சாரு நிவேதிதா's Blog, page 16

August 6, 2025

கயிற்றின் மேல் நடைப்பயிற்சி

அவன் என் உயிர்த் தோழன்அழகன்அழகைத் தன் பெயரிலும் கொண்டவன்பப்பில் சந்தித்தோம்மனையாளையும் அழைத்து வந்தான்அவளை முதல்முதலில் பார்க்கிறேன்என் தோழியுடன் நான் கிளம்பும் போதுஅவள் ஆடையைப் புகழ்ந்தேன் மறுநாள் தோழி சொன்னாள்’நீ சொன்னது தவறுநானாக இருந்தால் சங்கடமடைவேன்’என் மனம் சுருங்கியது நண்பனிடம் ஆரம்பத்திலேயேசொல்லியிருந்தேன்’ஒரு அழகனைச் சந்திக்கப் போவதால்தோற்றத்தில் அதிக கவனமெடுத்தேன்அதுதான் கொஞ்சம் தாமதம்’ரசித்தான்பெரிதாகச் சிரித்தான் தோழியின் சொல் கேட்டுஎனக்கோர் சந்தேகம்ஆணின் அழகைப் புகழலாம்,பெண்ணின் ஆடையைக் கூட பாராட்டலாகாதா? நாளை மீண்டும் அந்த ஜோடிதோழியும் இருப்பாள்வாயை எப்படிக் கட்டுவது?இப்போதே யோசனை தொடங்கியது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 06, 2025 08:05

சொர்க்கம் நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம்

நாவலோ சிறுகதையோ எழுதுவது வேறு. ஆனால் கவிதை எழுதுவது இதுவரை இல்லாத வேறு ஏதோ ஓர் அனுபவமாக இருக்கிறது. நான் இருபத்தைந்து வயதிலிருந்து கவிதையில் வாழ்கிறேன். ஸீரோ டிகிரியில் பல கவிதைகள் உண்டு. தேகத்தில் உண்டு. பெட்டியோ நாவலாக இருந்தாலும் அதில் முக்கால்வாசி கவிதைதான். கவிதை என்று தனியாக இருக்காது. ஆனால் கவிதையாக எழுதப்பட்ட நாவல். ஆனால் இப்போதுதான் ஒரு முழுமையான கவிஞனாக வாழ்கிறேன். கவிதையில் வாழ்வது வேறு. கவிஞனாக வாழ்வது வேறு. கவிதையே எழுதாமல் கவிதை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 06, 2025 06:28

August 5, 2025

உயிர்வாதையின் பின்னணி

இன்று ஸ்ரீ ஒரு ஹிந்திப் பாடலை அனுப்பியிருந்தாள். கேள்விப்பட்டிராத பாடல். ராஹத் ஃபத்தே அலிகான் பாடியது. ஹீரோயின் என்ற படம். அர்ஜும் ராம்பால் நடித்தது. அர்ஜுன் ராம்பால் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். பாடல் என் ஆன்மாவை உருக்கியது. ராஹத் ஃபத்தே அலி கானின் குரலுக்குக் கேட்க வேண்டுமா? பாடல் ஹீரோயினில் இடம் பெறுவதற்கு முன்னதாகவே இதை எழுதி, இசையமைத்துப் பாடியவர் கைலாஷ் கேர். ஆனால் படத்தில் கைலாஷ் பாடவில்லை. கைலாஷை விட ராஹத் நன்றாகப் பாடியிருக்கிறார். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 05, 2025 06:01

ஈகோவினால் ஆன பயன்

மோகினிக்குட்டிக்காகஎதையும் செய்வேன்அவளுக்கும் தெரியும் ஒருநாள் போதையில்அவள் தட்டிலிருந்து எடுத்துசாப்பிட்டு விட்டேன்எனக்குத் தெரியாதுமறுநாள் சொன்னாள்எனக்குப் பிடிக்காது போதையில் நிகழ்ந்த சிறு தவறுஎனச் சொன்னாலும்அவள் மனம் மாறவில்லை நானோ ரோஷக்காரன்’ஆ, நீதானே உனக்கு வெட்கம் மானம்சூடு சொரணை ரோஷம் எதுவுமில்லை’யென்றுஒரு கவிதையில் எழுதியிருந்தாய்’ எனக்கேட்காதீர்அது வேறுஇது வேறுரெண்டையும் குழப்பக் கூடாது ஆங், நான் ரோஷக்காரன்அவள் தட்டை இனித் தொடேன்ஒருநாள் உணவகத்தில்சிக்கன் கபாப் சொன்னாள்ஆறு துண்டு வந்ததுமூணு நீ எடு எனப் பகிர்ந்தாள்கபாப் எனக்கு உயிர்பசியும் கொடூரம்ஆனால் இப்போது பசியில்லை என்றேன்அவள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 05, 2025 05:08

‘ப்யூட்டிஃபுல்’

ரிஷிநீ ஏன் காதலில் விழக்கூடாது என்கிறேன், தெரியுமா?‘உயிர்வாதை’ படித்து விட்டுஇறைவி அனுப்பியிருந்தஇறைவசனம்:’ப்யூட்டிஃபுல்’ டேய் டேய்இக்காலத்துப் பெண்கள்அத்தனை பேரும்ஒன்றுரோபாட்டுகள்அல்லதுஏஐயின் பிரதிபிம்பம்கிளம்பி வாரெண்டு பேரும்பாங்காக் போய் விடலாம்நீ ஓவியம் வரைந்து திரவியம் தேடுநான் ஜிகிலோவாக ஊழியம் செய்துகாசு பார்க்கிறேன் இன்னொரு விஷயம்இதையெல்லாம் வைத்து நீஓவியம் வரைந்தால்பல கோடி போகும்ஐயமில்லைஆனால்அதைப் பார்க்கும்ரசிகர் கூட்டத்துக்குநிச்சயம் பிடிக்கும்பைத்தியம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 05, 2025 03:36

உயிர் வாதை

அன்பேநீ என்னருகில் தொடுகின்றதொலைவில் இருக்கிறாய்அவ்வப்போதுஉன் கூந்தலின் நறுமணம்என்னுயிரைத் தழுவுகிறதுஉன் பின்னங்கழுத்தின் ஒளிஎன்னைப் பித்தனாக்குகிறதுஉன் வதனத்தின் திவ்யம்என்னுள்ளத்தை வெறியூட்டுகிறது உன் கைவிரல்களின் நடன பாவம்என் சுயத்தை மறக்கச் செய்கிறதுஉன் சுவாசத்தின் தீண்டல்என் முகத்தில் ஒளியூட்டுகிறதுஆனாலும் இறைவியேநீதொட முடியாத தூரத்தில் இருக்கிறாய்உன் முத்தத்தில் எனை இழந்துகாலத்தை மறந்து வாழ முடியாதோ?உன் பாதக்கமலத்தில் முகம் பதித்துபக்தியில் திளைக்க முடியாதோ?உன் நிதம்பச் சுவையினிலேஎனை மறக்க முடியாதோ? இத்தனை துயர் தாங்கிஇந்த உயிர் வாழ வேண்டுமா?காதலினால் உயிர் மாய்த்தோர்கதைகள் பல கேட்டதுண்டுஆனால், இறைவியே,இன்று அவர்களில்நானும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 05, 2025 02:04

காதல்

எவரொருவர்அனுபவம்கொண்டிலரோஅவரேபரிகசிக்கிறார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 05, 2025 00:14

August 4, 2025

சுமைகளை இறக்கி வைப்போம்!

அன்பேஉன்னிடமொரு பிரார்த்தனைஉனக்கு நான் ஏதேனும்நன்மை செய்வதாய்த் தோன்றினால்நன்றியறிதல் கொள்ளாதேஅக்கணமே அதை மறந்து விடுநாய்களுக்குமுண்டு நன்றியறிதல்மனித இனம் விலங்கினும் மேன்மையுடைத்து! என்ன செய்யலாம்?அடுத்தவரைத் துன்புறுத்தல்மானுட அடையாளமாய்மாறி விட்ட காலத்தில்துன்பம் கொடுக்காதிருக்கலாம்அல்லதுஅதைக் குறைக்கலாம்அல்லதுஅன்பு பூண்டொழுகலாம்ஆனால்ஒருபோதும்நான் செய்யும் இனிய செயல்உன் தோள்மீதுபாரமாய் ஏறி விடக் கூடாதுஏறினால்,அதுநிபந்தனையற்ற என்அன்பின்பிரியத்தின்காதலின்வீழ்ச்சியாகும்எனக் காண்பாய்!
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 04, 2025 23:22

இன்று என்ன கிழமை? என்ன மாதம்?

அது எப்படி எல்லா நாளும்ஒரே நாளைப் போல் இருக்கிறது? ஐந்து மணிக்கு எழுகிறேன்காலைக்கடன் முடித்துஇருபது நிமிட தியானம்பூனைகளுக்கு உணவிடுகிறேன்சில கவிதைகளைப் படிக்கிறேன்ஓரிரு கவிதைகள் எழுதுகிறேன்ஏழரை மணிஅதே சாலைகளில் நடைஅதே மனிதர்கள்ஏர்ப்பாடில் அதே இசை ஏழே முக்கால்சங்கீதா உணவகம்மீடியம் காஃபிகடைசி வாயில் இனிப்பு எட்டு மணிஅவள் அழைக்கிறாள்நடந்தபடி ஒன்பது வரை பேசுகிறேன் வீடு திரும்பிபூனைகளின் மலம் அள்ளிபைகளில் போட்டுவெளியே வைக்கிறேன் சின்ன வெங்காயம் நறுக்கிபழைய சோறில் உப்பிட்டுநீராகாரம் அருந்துகிறேன் ஒன்பதரைமனையாள் எழுந்து வருகிறாள்வீடு பெருக்கி சுத்தம் செய்கிறாள்அவளுக்கும் நீராகாரம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 04, 2025 07:44

அடையாளம்

இலக்கிய நிகழ்ச்சிக்கானஓர் அழைப்பிதழைக் கண்டேன்பதினெட்டு பெயர்களுக்கு முன்னால்எழுத்தாளர் எனவும்நான்கு பெயர்களுக்கு முன்னால்கவிஞர் எனவும்போட்டிருந்ததுஎழுத்தாளரை எழுத்தாளர் என்று போடாமல்நடிகர் என்றோ டாக்டர் என்றோவாபோட முடியும்?எழுத்தாளர் எழுத்தாளர்கவிஞர் கவிஞர்இதில் என்ன அக்கப்போர்? எங்கள் வீட்டில் ஒரு நாய் இருந்ததுஇப்படி எழுதியது தெரிந்தாலேஅது தற்கொலை பண்ணிக் கொள்ளும்எங்கள் வீட்டில் ஸோரோ இருந்ததுஎன்றுதான் சொல்ல வேண்டும்எழுத வேண்டும்ஸோரோவின் தர்க்கம் என்னவென்றுயூகிக்க முடிகிறதுநான் நாய்தான்ஆனால்எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறதே? சரி, பெயரைப் போட்டுத்தானேஎழுத்தாளர் என்று போடுகிறோம்?இல்லை,ஸோரோ ஒப்புக்கொள்ளாதுநாய் ஸோரோ என்று சொன்னாலேபாய்ந்து குதறி விடும்நாய் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 04, 2025 04:37

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.