சாரு நிவேதிதா's Blog, page 17
August 4, 2025
பார்வை
தெருநாய் குரைத்ததுஏன் குரைக்கிறாய் என்றேன்பின்னே நிலவைப் பார்த்துத்தெருநாயென்றால்குரைக்காமல் என்ன செய்வேன்என்றது
Published on August 04, 2025 03:46
August 3, 2025
ஒன்றுமில்லை
இரண்டு தினங்கள் கழித்துப் பேசினேன் ‘என்ன நடந்து கொண்டிருக்கிறது’‘ஒன்றுமில்லை’ இதயத்தை பாரம் அழுத்தியது சிறிய மௌனத்துக்குப் பிறகு தொடங்கினேன் ஹைடேக்கர்காலத்தை எப்படி மனித இருப்போடுஇணைக்கிறார்ஒரு பொருள் ஏன் இருக்கிறதுஏன் அது இல்லாமல் இல்லைஒரு குறிப்பிட்ட பொருளின் இருப்புஅது இருக்கும் காலத்தால்தானேஅர்த்தம் பெறுகிறது… ’ஏய் ஏய் நிறுத்துநான் விளையாடுவதேயில்லையென்றுநீதான்புகார் செய்கிறாய்விளையாடினால் கோபித்துக் கொள்கிறாய்என்னதான் செய்யட்டும், சொல்’என்றாள் சிரித்தபடி 2. நகரில் பல சிரிப்புப் பயிற்சி மையங்களைக்கண்டிருக்கிறேன்வயதானவர்களெல்லாம் அங்கேசிரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருப்பார்கள்பார்த்தால் நமக்கு அழுகை வரும்அது வேறு விஷயம் அம்மாதிரி ... Read more
Published on August 03, 2025 22:58
பிரார்த்தனை
1 பேரரசன்இரு மல்யுத்த வீரர்களைத்தோளில் சுமந்து மலை ஏறுபவன்மகன் மரணத்தின் விளிம்பிலிருந்தான்பேரரசன் வேண்டினான்‘என் உயிரை எடுத்துக் கொள்மகன் உயிரை விட்டு விடு’ மகன் பிழைத்தான்பேரரசன் நோய்மையில் வீழ்ந்துஆறு மாதத்தில் மறைந்தான் 2 வெர்னர் ஹெர்ஸாக்ம்யூனிச்சில் இருந்தான்தோழி பாரிஸில், மரணத்தின் விளிம்பில்சில மணி நேரங்களே கெடு’சாவதற்கு முன் உன்னைப் பார்க்க வேண்டும்’என்கிறாள் தோழி பனிப்பொழிவினூடேஅவன் நடந்தான்இருபத்திரண்டு நாட்கள்பாரிஸ் வந்துஅவளைப் பார்த்தான்தோழிஒன்பது ஆண்டுகள் உயிருடனிருந்தாள் 3 சாமான்யரும் பிரார்த்தனை செய்யலாமாஎனக் கேட்டாள் பிறிதொரு சமயம்அவள் சொன்ன சம்பவம் இது:அவளுக்கு வாகனம் ... Read more
Published on August 03, 2025 19:00
புரிதல் குறித்த சமன்பாடுகள்
உன்னை ஏன் என்னால்புரிந்து கொள்ள முடியவில்லை என்பதைநீ புரிந்து கொள்ள வேண்டுமானால்அரை நூற்றாண்டு நீ பின்னே செல்ல வேண்டும்.என்னை நீ ஏன்புரிந்து கொள்ள முடியவில்லை என்பதைநான் புரிந்து கொள்ள வேண்டுமானால்அரை நூற்றாண்டு நான் முன்னே செல்ல வேண்டும்.அதற்கான கால எந்திரம் நம்மிடம் இல்லை.புரிதல் சாத்தியமில்லைஎன்பதை மட்டும் புரிந்து கொண்டதால்புரிந்து கொள்ள முடியாததைபுரிந்து கொள்ள முடியாதஇடத்திலேயே விட்டு விட்டுவந்து விட்டேன்.வா, புரிந்ததைப் பேசுவோம்புரிந்ததை ஆற்றுவோம் 2 நீ மேசையில் காபி கோப்பையை வைத்தாய்.நான் ஜன்னல் பக்கம் பார்த்தேன்.வெளியே மரங்கள் ... Read more
Published on August 03, 2025 10:54
குட்பை
இதுவரையாருக்கும் எதற்கும்குட்பை சொன்னதில்லைஆனால்மற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள் இப்போதுமுதல் முதலாகச்சொல்கிறேன்கவிதையேநீ ஒரு நதிஎன் ஆன்மாவின் கரையில்நானும் நீயும் ஒன்றானோம்உன் சொற்கள்நிலவொளியில் நடனமிடும் நிழல்களாகஎன் மௌனத்தை உடைத்தன ஆனால் இன்றுஉன் உற்சாகம்உன் கொண்டாட்டம்உன் மகிழ்ச்சிஏன், உனது கண்ணீர்கூடஒரு கணத்தில் மறைகிறது அவள் சொன்னாள்’எனக்காக ஒரு கவிதை’இதோ ஆயிரம் எழுதி விட்டேன்ஆனால்உன் எடைஅவளை அழுத்துகிறதுகுற்ற உணர்ச்சியில் ஆழ்த்துகிறது உனக்காக உயிரையும் தருவேனெனஉன் காதலியிடம் கதறுகிறாய்ஆனால்எனக்கோ ஹாய் சொல்ல ஒரு பெண்ணில்லைதற்கொலை உணர்வைமதுவினால் தள்ளிப் போடுகிறேன்என்கிறான் நண்பன் இன்னொருவனோஇவன் காதல் கவிதைகளில்தஞ்சமடைந்து விட்டானெனஇரங்கற்பா எழுதுகிறான் ... Read more
Published on August 03, 2025 04:27
August 2, 2025
இன்றைய காலகட்டத்தின் மிகச் சிறந்த காதல் கவிதை
எதுவென்று கேட்டால் அராத்து எழுதிய இந்தக் கவிதையைத்தான் சொல்வேன். கீழே தருகிறேன். காதல் டிக்ஷ்னரி – புத்தம் புதிய காப்பி – 3 பட்டா ஏய் உன்ன யாரும் தொடாத கிஸ் பண்ணாத எடத்த எனக்கு மட்டும் குடுக்கறியா? எனக்கு மட்டும் தான். ம்ம்நெத்தி? ம்ஹூம் பின்னங்கழுத்து? சாரிடா பம்ஸ்? ப்ச்..அதெல்லாம் எப்பவோ.. வேற எதாச்சும் கேளுடா இடது கை சுண்டு விரல்? ம்ம்…ம்ம்…சரியா ஞாபகம் இல்ல..ஆனா விரல் சப்பிருக்காங்க..வேணாம் பட் ஹோல்? அத எவனாச்சும் விடுவானா? ... Read more
Published on August 02, 2025 22:18
வாழ்விலே ஒரு முறை
ஒரு முறைதான், ஒரே ஒரு முறைதான், உங்கள் உலகத்தை மாற்றக் கூடிய ஒருவரைச் சந்திப்பீர்கள். வேறு ஒருவரோடும் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களை அவர்களிடம் சொல்வீர்கள்.நீங்கள் சொல்வது போலவே அவர்களால் உள்வாங்கவும் முடியும். உங்களை முழுதாகக் கேட்க விரும்புவார்கள். உங்கள் எதிர்காலம், நிறைவேறாத கனவுகள், எட்ட முடியாத சிகரங்கள், வாழ்க்கை உங்கள் மீது வீசிய கொடும் கற்கள் என அனைத்தையும் அவர்களிடம் கொட்டித் தீர்ப்பீர்கள். உங்கள் வாழ்வில் எது நடந்தாலும், அவர்களிடம் சொல்வதற்காகக் காத்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் பரவசத்தில் ... Read more
Published on August 02, 2025 18:26
பாக்கெட் வஜைனா (பல புதிய பத்திகள் சேர்க்கப்பட்டது)
(முன்குறிப்பு: இன்று பேய் பிடித்தது போல் காலையிலிருந்து இரண்டு நீண்ட கவிதைகளை எழுதினேன். ஒன்று, அராத்துவின் கவிதையைப் படிப்பதற்கு சற்று முன்னால் எழுதியது. சொல்லி வைத்து செய்தது போல் இருந்தது. இரண்டாவது ஒரு அதிசயம். ரிஷி ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததைப் படித்து பின்வரும் கவிதையை எழுதினேன். மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஆனது. இந்தக் கவிதையை போஸ்ட் பண்ணப் போகும்போது ரிஷி எனக்கு ஒரு கடிதம் எழுதி விடை பெறுவதைப் பார்த்தேன். விடை பெற இயலாது. இதோ இந்தக் ... Read more
Published on August 02, 2025 10:44
காதல் கவிதைகளில் தஞ்சமடைந்தவன்?
அராத்துவின் தற்கொலைக் கவிதைகளில் ஒன்றை அறிமுகம் செய்யும் தருணத்தில் ஃபேஸ்புக்கில் அராத்து இப்படி எழுதியிருக்கிறார்: ”சாரு நிவேதிதா காதல் கவிதைகளில் தஞ்சம் அடைந்திருப்பதால்…” இது சுஜாதா பல ஆண்டுகளுக்கு முன்னால் என் நாவல்களை கங்கையில் மிதக்கும் பழுப்பு நிற திடப்பொருள் என்று சொல்வதை ஒத்திருக்கிறது. அதாவது என் எழுத்தை சுஜாதா பீ என்றார். அநேகமாக அராத்துவின் குறிப்பும் அப்படியே எடுத்துக்கொள்ளப்படத்தக்கதுதான். எந்த விமர்சனமாக இருந்தாலும் அது நமக்குள் இருக்க வேண்டும். நாம் விவாதிக்கலாம். விமர்சிக்கலாம். சண்டையிடலாம். கடைசியில் ... Read more
Published on August 02, 2025 08:02
பாக்கெட் வஜைனா
(முன்குறிப்பு: இன்று பேய் பிடித்தது போல் காலையிலிருந்து இரண்டு நீண்ட கவிதைகளை எழுதினேன். ஒன்று, அராத்துவின் கவிதையைப் படிப்பதற்கு சற்று முன்னால் எழுதியது. சொல்லி வைத்து செய்தது போல் இருந்தது. இரண்டாவது ஒரு அதிசயம். ரிஷி ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததைப் படித்து பின்வரும் கவிதையை எழுதினேன். மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஆனது. இந்தக் கவிதையை போஸ்ட் பண்ணப் போகும்போது ரிஷி எனக்கு ஒரு கடிதம் எழுதி விடை பெறுவதைப் பார்த்தேன். விடை பெற இயலாது. இதோ இந்தக் ... Read more
Published on August 02, 2025 05:30
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

