சாரு நிவேதிதா's Blog, page 26
July 7, 2025
மேல்கூரை மின்விசிறி
யுவதிகள்நாய்களையும் பூனைகளையும்தம் காதலரையும்தொட்டுகொஞ்சி விளையாடுவதைஅடிக்கடி காண்கிறேன்மோகினியிடம் கொஞ்சம்தன்னிரக்க பாவனையுடன் சொன்னேன்என்னை இதுவரை யாரும்தொட்டு கொஞ்சி விளையாடியதில்லையென அவள்,நீதான் தொட்டவுடன் என்னைமேல்கூரை மின்விசிறியைப் பார்க்கவைத்து விடுகிறாயேஎங்கே விளையாடுவதுஎங்கே கொஞ்சுவதுபோடா இடியட்என்று சொல்லியென்கன்னத்தைக் கிள்ளினாள் சே, அரிய வாய்ப்பை இழந்து போனேன்அன்றைய தினமும் அவள்மேல்கூரை மின்விசிறியையேபார்க்க நேர்ந்தது
Published on July 07, 2025 04:15
தேனுகந்து பாடும் உன் அமுது
அவள் ஒரு பாடல் அனுப்பினாள்கேட்டேன்.நெஞ்சில் வந்து குடிகொண்ட நிலவுபரவசம் பரவசம் என்றதுஐயோ, இது சோகப்பாட்டு என்றாள்நான் சிரித்தேன் சோகமா? எங்கே இருக்கிறது?இசையில் சோகம் உண்டா?அது ஒரு பறவையின் றெக்கை,காற்றைத் தழுவி எல்லைகளைத் தாண்டுவதுகாதல் இசையின் நிழல்எப்போதும் தொடரும்எப்போதும் மாறும் இசை பிரபஞ்சத்தின் முதல் சொல்அதற்கு முன் மௌனம் கூட இல்லைசோகமென்று அவள் அழைத்தாலும்எனக்கு அது ஒரு மெல்லிய அழைப்புஎங்கோ ஒரு நட்சத்திரத்தின் கிசுகிசுப்பு. காதலும் இசையும் சொல்வதென்னவென்றால்.சோகம் ஒரு பெயர் மட்டுமேஆனால் பரவசம் தேன்மழைஎன் உயிரை உருக்கிநின் ... Read more
Published on July 07, 2025 00:49
July 6, 2025
நடனத்தில் ஒரு பிழை
”அண்டத்தின் விகசிப்பில் தம் சிறுமை உணர்ந்திருக்க மாட்டார்கள்” என்ற வரியில் ஒரு பெரிய பிழை உள்ளது. விகசிப்பு, விகாசம் என்றால் மலர்ச்சி என்று பொருள். சந்தேகப்பட்டுத்தான் நிகண்டில் பார்த்தேன். எனவே அந்த வாக்கியம் “அண்டத்தின் பிரமாண்டத்தில் தம் சிறுமை உணர்ந்திருக்க மாட்டார்கள்” என்று வர வேண்டும். மூலத்தில் மாற்றி விட்டேன். யாரும் இது பற்றிக் குறிப்பிடாதது சற்றே வருத்தம். கவிதையில் இன்னொரு வாக்கியமும் சேர்த்திருக்கிறேன். “மரணம் கண்டு நகைத்திருக்க மாட்டார்கள்”. கவிதையைத் திரும்பவும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் ... Read more
Published on July 06, 2025 08:58
நடனம்
பொதுமக்கள் சேவைக்கான அரசு அலுவலகம்சிஸ்டம் வேலை செய்யவில்லையெனக்காத்திருந்த நேரத்தில்அங்கிருந்த மனிதர்களை நோக்கினேன்நாற்பது ஐம்பது பேர் இருக்கலாம்ஒவ்வொருவர் முகத்திலும்ஏதோ நோய்மையின் நிழல்மருத்துவமனை அல்ல அதுஆனாலும் அவர்கள் நோயாளிகளின்தோற்றம் கொண்டிருந்தார்கள் அவர்கள் ஒருபோதும்வாய்விட்டுச் சிரித்துகாற்றுடன் கைகோர்த்துநிலவின் குளிர்மையில் திளைத்திருக்க மாட்டார்கள்பிறர் பசியின் வலியுணர்ந்து வெகுண்டிருக்க மாட்டார்கள்மலையடிவாரத்தின் தனிமையில் தோய்ந்திருக்க மாட்டார்கள்கவிதையுடன் மௌனித்துஅண்டத்தின் விகசிப்பில் தம் சிறுமை உணர்ந்திருக்க மாட்டார்கள் மரணம் கண்டு நகைத்திருக்க மாட்டார்கள் காதல்மிகக் கொண்டு முத்தமிட்டிருக்க மாட்டார்கள்கலவியின் பரவசம் கண்டிருக்க மாட்டார்கள்பிறர் துயர் கண்டு கசிந்திருக்க மாட்டார்கள்வாடிய ... Read more
Published on July 06, 2025 06:36
குமுறல்
கவிதையையும் விட்டு வைக்கவில்லையாஎனக் கேட்கிறான் சக கவிமெல்லிய புன்னகையுடன். உண்மைதான்கவிதை தீண்டாத வாழ்நாளில்இப்போதுஅகவை எழுபத்து மூன்றில்தினம் மூன்று கவிதைபொங்கி வழிகிறதுபுதுப்புனல் போல்அடக்க முடியாமல்.ஏதோவொரு குமுறலைகரையில் தணிக்க முயல்கிறது.ஆனால்எழுத எழுதகுமுறல் ஒரு பாறையாகமார்பில் கனக்கிறதுமேலும் கனக்கிறது.
Published on July 06, 2025 03:53
காணவில்லை
எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்ததுஇது அதிசயமாபேரழிவாஅல்லதுகாலத்தின் மாய விளையாட்டாபேரழிவின் அடையாளங்கள் ஏதுமில்லைஆனால் மனிதர் யாரையும் காணோம் இல்லங்கள் மாளிகைகள் குடிசைகள்மௌனத்தின் மயானமாகக் கிடந்தனநேற்றைய மழையின் எச்சமாகசாலைகளில் நீர் தேங்கிகாற்றில் பழைய புத்தகத்தின் மணம்மறந்துபோன வாழ்க்கையை நினைவூட்டியதுஒரு ஈ எறும்பு எலி கூட இல்லைசெல்லப் பிராணிகளும் மறைந்தனபோக்குவரத்து அறிகுறியும் இல்லை நான் வளர்த்த பூனைகள்மூச்சு விட முடியாமல்எந்நேரமும் என் மீதுஅன்பைப் பொழிந்த என் மனையாள்யார் சுவடும் இல்லைஆனால் வாசலில் கோலம் மட்டும்அவள் விரல்களின் நினைவாய் நின்றதுஒவ்வொரு இல்லமாகப் பார்த்தேன்ஒரு ... Read more
Published on July 06, 2025 03:29
July 5, 2025
பெருமிதம் கொள்கிறேன்
சொர்க்கம், நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம் தொகுதியை செப்பனிட்டுக்கொண்டிருக்கிறேன். சர்வதேச அளவில் எனக்கு நெருக்கமான கவிகள் ஒக்தாவியோ பாஸ், நிகானோர் பார்ரா, பாப்லோ நெரூதா, ஜாக் ப்ரேவர், செஸ்லா மிலாஸ் (Czeslaw Milosz), விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா (Wislawa Szymborska), வ்ளதிமீர் நொபக்கோவ், சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கி, ஜோஸஃப் ப்ராட்ஸ்கி (Joseph Broadsky). இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது. இவர்களில் நிகானோர் பார்ராவும் நெரூதாவும் ஒரே தேசத்தவர்கள். அதை விட ஆச்சரியம் ஸிஸ்லோ மிலாஸும் ஸிம்போர்ஸ்காவும் ஒரே தேசத்தவர்கள். ... Read more
Published on July 05, 2025 09:14
நீர் மேல் நடக்கும் தேவதை: செல்வா
எங்களால் செல்வா என்று அழைக்கப்படும் செல்வகுமார் கணேசன் சுமார் இருநூறு கவிதைகளை எழுதியிருப்பார். ஆட்டோநேரடிவ் பதிப்பகத்தின் நிர்வாகி. வாசகர் வட்டத்தின் முக்கியமான நண்பர். அன்பின் மறு உருவம். அவருக்குக் கோபம் வந்து யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். குரல் உயர்த்திக் கூட பேசியதில்லை. இவர் இந்த உலகில் எப்படி ஜீவிக்கிறார் என்றே இவரைக் காணும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இத்தனைக்கும் ஒரு நிறுவனத்தின் தலைவர் வேறு. அவர் எழுதிய கவிதை ஒன்றை இன்று கண்டேன். இதைப் படித்ததிலிருந்து ... Read more
Published on July 05, 2025 04:25
ஓர் அடிமையின் பாடல்
நான் யார்? நான் நல்லவனா கெட்டவனாரெண்டும் கலந்தவனாதெரியாதுஆனாலொன்றுநான் அடிமைஎப்படியென்று சொல்கிறேன் காதலிக்காக எதையும் செய்பவன் நீ என் காதலிஎன்னை விட்டுஅல்லது விடாமல்என் நண்பனையும் காதலித்தால்நானே உங்களுக்கு அறை ஏற்பாடு செய்வேன்பொஸஸிவ்னெஸ்?துளியுமில்லை பேரழகி நீ பார்க்க மயிலாக இருந்தாலும்மந்தியாக இருந்தாலும்பேரழகி என்பேன்‘பொய் சொல்கிறாய்’என்று நீ சொன்னால்என் காதை வெட்டிஉன் கையில் கொடுப்பேன் பிச்சை எடுத்து கொடுத்த கதை என் மகனார் தன் மனையாளைப் படிக்க வைக்கநாலு லகரம் கேட்டார்நான் பிச்சையெடுத்த காசுகொடுத்தேன்கல்லில் நார் உரிப்பதுபோல்ரெண்டு லகரம் உரித்தேன்பிறகு அலுத்துப் ... Read more
Published on July 05, 2025 03:00
July 4, 2025
மெய்யுணர்தல்
காலையின் இளம் வெயிலில்பாதைகள் என்னைத் தடுக்கி வீழ்த்துகின்றனகுண்டும் குழியுமாகஉன் இதயத்தின் காயங்கள்என் ஆன்மாவை உரசிநான் உன்னில் கரைகிறேன்மேட்டுக்குடி வீதிகளில்உன் மௌனமொரு மறைபொருள்என் கண்கள் இதுவரை காணாதவை பூக்கடையின் மல்லிகைபழக்கடையில் அடுக்கப்பட்ட பழங்கள்இளநீர் விற்பனை –’விலை எழுபது ரூபாய்’ என எழுதப்பட்ட அட்டை –பரந்து விரிந்ததொரு கிரிக்கெட் மைதானம்எல்லாமே இன்றுதான் மெய்வழிப்படுகின்றனஆனால்என் நடை உன் குரல் தேடி அலைகிறதுஒவ்வொரு அடியும் உன்னில் முடிகிறது ஓ, இங்கே பள்ளிக்கூடங்கள் வேறுஆடவரும் பெண்டிரும் தத்தம் குழந்தைகளைமோட்டார் வண்டிகளில் வைத்துப் பறந்து கொண்டிருக்கிறார்கள்பெண்களின் ... Read more
Published on July 04, 2025 06:11
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

