சாரு நிவேதிதா's Blog, page 21

July 28, 2025

என் கையில் இல்லை

அவள் என்ன சொன்னாலும்கேட்பேன்ஒன்றுதான் முடியவில்லைகவிதையெழுதுவதைநிறுத்துவது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2025 06:31

பச்சை மிளகாயை முன்வைத்து ஒரு erotic கவிதை

1 எல்லாம் ஒரு திட்டத்தில் நடக்கிறதுஎன்கிறான் பெருங்கவிஞன்’ஒரு பறவை வீழ்ந்தாலும்அதில் திட்டமுண்டுஇப்போது நடக்கும் என்றால் நடக்காதுஇப்போது நடக்காது என்றால் நடக்கும் 2 அப்படித்தான்நடந்தது அந்தச் சந்திப்புஈருடல் ஓருயிர் ஆனதுரோமியோவுக்கு முன்பே ஒரு காதலி இருந்தாள்ஜூலியட்டைக் கண்டதும் காணாமல் போனதுபழைய காதல்இதுவும் அப்படியே நடந்தது 3 ஒவ்வொருவருக்கும்ஒரு பழக்கம்எனக்குப் பச்சை மிளகாய்ஒன்றுக்கு இரண்டுகடித்து உண்டால்தான்உணவு இறங்கும் 4 அவளைக் கண்டதும்பச்சை மிளகாயைத் துறந்தேன்காரணமா?உடையவர் சொன்னார்’பிறர் வலியைத்தன் வலியாய் உணர்பவனேவைணவன்’
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2025 04:22

கவிதையின் பசி

ஏற்கனவே எழுதியிருக்கிறேன். நான் வெளியிடும் ஒவ்வொரு கவிதையும் ஏழெட்டு முறை திருத்தப்பட்டது. இறுதிப் பிரதியைப் பார்த்தால் அதற்கும் முதல் பிரதிக்கும் சம்பந்தமே இருக்காது. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கூக்குரலுக்கும் அந்தக் கவிதையின் முதல் பிரதிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பாருங்கள். ரேமண்ட் கார்வரின் பாணி இப்படித்தான் இருக்கும். படிமங்கள் இல்லாமல் நேரடியாக எழுதப்படுவது அவர் கவிதை. நீங்கள் எதை அதிகம் ரசித்தீர்கள் என்று எனக்கு எழுதுங்கள். இதையா? கூக்குரலையா? என் குமுறலைஎன் தனிமையைஎன் வாதையைஎன் மன உளைச்சலைஎன் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2025 02:21

July 27, 2025

கூக்குரல்

முதலாம் கூக்குரல்: வாதையின் நிழல்கள் என் குமுறல், முடிவற்ற கடலின் அலைகள்என் தனிமை, பாலைவன இரவின் குளிர்ந்த மௌனம்என் வாதை, பறவையின் முறிந்த சிறகுஎன் மன உளைச்சல், கற்களால் நிரம்பிய பாதை என் கண்ணீர், ஊழியில் மறைந்து போன கடலின் கதை இரண்டாம் கூக்குரல்: பாவங்களின் சுமை என் அடிமைத்தனம், இரும்புச் சங்கிலிஎன் துரோகம், நம்பிக்கையை உடைத்த கூர்வாள்என் மூர்க்கம், காட்டுத்தீயின் வெறிஎன் கீழ்மை, புழுதியில் மறைந்த புனிதம்என் பசி, தீராத பாலைவனத்தின் தாகம்என் மனப்பிறழ்வு, நிலைகுலைந்த ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2025 10:22

நிஷ்காம்யம்

ஆசைப்பட்டதுஅதிகமாகவே கிடைத்ததுஇப்போதுஆசைப்படுவதை நிறுத்தி விட்டேன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2025 09:20

மகிழ்ச்சியின் மறுபெயர்

நான் பறவை இனத்தவன் போலதாமதமாக எழுந்ததே இல்லை.இன்று எழும்போதுசூரிய ஒளி கண்களைத் தாக்கியது நேற்று அவள் சொன்னாள்இன்று பேச முடியாதென்றுஅதனால் உறங்கினேன்நடைப்பயிற்சி இல்லை ஏழரை மணிவழக்கமாக சங்கீதா உணவகத்தில்காஃபி குடித்திருப்பேன்.இன்றுநானே காஃபி போட்டுக்கொண்டு வந்துஅமர்ந்தேன். வனத்தில் இருப்பது போல்பறவைகளின் குரல்கள் எங்கும்கிளி மைனா குயில்சிலவற்றை மட்டும் அறிவேன்மற்றவை பெயர் தெரியவில்லை காலை நேரம்கையில் காஃபிரேமண்ட் கார்வரின் ’மகிழ்ச்சி’நினைவுக்கு வந்ததுஎனக்கு மகிழ்ச்சி இல்லை மகிழ்ச்சி இருந்தால் கவிதை இல்லைஎன் கவிதைஎன் ஆத்மாவின் குமுறல். பறவைகளின் பாடல்கள்எத்தனை மகிழ்ச்சியானவைஆனாலும்என் துக்கத்தை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2025 02:42

July 26, 2025

மேஜிக்

1. காலை நடையில்எதையெதையோயார் யாரையோபார்க்கிறோம் அப்படித்தான்அவளைமூன்று ஆண்டுகளாய்பார்த்துக்கொண்டிருந்தேன்புத்தகக் கடையில்மங்கலான திரையரங்கில்என் வாசகரில்அவளும் ஒருத்தி ஒரு மாலைகாஃபி குடித்தோம்ஒரு இரவுநண்பர்களுடன் பியர் பகிர்ந்தோம் தொலைபேசி எண்ணை அறிவேன்ஆனால் அழைத்ததில்லைஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்பதில் அனுப்ப நினைத்தேன்மறந்துவிட்டேன் நானோ சௌந்தர்யப் பிரியன்அவளோ பேரழகிஆனாலும்எதுவும் தோன்றவில்லை ஆறு மாதங்களுக்கு முன்என்ன நடந்தது?எப்படி நடந்தது?ஏன் நடந்தது? ஒரு தருணத்தில்பித்து பிடித்ததுநான்கு மணி நேரப் பேச்சுநூறு குறுஞ்செய்திகள்இன்ன பிற 2ஆரம்பமும் முடிவும்தெரியாதகாரணமும் புரியாதஒரு ஆட்டம்இந்த வாழ்வும்இந்தக் காதலும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2025 23:53

அற்றைத் திங்கள்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் அவளும் இருந்தாள் எல்லாமும் இருந்தது இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் நினைவின் நிழல்கள விடாமல் துரத்துகின்றன
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2025 22:28

வேட்டை

கவிதையைப் படித்தாள்கவிதைக்குரியவள்ஆனால்ஒரு சிறிய கூச்சம்சங்கடத்தின் மெல்லிய நிழல்அவள் இதயத்தில் தங்கி விட்டதுஏன் அடிமைத்தனம்சமமாக இருந்தாலென்னஎன்ற கேள்விகள் ஓடியது ஒன் நைட் ஸ்டாண்ட் என்றும்பத்துப் பன்னிரண்டு காதலிகளோடும்அலைந்து திரிந்துஆடிப் பாடியஅவனைஅடிமையாக்கியது யார்கேட்க நினைத்துக்கேட்கவில்லைகேள்விகள் துக்கத்தின் விதைகள் 2 நண்பன் ஒரு கதை சொன்னான்அவன் மனையாளின் ப்ளூ டிக்திடீரென்று மறைந்ததுஇவன் சிரித்துக்கொண்டேஎன்னவென்று கேட்டான்அவளும் சிரித்துக்கொண்டேம் என்றாள்இவனும் சிரித்துக்கொண்டேபோய் விட்டான் உனக்கு அரச லச்சினைபதித்த பத்திரமொன்று இருக்கிறதுமரணம் வரைஉனக்கு அவள்அவளுக்கு நீவெளியே போனால்காட்டு விலங்குகள் குதறித் தள்ளும் அவனோ வழிப்போக்கன்எந்தப் பத்திரமுமில்லைகாரணம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2025 09:58

July 25, 2025

விரும்புகிறேன்…

நீ என்னில் மூழ்க வேண்டுமென்றும்நான் உன்னுள் கரைய வேண்டுமென்றும்இன்னும் உன்னைக் காதலிக்கவே தொடங்காதநான் இனியும் தாமதிக்கக் கூடாதென்றும்நீ என் உயிர்த்தாதுவை உன் குருதிக்குள்ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும்நான் உன்னை உறிஞ்சி விடாய் தணிய வேண்டுமென்றும்உனக்காகக் கொலை செய்ய வேண்டுமென்றும்உனக்காகத் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்றும்உனக்காக நான் வெட்கம் மானம் துறக்க வேண்டுமென்றும்உனக்காக நான் மலையுச்சியிலிருந்து குதிக்க வேண்டுமென்றும்உனக்காக நான் சிறை செல்ல வேண்டுமென்றும்உனக்காக நான் கவிதை எழுத வேண்டுமென்றும்உனக்காக நான் கவிதையெழுதுவதை நிறுத்த வேண்டுமென்றும்உன் சுதந்திரத்தில் ஒருபோதும் குறுக்கிடக் கூடாதென்றும்ஏன் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2025 04:05

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.