அது எப்படி எல்லா நாளும்ஒரே நாளைப் போல் இருக்கிறது? ஐந்து மணிக்கு எழுகிறேன்காலைக்கடன் முடித்துஇருபது நிமிட தியானம்பூனைகளுக்கு உணவிடுகிறேன்சில கவிதைகளைப் படிக்கிறேன்ஓரிரு கவிதைகள் எழுதுகிறேன்ஏழரை மணிஅதே சாலைகளில் நடைஅதே மனிதர்கள்ஏர்ப்பாடில் அதே இசை ஏழே முக்கால்சங்கீதா உணவகம்மீடியம் காஃபிகடைசி வாயில் இனிப்பு எட்டு மணிஅவள் அழைக்கிறாள்நடந்தபடி ஒன்பது வரை பேசுகிறேன் வீடு திரும்பிபூனைகளின் மலம் அள்ளிபைகளில் போட்டுவெளியே வைக்கிறேன் சின்ன வெங்காயம் நறுக்கிபழைய சோறில் உப்பிட்டுநீராகாரம் அருந்துகிறேன் ஒன்பதரைமனையாள் எழுந்து வருகிறாள்வீடு பெருக்கி சுத்தம் செய்கிறாள்அவளுக்கும் நீராகாரம் ... 
Read more
  
        Published on August 04, 2025 07:44