யுவதிகள்நாய்களையும் பூனைகளையும்தம் காதலரையும்தொட்டுகொஞ்சி விளையாடுவதைஅடிக்கடி காண்கிறேன்மோகினியிடம் கொஞ்சம்தன்னிரக்க பாவனையுடன் சொன்னேன்என்னை இதுவரை யாரும்தொட்டு கொஞ்சி விளையாடியதில்லையென அவள்,நீதான் தொட்டவுடன் என்னைமேல்கூரை மின்விசிறியைப் பார்க்கவைத்து விடுகிறாயேஎங்கே விளையாடுவதுஎங்கே கொஞ்சுவதுபோடா இடியட்என்று சொல்லியென்கன்னத்தைக் கிள்ளினாள் சே, அரிய வாய்ப்பை இழந்து போனேன்அன்றைய தினமும் அவள்மேல்கூரை மின்விசிறியையேபார்க்க நேர்ந்தது
Published on July 07, 2025 04:15