ஒரு கல்லைப் போலஒரு பனிக்கட்டியைப் போலஎப்படி அவளால் முடிகிறது,எது நடந்தாலும் எதுவுமேநடக்காதது போல் இருக்க? பழைய கதவுகூடதிறந்து மூடப்பட்டால்கொஞ்சம் புலம்புமே? நான் அவளைப் பார்க்கிறேன்கையில் ஒரு தேநீர்க் கோப்பைஎப்போதும் நிறைந்து தளும்பும்புன்னகைஆனால் கண்கள் மட்டும்வெறுமையாகவீட்டு ஜன்னலில் மறந்து வைத்துவிட்டபழைய கண்ணாடி போல. ஒரு காலத்தில்,நானும் தெருவில்திருட்டுத் தொழில் புரிந்தவன்அடி வாங்கினால் வலி தெரியாதிருக்கமாட்டு வால் சூப் குடித்தவன். ஆனால் அவள்எந்தப் பள்ளியில் பயின்றாள்,வலி மரத்துப் போக? ஒருவேளை,ஒரு பழைய பெட்டியின்துருப்பிடித்த பூட்டுஎதையும் உணர மறந்து போகுமே,அப்படியா? அல்லது,அவள் ...
Read more
Published on July 03, 2025 23:06