சாரு நிவேதிதா's Blog, page 25

July 15, 2025

ஒரு வேண்டுகோள்

சில வேண்டுகோள்கள் என்றுதான் போட வேண்டும். இருந்தாலும் வேண்டுகோள்கள் என்றால் அதில் லயம் இல்லை. அதனால் இலக்கணப் பிழை பரவாயில்லை என ஒரு வேண்டுகோள் என்று கொடுத்திருக்கிறேன். முதல் வேண்டுகோள். சில தினங்களில் நான் இரண்டு மூன்று கட்டுரைகளையோ கவிதைகளையோ இந்த இணையதளத்தில் வெளியிடுகிறேன். சில நண்பர்கள் அதில் மேலே இருக்கும் ஒரு கட்டுரையையோ கவிதையையோ மட்டும் படித்து விட்டு என்னிடம் பேச வருவார்கள். நான் அதற்கு முந்தைய கவிதை பற்றிப் பேசினால், நான் தினமும் படிக்கிறேனே, ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2025 07:47

Finale of a Symphony

1.அறிமுகம் தேவி!இதை ஒரு மனநோய் விடுதியிலிருந்துஎழுதுகிறேன்இங்கு நானாவித பைத்தியங்கள் வசிக்கிறோம் சிலர் மௌனத்தின் ஆழத்தில் மூழ்கியவர்கள்வார்த்தைகள் தொலைத்து விழிகளால் பேசுவர்சிலர் நெஞ்சில் புயல் கொண்டு நடுங்குவர்கிட்டத்தில் போனால் கோபத்தின் கூச்சலோடு தாக்குவர் சிலர் கண்ணுக்குப் புலனாகா உலகில் வாழ்பவர்மாயக் குரல்களோடு உரையாடுவர்நவரசமும் அவர் நாவில் நடனமிடும்சிலர் உடைந்த கண்ணாடியாய் உள்ளனர்கண்ணீரில் கரைந்து வலியில் தவிப்பர் சிலர் ஒளி மறந்து இருளில் மூழ்குவர்படுக்கையில் புதைந்து மௌனத்தில் தவிப்பர்சிலர் மாயப் புயலில் தொலைந்தவர்கள்கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிடுவர் சிலர் எரியும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2025 06:54

பிரபு காளிதாஸுடன் ஒரு காலைப் பொழுது

காலை ஐந்தேகால் மணிக்கு என் வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருந்தார் பிரபு காளிதாஸ். நான் படுத்தவுடனேயே சவத்தைப் போல் தூங்கி விடுவேன். ஆனால் நேற்று இரவு இரண்டு மணி வரை தூக்கம் வரவில்லை. இது என் வாழ்வில் புதிய அனுபவம். எனக்கு வந்த ஒரு வாட்ஸப் மெஸேஜ் காரணம். என்னைச் சேர்ந்த எல்லோருமே என்னிடம் மூர்க்கமாகப் பழகத் தொடங்கி விடுவதால் அது எனக்கு ஆச்சரியமில்லை எனினும் அந்த மெஸேஜ் என்னை வெகுவாக பாதித்து விட்டதால் உறக்கம் வரவில்லை. காலையில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2025 05:07

July 14, 2025

புகைப்படக் கலை

புகைப்படக் கலையின் சில அடிப்படைகளை பாண்டிச்சேரியில் கற்றுக் கொண்டேன். அதாவது, என்னென்ன செய்யக் கூடாது என்ற விஷயங்களை. புகைப்படக் கலை பற்றி எதுவுமே தெரியாத நான் சில ஆண்டுகளுக்கு முன்பு லெபனானில் என் ஐஃபோன் மூலம் எடுத்த சில புகைப்படங்களைப் பார்த்து விட்டு மிஷ்கின் “இது ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டவை போல் இருக்கிறது” என்று சொன்னார். பொதுவாக என் நூல்களில் என் புகைப்படம் இடம் பெறுவதை நான் விரும்புவதில்லை. இருநூறு பிரதிகள் விற்கும் ஒரு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 14, 2025 02:16

July 10, 2025

ஆண் பால் பெண் பால்

பூனை நாய்களின் பெண்ணினத்தை யாரும் அவள் எனக் குறிப்பிட்டால் என் செவியில் நாராசம் பாயும் பெண் பூனை பெண் நாய் ரெண்டையும் அவனென்றே அழைப்பேன் ஆனால் என் நண்பன் ஒரு படி மேல் மனிதப் பெண்டிரையும் அவனென்றே அழைக்கிறான் என்ன ஒரே கவிதை மழை என்றான் ஹி ஹி என்றேன் எழுதுவது நீ அல்ல நண்பா அவன் எழுதுகிறான் அவன் எழுதுகிறான் என்றான் குறும்பு பொங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2025 02:40

July 9, 2025

பரவசத்தின் எதிரொலிகள்

இரவின் துடிப்பில்ஒரு பாடலின் விம்மலில்சிங்களப் பெண் நயநதினி முணுமுணுத்தாள்அவள் குரல்தொலைவில் மறைந்த போரின் நிழல்இரவு முழுதும் ஒரு பாடலைக் கேட்டாள்கொல்லப்பட்ட தந்தைதற்கொலையில் மாண்ட தாய்அவர்கள் முகங்கள் இசையின் நெய்யப்பட்டுகனவாகி மூச்சை முட்டியதுதிரும்பத் திரும்பக் கேட்டுவிடியலின் விளிம்பில்சுவாசத்தின் நூலை அறுக்க முயன்றாள்ஆனால் உயிர் எப்படியோ மீண்டது அவள் சொன்னாள்:’இசை வெறும் ஒலியல்லஎலும்பை எரிக்கும் ஞாபகம்அப்போது எனக்கு அது விளங்கவில்லை பின்னர் ஒரு பாடல் என்னைப் பற்றியதுஆயிரம் முறை ஒலித்து என்னை ஆட்கொண்டதுகாலை நடையில்வெயில் பொங்கும் பகலில்இரவின் மென்மையில்அது என் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 09, 2025 10:23

கண்ணாடியின் கனவு

மதுபான விடுதியில்மங்கலான வெளிச்சம்பழைய மரமேசையைஒரு புத்தகத்தின் பக்கமாக மாற்றியதுஎழுத்தாளர்களும் கலைஞர்களும் மட்டுமேவந்து போகும் அந்த இடத்தில்,அவளும் நானும் எதிரெதிரே.என் கையில் வைன், பழமையின் பிரதிபலிப்புஅவள் கையில் விஸ்கி, ஒரு மறைபொருளின் மணம் காலம் ஒரு பிரமையின் கனவாககோப்பைகளில் தயங்கி நின்றதுஎன் வாழ்க்கையை எழுது என்றேன்அது ஒரு விநோத நூலகத்தின்தொலைந்து போன கையெழுத்துப் பிரதி மோகினிக்குட்டி ஒரு கவியாஎன் கதையை உருவாக்குமொரு கனவாபுன்னகையுடன்விஸ்கியை மெல்ல அருந்தியபடிஒரு விநோதம் சொல்லென்றாள்.அவள் கண்கள் அந்த இருளிலும்ஒளி பூண்டிருந்தன நான் சொன்னேன்:ஏழெட்டு பெண்கள்ஏழெட்டு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 09, 2025 07:29

July 8, 2025

நிலவுக்கும் எனக்குமான தூரம்

வன்மதுவை ரசித்து அருந்தும்யுவதிகள் சொற்பம்நானே மென்மது குடிப்பவன்தான்இறையருளோபிரார்த்தனையின் பலனோமோகினிக்குட்டி வன்மதுப் பிரியைசாத்தியெடுப்பாள் விஸ்கியைகொடுப்பினை என்னவென்றால்குடித்தால் அவள் காதலும் அன்பும்தயையும் அருளும் பொங்கி வழியும அதனாலே நாங்கள் அடிக்கடிசெல்லுமிடம் மதுக்கூடம்அங்கே ஒரு பிரச்சினைமோகினியைக் காண்பதுஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறைசமயங்களில் உருவமே மாறியிருப்பாள்அருகே அமர்ந்தால்எதிரே உட்கார் என்பாள் எதையும் எவரிடமும் எதிர்பார்க்காதேஎதிர்பார்த்தால் ஏமாற்றம்ஏமாற்றம் மன உளைச்சல்மன உளைச்சல் சுயவதைநானொரு சுயநேசி என்பதால்எதிர்பார்ப்பை ரத்து செய்வேன்ஆனால் விதிக்கு ஒரு விலக்கு வைத்துஒருநாள்மாட்டேனென்றேன் பைத்தியமா நீபக்கத்தில் உட்கார்ந்தால்தலையை ஒரு பக்கம் திருப்பிப்பார்த்தபடி இருக்க ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2025 04:41

வரமும் சாபமும்

அந்த வீட்டில் ஆறு குழந்தைகள்மூணு பெண் மூணு ஆண்அன்றாடங்காய்ச்சிஅப்பன் உழைப்பாளிஅம்மையும் உழைப்பாளிஇருந்தும் ஒரு வேளைதான்வயிறார முடிந்ததுமறு வேளை பசித்தால்கிடைத்தது தண்ணீர்காலை நீராகாரத்தில்கைவிட்டு அளைந்தால்பருக்கைகள் ரெண்டு கிடைக்கும் ஆனாலும் அம்மையின் நம்பிக்கை மங்கவில்லைபாலும் தேனும் இந்த வீட்டில் பொங்குமென்பாள்மாதாமாதம் அதிகாலை நாலு மணிக்கேவாசலில் வந்து நின்று குடுகுடுப்பை அடித்துஎல்லோரையும் எழுப்பிநல்ல காலம் பாடும்குடுகுடுப்பைக்காரனின் குரல்தான்அம்மையின் நம்பிக்கை ஒளி மூத்தவன் தில்லி செல்வான்அடுத்தவளுக்கு அரசாங்க உத்தியோகம்மூன்றாமவனுக்குப் பட்டாளத்துப் பணிநான்காமவள் செல்வந்தர் மருமகள்ஐந்தாமவன் வணிகத்தில் கொழிப்பான்ஆறாமவள் மருத்துவப் பணி பக்கத்தில் பெருமாள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2025 02:25

July 7, 2025

நிச்சலனத்தின் நிகழ்வெளி: புதுவை இளவேனில்

இந்த அரிய பொக்கிஷம் பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். இன்றுதான் நேரம் கிடைத்தது. ‘ தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் குறித்த அரிய புகைப்படங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் புதுவை இளவேனில் எடுத்தவை. எல்லாமே கலைப் பொக்கிஷங்கள். ஒருவரின் தோற்றம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அவரை இந்த உலகின் அதியற்புத மனிதராக தன் புகைப்படக் கலையின் மூலம் மாற்ற வல்ல ஒளிக்கலைஞர் புதுவை இளவேனில். இதுவரை என்னைப் புகைப்படம் எடுத்தவர்களில் ஆகச் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 07, 2025 05:57

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.