கவிதையையும் விட்டு வைக்கவில்லையாஎனக் கேட்கிறான் சக கவிமெல்லிய புன்னகையுடன். உண்மைதான்கவிதை தீண்டாத வாழ்நாளில்இப்போதுஅகவை எழுபத்து மூன்றில்தினம் மூன்று கவிதைபொங்கி வழிகிறதுபுதுப்புனல் போல்அடக்க முடியாமல்.ஏதோவொரு குமுறலைகரையில் தணிக்க முயல்கிறது.ஆனால்எழுத எழுதகுமுறல் ஒரு பாறையாகமார்பில் கனக்கிறதுமேலும் கனக்கிறது.
Published on July 06, 2025 03:53