கள் ஐவர்புராணங்களின் புழுதியில்காலடி பதித்துகுருவைத் தாங்கினர். இந்தப் பின்நவீனத்துவ குருவுக்கோசீடர் எண்ணிலர்ஒருநாள் பின்நவீனத்துவ குரு அறிவித்தார்:’குரு இறந்து விட்டார்;தந்தையின் பிரம்பு, அதிகாரத்தின் இரும்புத் தடி,ஆதிக்கத்தின் சுருக்குக் கயிறு –எல்லாவற்றையும் குப்பைத்தொட்டியிலேவீசுங்கள்…” ’வீசினோம் நண்பா’கூவினர் சீடர்நண்பா எனக் கேட்டுஉளம் குளிர்ந்தார்பின்நவீனத்துவ குருபின்னே இருக்காதா, குருவைநண்பா என எவன் அழைத்தான்வரலாற்றில்?ரொலாந் பார்த்துக்கேகிடைத்திராத அதிர்ஷ்டமென்றார்பின்நவீனத்துவ குரு காலப்போக்கில் சிலர்பின்நவீனத்துவ குருவுக்கேபாடம் எடுக்கக் கண்டுஅவர்களை மட்டும் பள்ளியிலிருந்துகளையெடுத்தார். காதல் காதலுக்குக் கண்ணில்லை என்பது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2025 05:43

ஆண்டவன்

அரசன் படிக்காத மேதைமேதைகளின் புதிர்வார்த்தைகளில் மந்திரம் தீட்டுபவன்எங்கே மனிதர் துயருறுகிறாரோஅங்கே தோன்றி விண்ணைத் தொடுகின்றான்.தீயோரை வதைத்து தர்மத்தை உயர்த்துகின்றான்நல்லோரைத் துதித்து நம்பிக்கை பொழிகின்றான்குருதியைப் பாலாக்கி சிறார்க்கு அளிக்கின்றான்முதியோரை முதுகில் தாங்கிபுன்னகையை இறைக்கின்றான் நீதிமான் செல்வந்தனின் மைந்தனொருவன்ஏழைப் பெண்ணொருத்தியை வன்கலவி செய்துஇருளில் தள்ளினான்அரசும் பணமும் அதிகாரமும் கூடிவலியோன் பக்கம் வலுவாய் நின்றன.கலியில் இதுவே நியதி என்றார் மூத்தோர்அறம் வீழ்ந்ததென்று அரற்றினர் கற்றோர்எதிர்ப்பு காற்றில் கரைந்து மறைந்ததுஅப்போது தோன்றினான்—நம் நாயகன்!வலியோனையும் வலியோனைத் தாங்கிய ஆயிரம் பேரையும்ஆயுதமேங்கி அழித்தான் அழகன் அழகிகளின் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2025 04:51

June 8, 2025

கூழாங்கல் அல்ல, வைரம்…

என்னுடைய சிறந்த மாணவர்கள் என்று சீனியையும் ஸ்ரீயையும் சொல்ல வேண்டும்.  இவர்கள் இருவரும் என்னிடம் நேரடியாகக் கற்றவர்கள்.  வளன் தொலைவிலிருந்து கற்றவன்.  அவனுக்கு நான் வால்டன் பற்றியும் அதை வாழ்ந்து எழுதிய ஹென்றி டேவிட் தோரோ பற்றியும் கற்பித்த போது அவன் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான் என நினைக்கிறேன்.  அப்போது அவன் கனவில்கூட கண்டிருக்க மாட்டான், பதினைந்து ஆண்டுகளில் அவன் வால்டனில் அமர்ந்து தோரோவையும் சாருவையும் நினைத்துக்கொண்டிருப்பான் என. இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று பாதிரியாராக இருக்கும் ஒருவர் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 08, 2025 23:58

கைகளில் அடங்கிய பேரண்டம்

’உச்சக்கட்ட இன்பம் எது?’ ’பத்து பூனைகள், பத்து பெயர்கள்.லக்கி, டெட்டி, ஸிஸ்ஸி, கெய்ரோ,குட்டி கெய்ரோ, டைகர், ப்ரௌனி,வெல்வெட், ச்சிண்ட்டூ, ச்சோட்டூ.ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு உலகம் ச்சோட்டூ மடியில் ஏறுகிறதுகுட்டியான உரோமக் குவியலாக,மென்மையாக முணுமுணுத்தபடிஎன் மடியில் அமைதியாக உறங்குகிறது.’ ’உச்சக்கட்ட துயரம் எது?’ ‘ஸிஸ்ஸி டைகரைத் துரத்துகிறது,குரல்வளையைக் குதற முயல்கிறது.டைகர் டெட்டியை விரட்டுகிறது,டெட்டி ச்சோட்டுவை மிரட்டுகிறது.’
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 08, 2025 22:15

லயம்

அதிகாலைப் பறவைகள்உத்தரவின்றிப் பாடுகின்றன,காற்றில் இலைகள் அசைகின்றனசூரியன் உதிக்கிறது, மறைகிறது,நிலவு தேய்கிறது, வளர்கிறது,இயற்கை தன் தாளத்தில் ஆடுகிறது.பெண்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்,அல்லதுஹெலிகாப்டரில் திருமணம் செய்யலாமா என்கின்றனர்உயிர்கள் இனப்பெருக்கம் செய்கின்றனமனிதர்கள் பணத்தைத் துரத்துகிறார்கள்,அதிகாரத்தைத் தேடி ஓடுகிறார்கள்புகழின் மீது மயங்குகிறார்கள். ஆண்கள் பெண்களைத் தேடுகிறார்கள்ஆண்களும் பெண்களும் பால்பேதமில்லாமல்காதல் தோல்வியில் மனம் உடைகிறார்கள்உறக்கமின்மையில் உயிர் துவள்கிறதுவெறுப்பில் கொலைகள் பிறக்கின்றன.காமம் வெறியாகி வன்கலவியில் முடிகிறதுமற்றவர் துன்பத்தில் இன்பம் காண்கிறார்கள்நோயில் வாடுகிறார்கள்நோய் முற்றிச் சாகிறார்கள்மகிழ்ச்சியில் நடனம் பிறக்கிறதுஇன்பத்திலும் துன்பத்திலும் பாடல் ஒலிக்கிறது. நாய் நன்றி நவில்கிறதுபூனை துயரத்தில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 08, 2025 21:09

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.